Published:Updated:

தந்தையின் ஆசை; இறுதிச் சடங்கிலிருந்து போட்டிக்குக் கிளம்பிய 10 வயது மகன்; பதக்கம் வென்று அசத்தல்!

சௌர்யஜீத் ( National games )

அந்தப் பதக்கத்திற்கும் புன்னகைக்கும் பின் சௌர்யஜீத் அனுபவித்து கொண்டிருந்தது பெரும் வலி. செப்டம்பர் 30ம் தேதி தேசிய விளையாட்டு தொடரில் சௌர்யஜீத் விளையாடி கொண்டிருந்தபோது அவரின் தந்தை இறந்தார்.

தந்தையின் ஆசை; இறுதிச் சடங்கிலிருந்து போட்டிக்குக் கிளம்பிய 10 வயது மகன்; பதக்கம் வென்று அசத்தல்!

அந்தப் பதக்கத்திற்கும் புன்னகைக்கும் பின் சௌர்யஜீத் அனுபவித்து கொண்டிருந்தது பெரும் வலி. செப்டம்பர் 30ம் தேதி தேசிய விளையாட்டு தொடரில் சௌர்யஜீத் விளையாடி கொண்டிருந்தபோது அவரின் தந்தை இறந்தார்.

Published:Updated:
சௌர்யஜீத் ( National games )
மல்லர் கம்பம் விளையாட்டின் தனிநபர் போல் (Individual Pole) பிரிவில் பங்கேற்றார் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சௌர்யஜீத். இந்தாண்டு மல்லர் கம்பம் விளையாட்டில் பங்கேற்ற மிக இளைய வீரர் என்ற பெருமையுடன் தான் போட்டியில் களம் இறங்கினார் சௌர்யஜீத். மைதானத்தில் இருந்த அனைவரின் கண்களும் 10 வயது சிறுவன்மீது தான் இருந்தது. முகத்தில் பெரும் புன்னகையுடன் மக்களின் ஆரவாரத்திற்கு நடுவில் சிறப்பாகச் செயல்பட்டு வெண்கல பதக்கத்தை வென்றார் சௌர்யஜீத்!
சௌர்யஜீத்
சௌர்யஜீத்
National Games

அந்த பதக்கத்திற்கும் புன்னகைக்கும் பின் சௌர்யஜீத் அனுபவித்து கொண்டிருந்தது பெரும் வலி. மல்லர் கம்பம் என்ற விளையாட்டை சௌர்யஜீத்திற்கு அறிமுகப்படுத்திய அவரது தந்தை ரஞ்சித் குமார். ஆறு ஆண்டுகளுக்கு முன் மல்லர் கம்பம் ஒரு நல்ல விளையாட்டு என்று சொன்னபோதே பயிற்சியைத் தொடங்கிவிட்டார். தொடக்கத்தில் விளையாடுவதற்குக் கடுமையாக இருந்தாலும் மல்லர் கம்பம் விளையாட்டின்மீது ஆசை வந்துவிட்டது. செப்டம்பர் 30ம் தேதி தேசிய விளையாட்டுத் தொடரில் சௌர்யஜீத் விளையாடி கொண்டிருந்தபோது தந்தை மறைவுற்றார். சௌர்யஜீத் அதுவரை ஒரு சுற்றில் மட்டும் விளையாடி வெற்றி பெற்றிருந்தார். நடுவில் கிடைத்த ஒரே ஓய்வு நாள் அன்று வதோதராவில் உள்ள தன் வீட்டுக்குச் சென்று தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்றார். அதன்பின் மீண்டும் வந்து அடுத்த சுற்றுக்கான போட்டியில் கலந்துகொள்ள சௌர்யஜீத்திற்கு மனம் இல்லை. பயிற்சியாளர் கேட்டுக்கொண்ட போதும் அவர் மனம் மாறவில்லை. ஆனால் சௌர்யஜீத்தின் அம்மா அவனிடம் தந்தையின் ஆசை நிறைவேற்றுவது பற்றி புரியவைத்தார். அதில் மனம் மாறிய சௌர்யஜீத் தந்தையின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று இறுதிச் சடங்கு முடிந்த அதே நாளில் போட்டிகளில் கலந்துகொள்ள கிளம்பினார்.    

அங்கு சென்று இவ்வளவு கஷ்டத்திலும் தன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெண்கல பதக்கம் வென்றது என்பது நிச்சயம் எளிமையான காரியம் அல்ல. அதுவும் 10 வயதில் பதக்கம் வென்று இந்தாண்டு தேசிய விளையாட்டு தொடரில் மிக இளம்வயதில் பதக்கம் வென்ற வீரர் என்ற பெருமையை பெறுவதெல்லாம் மிகப்பெரிய சாதனை!

"மல்லர் கம்பம் தற்போது பிரபலமான விளையாட்டாக மாறி வருகிறது. சௌர்யஜீத் போன்ற திறமையான வீரர்கள்தான் இந்த விளையாட்டை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லவேண்டும்"
பயிற்சியாளர் ஜீத் சப்கல்
சௌர்யஜீத்
சௌர்யஜீத்
National Games

ஏற்கெனவே உலக மல்லர் கம்பம் சாம்பியன்ஷிப்பில் இரண்டு வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளார். தேசிய விளையாட்டு போட்டிகளிலும் உலக சாம்பியன்ஷிப்பிலும் தங்கம் வெல்ல வேண்டும் என்பதே சௌர்யஜீத்தின் கனவாக உள்ளது!

"இவ்வளவு மக்களின் பாராட்டுதளுக்கு முன் விளையாடியது பெருமையாக உள்ளது. தேசிய போட்டிகளில் நான் தங்கம் வெல்ல வேண்டும் என்பதே தந்தையின் கனவு. அதை நிச்சயம் நிறைவேற்றுவேன்" - சௌர்யஜீத்