Published:Updated:

`கடினமான நேரங்களில் அவர்களுடன் இருக்க வேண்டும்'- வீராங்கனைகளுக்கு ஆதரவாக சானியா மிர்சா ட்வீட்

சானியா மிர்சா
News
சானியா மிர்சா

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சானியா மிர்சா ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

Published:Updated:

`கடினமான நேரங்களில் அவர்களுடன் இருக்க வேண்டும்'- வீராங்கனைகளுக்கு ஆதரவாக சானியா மிர்சா ட்வீட்

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சானியா மிர்சா ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

சானியா மிர்சா
News
சானியா மிர்சா
பாஜக எம்பியும் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், உள்ளிட்ட பலர்  பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜக எம்பியும் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், உள்ளிட்ட பலர்  பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க  விளையாட்டுத்துறை அமைச்சகம் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 6 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்திருந்தது. 

மல்யுத்த வீராங்கனைகள்
மல்யுத்த வீராங்கனைகள்

இந்தக் குழு விசாரணையை நடத்தி அறிக்கையை வழங்கியது. இருப்பினும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இந்நிலையில்  வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மீண்டும் ஜந்தர்மந்தர் பகுதியில்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

`மல்யுத்த வீரர்கள் தெருக்களில் போராட்டம் நடத்துவது ஒழுக்கமின்மைக்குச் சமம்' என்று ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷா செய்தியாளர்களின் சந்திப்பில் கூறியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனிடையே இந்தப் போராடத்திற்கு ஆதரவாக  ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது டென்னிஸ் வீராங்கனை  சானியா மிர்சாவும் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் தொடர்பாக ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், “ ஒரு விளையாட்டு வீரராகவும், பெண்ணாகவும் இதுபோன்ற நிகழ்வுகளைப்  பார்ப்பதற்கு கடினமாக உள்ளது.  இவர்கள் அனைவரும் நம் நாட்டுக்காக பெருமையைச் சேர்த்த வீரர்கள். அவர்கள் வெற்றியை நாம் கொண்டாடியிருக்கிறோம். அதனால் இந்த கடினமான நேரங்களில் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். உண்மை எதுவாக இருந்தாலும் அதற்கு நீதி கிடைக்க வேண்டும்” என்று பதிவிட்டிருக்கிறார்.