Published:Updated:

வெற்றியை மீண்டும் எட்டி உதைத்த தென்னாப்பிரிக்கா! #NZvSA

கார்த்தி

அதிர்ஷ்டம் இருக்கும் அணிகளுக்கே வாய்ப்புகள் அவ்வப்போதுதான் அமையும். இப்படிப்பட்ட சூழலில் தென்னாப்பிரிக்க அணி, நேற்று செய்ததெல்லாம் அக்கிரமத்தின் உச்சம்.

1
#NZvSA

இதற்கு முன்பு

டி20 போட்டிகளின் வருகையால் பலருக்கு சுவாரஸ்யமற்றுப்போன ஒரு நாள் போட்டிகளுக்கு ஆக்ஸிஜன் தரும் போட்டிகளுள் ஒன்றாக நேற்றைய போட்டியைக் குறிப்பிடலாம்.

போட்டி எண் : 25
நியூசிலாந்து டாஸ் வென்று , பந்துவீச்சை தேர்வு செய்தது
இடம் : பிர்மிங்ஹம்
2011: காலிறுதி - நியுஸிலாந்து 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
2015 : அரையிறுதி - நியுஸிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
2

நேற்றைய போட்டியின் முதல் இன்னிங்ஸில் 241 ரன்கள் எடுத்தது தென் ஆப்பிரிக்கா. அதுவும் வேன் டர் டஸ்ஸனின் இறுதிகட்ட 67 ரன்களால் நிகழ்ந்தது. ஆனால், இந்த ஸ்கோர் எப்படியும் போதாது என்பதை அப்போதே உணர்ந்திருப்பார் டஸ்ஸன்.

இது 300 ரன்களுக்கான விக்கெட் இல்லை. ஆனால், 250-260 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். நாங்கள் 241 ரன்கள் எடுத்திருக்கிறோம். அதை வைத்து போராட முயற்சிப்போம்.
வேன் டர் டஸ்ஸன்

2015-ம் ஆண்டுக்குப் பின், ஒரு இன்னிங்ஸ் முழுமையாக விளையாடி அடிக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர்களில் இதுவும் ஒன்று.

3
Tahir ( AP )

37.1 தாஹிர் பந்துவீசுகிறார். வில்லியம்சன் பேட்டிங்

கேட்ச் என கதறுகிறார் தாஹிர். எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என தாவுகிறார் மில்லர். அவருக்கு சற்று முன்பு விழுகிறது பந்து. மில்லரின் அசாத்திய முயற்சியைப் பாராட்டலாம் தான் . ஆனால், அது வில்லியம்சனின் விக்கெட்.

4
Miller

37.4 தாஹிர் பந்துவீசுகிறார்... கிராந்தோம் பேட்டிங்

மீண்டும் ஒரு கடுமையான வாய்ப்பு. ஆனால், catches win matches என்பதுதானே கிரிக்கெட். தாஹிர் வீசிய கூக்ளியை , கிராந்தோம் பேக் ஃபூட்டில் ஷார்ட் மிட் விக்கெட் திசையில் அடிக்கிறார். மில்லர் அட்டகாசமாக டைவ் அடிக்கிறார். ஆனாலும், பந்து அவருக்கு அகப்படவில்லை. இந்த இரண்டு விக்கெட்டும் எவ்வளவு முக்கியத்துவமானது என்பது தென் ஆப்பிரிக்கர்களுக்கு நன்றாகவே தெரியும்.

5
Williamson ( AP )

37.6 தாஹிர் பந்துவீசுகிறார். வில்லியம்சன் பேட்டிங்

நெருக்கடியில் வில்லியம்சன் தவறு செய்கிறார். பந்து பேட்டில் பட்டு , அதை டி காக் பிடிக்கிறார். தாஹிர் மட்டும் அவுட் கேட்க, மற்ற வீரர்கள் So what என்பது போல் நின்றார்கள். வில்லியம்சன் அமைதியாக நின்றுவிட்டார். பேட்டில் படாமலே அவுட் என நினைத்து பெவிலியன் திரும்பும் கோலிகளுக்கு மத்தியில் வில்லியம்சன் செய்தது சரி.

இந்த ஓவரின் இறுதியில் வில்லியம்சன் 76* (108), கிராந்தோம் 23*( 16) . ஆட்ட முடிவில் கிராந்தோம் 60, வில்லியம்சன் 106*.

தாஹிர் 10-0-33-0
இந்தப் போட்டியில் தாஹிர் வீசிய டாட் பால்களின் எண்ணிக்கை : 33
6

40.1 ரபாடா பந்துவீசுகிறார்... வில்லியம்சன் பேட்டிங்

ரபாடா ஷார்ட் பாலில் கவனம் செலுத்துகிறார். வில்லியம்சன் மிஸ் செய்கிறார். ப்ரஷர் நியூசிலாந்தின் மேல். வில்லியம்சன் சிங்கிளுக்குத் தயங்க, கிராந்தோம் 'அட தென் ஆப்பிரிக்காதான' என ஓட ஆரம்பிக்கிறார். பந்தைப் பிடித்த ரபாடா, வில்லியம்சன் ஓடும் நான் - ஸ்ட்ரைக்கர் எண்டு நோக்கி வீசுகிறார். பந்து மிஸ் ஆகிறது. அங்கு எதற்காக மில்லர் நின்று கொண்டிருந்தார் என்றும் தெரியவில்லை. அவரும் பந்தை மிஸ் செய்கிறார். வில்லியம்சன் அப்போது 77 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். வாய்ப்புகள் தென்னாப்பிரிக்காவிடம் பிச்சை எடுக்கிறது என்றார் வர்ணனையாளர்.

7
Another catch deop by miller and Rabada

45.4 இங்கிடி பந்துவீசுகிறார். கிராந்தோம் பேட்டிங்

மேலே இருக்கும் படத்தைப் பார்த்ததும், உங்களுக்கு என்ன தோன்றுகிறது ? மில்லர் மிஸ் செய்த பந்தை ரபாடா பிடிக்க முயற்சிக்கிறார் என்று தோன்றலாம். ஆனால், அவ்வளவு சிறப்பாய் உலகக் கோப்பையில் ஆட, தென்னாப்பிரிக்கா என்ன மற்ற அணிகளா ?

டீப் விக்கெட் திசை நோக்கி வரும் பந்தை கேட்ச் செய்ய முயற்சி செய்கிறார் மில்லர். வழக்கம் போல மிஸ் ஆகிறது. அடுத்து ரபாடாவும் அந்த பந்தை மிஸ் செய்தது கொடுமையிலும் கொடுமை! பந்து பௌண்டரி லைனத் தொட்டது. நியுசிலாந்து வெற்றிக்கோட்டைத் தொட்டது இப்படித்தான்!

8
Kane Williamson ( AP )

48.2 பெலுக்வாயோ பந்துவீசுகிறார். வில்லியம்சன் பேட்டிங்

இந்தத் தொடரி்ன் வின்னிங் சிக்ஸ், வின்னிங் சதம் எல்லாமே இதுதான். அப்படியொரு நேர்த்தியான பேட்டிங்.

ஆட்டத்தின் மூன்றாவது ஓவர், முதல் பந்து. மன்ரோவை ஆட்டமிழக்கச் செய்கிறார் ரபாடா. அப்போது களமிறங்கிய கேன் வில்லியன்சன் ஆடியது ஒரு Perfect Captain's Knock! அடுத்தடுத்த இரண்டு ஓவர்களில் ரபாடாவின் 140+ பந்துகளை பொறுமையாக எதிர்கொண்டார் வில்லியம்சன்.

நெருக்கடியான ஒரு போட்டியில் உங்கள் டீமில் இருக்க வேண்டிய பிளேயர் கேன் வில்லியம்சன். அற்புதமான வீரர்
ஹர்ஷா போக்ளே
9
வில்லியம்சன் ( AP )

#NZvSA உலகக் கோப்பையில் 6-2

மன்ரோ கொடுத்த ஆரம்ப அதிர்ச்சியோ, ராஸ் டெய்லர், லாதம்மின் சிங்கிள் டிஜிட் அவுட்களோ தென்னாப்பிரிக்காவுக்கு கொஞ்சமும் உதவவில்லை. கப்டில் ஹிட் விக்கெட் ஆனதும் அப்படித்தான்.

ஆறு போட்டிகளில் ஒன்றில் வென்றிருக்கிறது தென்னாப்ரிக்கா. 1992–ல் தென்னாப்பிரிக்காவின் வெற்றியை மழை விதியால் வென்றது. இங்கிலாந்துக்கு எதிரான அந்த செமி அவ்வளவு ஃபேமஸ். 13 பந்துகளில் 22 ரன்கள் என இருந்த டார்கெட் சட்டென 1 பந்தில் 22 ரன்கள் என்றானது. 1999 உலகக் கோப்பையை முடித்து வைத்தார் டொனால்டு. அந்த ரன் அவுட் அவ்வளவு பிரசித்தி.

ஓர் ஓவர் முழுக்க ஒரு பவுலர் எவ்வளவு முயற்சி செய்தாலும், அணியின் ஈடுபாடு இல்லையென்றால், என்ன ஆகும் என்பதற்கு தாஹிரின் அந்த இறுதி ஓவர் சாட்சி. மில்லர், டி காக், டுப்ளெஸ்ஸி, என அனைவருமே தாஹிருக்கு எதிராகத்தான் இந்தப்போட்டியில் விளையாடினர்

இந்தப் போட்டியில் டேவிட் மில்லர் செய்ததை வரலாறு அப்படித்தான் நினைவுகூரும்.

பின் செல்ல