Published:Updated:

என்னடா.. விக்கெட் எடுத்துட்டு இப்படி பண்றீங்க!- களத்தில் `மேஜிக் மேன்' ஆக மாறிய பௌலர் ஷம்சி #video

ஷம்சி
ஷம்சி

நேற்று நடந்த போட்டியில் பார்ல் ராக்ஸ் அணிக்காகக் களமிறங்கிய ஷம்சி டர்பன் ஹீட் அணிக்கு எதிராகப் பந்துவீசினார்.

தென்னாப்பிரிக்கா அணியின் பௌலர் தப்ரைஸ் ஷம்சி. அந்த அணியின் `சைனாமேன்’ என அழைக்கப்படும் மிஸ்டரி ஸ்பின்னர். இவர்தான் தற்போது `மேஜிக் மேன்' ஆக மாறியுள்ளார். நம்மூரில் நடைபெறும் ஐபிஎல் தொடர்போல் தென்னாப்பிரிக்காவில் Mzansi சூப்பர் லீக் நடைபெற்றுவருகிறது. நேற்று நடந்த போட்டியில் பார்ல் ராக்ஸ் அணிக்காகக் களமிறங்கிய ஷம்சி டர்பன் ஹீட் அணிக்கு எதிராகப் பந்துவீசினார்.

அப்போது பேட்ஸ்மேன் விஹாப் லுப்பே விக்கெட்டை எடுத்த ஷம்சி அதைக் கொண்டாட களத்தில் மேஜிக் நிகழ்த்திக் காட்டினார். விக்கெட் எடுத்ததும் தனது சட்டைப் பையிலிருந்து ஒரு சிவப்பு கைக்குட்டையை வெளியே இழுத்து தனது மேஜிக் மூலம் அதை ஒரு குச்சியாக மாற்றினார்.

ஷம்சி
ஷம்சி

இவரது மேஜிக்கைப் பார்த்த ரசிகர்கள் மைதானத்தில் ஆரவாரம் செய்தனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 29 வயதாகும் தப்ரைஸ் ஷம்சி 2009-ம் ஆண்டு தென்னாப்பிரிக்க முதல் தர தொடரில் கெளடங் அணிக்காக விளையாடி தன் கிரிக்கெட் பயணத்துக்குப் பிள்ளையார் சுழி போட்டார். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு அவரால் சிறப்பாகப் பந்து வீச முடியவில்லை. பிறகு, டைட்டன்ஸ் அணிக்கு விளையாடிய அவருக்கு 2013-ல் நடந்த மூன்று நாள் கோப்பை (THREE DAY CUP) கைகொடுத்தது. அந்தத் தொடரில் 47 விக்கெட்டுகள் வீழ்த்தி, அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் மூன்றாம் இடம் பிடித்தார். 2015-ம் ஆண்டு அவருக்குத் திருப்புமுனை தந்த ஆண்டு எனக் கூறலாம்.

கரீபியன் ப்ரீமியர் லீக்கில் செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு விளையாடிய இவர், 11 விக்கெட்டுகள் கைப்பற்றி அந்த சீஸனின் அதிக விக்கெட் வீழ்த்தியவராகத் திகழ்ந்தார். அவரின் அந்தச் சிறப்பான செயல்பாடு, ஐ.பி.எல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதில் கவனம் பெற, இவருக்கு தென்னாப்பிரிக்க அணியின் கதவும் திறந்தது. நடந்த முடிந்த உலகக்கோப்பையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இளம்வீரர் ஷம்சி தான். தற்போது தேசிய அணியில் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறார்.

`ஒரே ஓவரில் 5 விக்கெட்; லிஸ்ட் ஏ-வில் 3வது ஹாட்ரிக்'- கலக்கிய தமிழகத்தின் மருமகன்!
அடுத்த கட்டுரைக்கு