Published:Updated:

`அவர் மட்டும்தான் அதைக் கண்டுபிடித்தார்!’ - சென்னை ஹோட்டல் ஊழியரைத் தேடும் சச்சின்

நான் உங்கள் ரசிகன். உங்கள் பேட்டிங் ஸ்டைலை பிடிக்கும். நீங்கள் எப்போதும் பேட்டிங் பிடிக்கும்போது கையில் உள்ள எல்போ கார்டு சிரமத்தை தருகிறது. அதை ரீ டிசைன் செய்தால் நன்றாக இருக்கும்

சச்சின்
சச்சின்

சென்னையில் நாளை இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே ஒருநாள் போட்டி நடக்கவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் சென்னை வந்துள்ளனர். நீண்ட நாள்களுக்குப் பிறகு சென்னையில் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளதால் ரசிகர்கள் அதற்கு தயாராகி வருகின்றனர். இதற்கிடையே, கிரிக்கெட் ஜாம்பவான் சென்னை டெஸ்ட் தொடரின்போது தனக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்து நெட்டிசன்களிடம் உதவி ஒன்றையும் கேட்டுள்ளார்.

Sachin
Sachin

``சென்னை டெஸ்ட் தொடரின்போது தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தங்கியிருந்தேன். அப்போது ஹோட்டலில் காபி ஆர்டர் செய்திருந்தேன். காபியை என் ரூமுக்கு கொண்டுவந்த ஹோட்டல் ஊழியர், சார் நான் உங்களிடம் கிரிக்கெட் தொடர்பாக ஆலோசிக்க வேண்டும் எனக் கேட்டார். நானும் ஓகே சொல்லுங்கள் என்று சொன்னேன். ``நான் உங்கள் ரசிகன். உங்கள் பேட்டிங் ஸ்டைலை பிடிக்கும். நீங்கள் எப்போதும் பேட்டிங் பிடிக்கும்போது கையில் உள்ள எல்போ கார்டு சிரமத்தை தருகிறது. அதை ரீ டிசைன் செய்தால் நன்றாக இருக்கும்" என்றார் அந்த ஊழியர்.

`அவர் மட்டும்தான் அதைக் கண்டுபிடித்தார்!’ - சென்னை ஹோட்டல் ஊழியரைத் தேடும் சச்சின்

இந்த உலகத்தில் யாரும் எனக்கு அதை சொல்லவில்லை. அவர்தான் சொன்னார். அதன்பிறகு சிரமத்தை புரிந்துகொண்டு எல்போ கார்டை ரீ டிசைன் செய்தேன். எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன. சென்னை டெஸ்ட் தொடரின் போது Taj Coromandel ஊழியர் என்னுடைய Elbow Guard பற்றி கூறிய ஆலோசனைக்குபின் அதன் வடிவத்தை மாற்றினேன். அவரை சந்திக்க ஆசைப்படுகிறேன். கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும்" என வீடியோவாகவும், தமிழில் டுவிட் செய்தும் சச்சின் கோரிக்கை விடுத்துள்ளார்.