Published:Updated:

டிபிகல் ரோஹித் சதம்… ஆஃப் கட்டர் வில்லன்கள்… அரையிறுதியில் இந்தியா! #CWC19 #BANvIND

Indian team leaves the field after beating Bangladesh in world cup match in Birmingham.
Indian team leaves the field after beating Bangladesh in world cup match in Birmingham. ( AP )

ஸ்லோ பிட்ச். வேகத்துக்கு ஒத்துழைக்காது. டர்ன் இருக்கும் என்பது எதிர்பார்த்ததே. பிட்ச்சின் தன்மையைப் புரிந்து வேகத்தைக் குறைத்து, பேக் ஆஃப் தி லென்த்தில் பிட்ச் செய்து, கட்டர்களை வீசிய பெளலர்கள் பிழைத்துக்கொண்டார்கள்

ரோஹித் சர்மா, ராகுல், பன்ட், தோனி என ஒரு பட்டாளமே பேட்டிங்கில் கைகொடுக்க, பும்ரா, பாண்டியா பெளலிங்கில் அசத்த, வங்தேசத்தை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா. வங்கதேசம் உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது.

இரு அணிகளும் அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்யும் நோக்கத்தோடு பர்மிங்ஹாமில் களமிறங்கியது. இங்கிலாந்திடம் வெற்றி வாய்ப்பை இழந்த அதே பிட்ச்சில் போட்டி என்பதால், அணியில் சில மாற்றங்களைச் செய்திருந்தார் இந்தியக் கேப்டன் கோலி. ஃபார்மில் இல்லாத கேதர் ஜதாவுக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக், குல்தீபுக்குப் பதிலாக புவனேஷ்வர் குமார் பிளேயிங் லெவனில் இடம்பிடித்தனர். வங்தேசம் மெகிதி ஹசனுக்குப் பதிலாக ருபேல் ஹுசைனை டிக் செய்திருந்தது. பிட்ச் கண்டிஷனைவிட, ஸ்கொயரில் ஒரு பக்கம் பவுண்டரி எல்லையின் நீளம் குறைவாக இருப்பதைப் புரிந்து இரு அணிகளும் அணியைத் தேர்வுசெய்திருந்தன.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பவர்பிளேவில் ரன் வரவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. வங்கதேசத்திடம் அந்தக் குறையை உடனடியாக நிவர்த்தி செய்தனர். இன்னொரு விஷயம், ராகுலுக்காக தன் இயல்பான ஆட்டத்தை விட்டுக்கொடுக்காமல், ரோஹித் ஆரம்பத்தில் இருந்தே அடித்து ஆடினார். மஸ்ரஃபே மோர்டஸா வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே சிக்ஸர் பறந்ததே அதற்கு சான்று.

India's Rohit Sharma celebrates after scoring a century during the Cricket World Cup match between India and Bangladesh.
India's Rohit Sharma celebrates after scoring a century during the Cricket World Cup match between India and Bangladesh.
AP

வழக்கம்போல முஸ்டபிசுர் ரஹ்மான் பந்தில் புல் ஷாட் அடித்தார் ரோஹித். டீப் ஸ்கொயர் லெக்கில் இருந்து ஓடிவந்த தமீம் இக்பால், கையில் வந்து விழுந்த பந்தை கீழே நழுவவிட்டார். அதற்கு வங்தேசம் பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது. அப்போது ரோஹித் 9 ரன்களே எடுத்திருந்தார்.

எந்தவொரு முக்கியமான பேட்ஸ்மேனின் கேட்ச்சை டிராப் செய்வதும், மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். மீண்டும் ஒருமுறை ரோஹித் அதேபோல ஒரு ஷாட் அடிக்க வேண்டும் என வேண்டிக்கொண்டேன். என்ன செய்வது. கிரிக்கெட் களத்தில் இது இயல்பு. நானும் பல கேட்ச்களை பிடிக்காமல் விட்டிருக்கிறேன்
வங்கதேசப் பயிற்சியாளர் ஸ்டீவ் ரோட்ஸ்

வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி மோசமான பந்துகளை பறக்கவிட்டார் ரோஹித். பவர்பிளே முடிவில் இந்தியாவின் ஸ்கோர் 69/0. எதிர்முனையில் இருந்த ராகுல் தடுமாறிக்கொண்டிருந்தபோது, ரோஹித் ஃபார்மின் உச்சத்தில் இருந்தார். அப்போது ஒரு ஷாட் அடித்தார். கிளாசிக் என்பார்களே அதற்கு நல் உதாரணம் அது. மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் ஒரு மாயை இருக்கிறது அந்த ஷாட்டில்… முஸ்டபிசுர் ரஹ்மான் பந்தில் காலை நகர்த்தாமல் இருந்த இடத்தில் இருந்தே ஸ்ட்ரெய்ட்டில் லாஃப்ட் செய்வார். பந்து, சைட் ஸ்கிரீனில் வந்து விழும். பார்க்கவே அழகாக இருக்கும்.

India's Rohit Sharma raises his bat and helmet to celebrate scoring a century.
India's Rohit Sharma raises his bat and helmet to celebrate scoring a century.
AP

ரோஹித்தின் ஷாட் ஒவ்வொருமுறை பவுண்டரியைக் கிளியர் செய்யும்போதும், தமீம் விட்ட அந்த கேட்ச் டிராப் நினைவில் வந்துபோகும் என்றார் ஹர்ஷா போக்ளே. வாய்ப்பு கிடைத்த ஒரு பேட்ஸ்மேன் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தார் ரோஹித். ஆம், இந்த உலகக் கோப்பையின் நான்காவது சதத்தைப் பதிவு செய்தார்.

ரோஹித் – ராகுல் ஜோடியைப் பிரிக்க வங்கதேச கேப்டன் மோர்டஸா, பெளலர்களை மாற்றிப் பார்த்தார். ஆனாலும், விக்கெட்டை பிரிக்க முடியவில்லை. இந்த உலகக் கோப்பையில் முதன்முறையாக அதிக ரன்கள் குவித்த ஓப்பனிங் ஜோடி என பெயர் பெற்றது ராகுல் – ரோகித் ஜோடி. இதற்குமுன், ஜேசன் ராய் – பேர்ஸ்டோ ஜோடி 160 ரன்கள் குவித்ததே அதிகமாக இருந்தது. அதேபோல, 25 ஓவர்கள் வரை விக்கெட் இழக்காத அணி என்ற பெருமையும் இந்தியாவுக்குக் கிடைத்தது.

India's K.L. Rahul celebrates after scoring 50 runs
India's K.L. Rahul celebrates after scoring 50 runs
AP

சதம் அடித்ததும் ரோஹித் (104) அவுட்டாக, ருபெல் ஹுசைன் பந்தில் கட் ஷாட் ஆட முயன்று விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து 77 ரன்களில் வெளியேறினார் கே.எல்.ராகுல். முதல் விக்கெட் இழந்தபோது இந்தியா 180 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து வந்த கோலி 26 ரன்களிலும், பாண்டியா டக் அவுட்டிலும் வெளியேறினார். ரோஹித் இருந்தபோது ஸ்கோர் 350 - 380 வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. கோலி, பாண்டியா அவுட்டானதும் அந்த இலக்கு படிப்படியாக குறைந்தது.

India's Rishabh Pant bats during the Cricket World Cup match between India and Bangladesh.
India's Rishabh Pant bats during the Cricket World Cup match between India and Bangladesh.
AP

முதல் போட்டியில் ஒருவித பதற்றத்துடன் இருந்த பன்ட், இரண்டாவது போட்டியில் தெளிவடைந்துவிட்டார். ஆனாலும், ஷகிப் அல் ஹசன் பந்தில் ஸ்லாக் ஸ்வீப் ஆட முயன்று கேட்சாகி, 48 ரன்களில் அவுட்டானார். தோனி கடைசி நேரத்தில் 33 பந்துகளில் 35 ரன்கள் அடிக்க, இந்தியா 314 ரன்கள் எடுத்தது.

பொதுவாக, 300+ ரன்களை சேஸ் செய்யும்போது ஓப்பனிங் எப்படி இருக்க வேண்டுமோ, அப்படி இருக்கவில்லை வங்தேச ஓப்பனர்களின் ஆட்டம். விக்கெட் விழக் கூடாது என்பதில் கவனமாக இருந்ததால், பவர்பிளேவில் ரன்வரவில்லை. பவர்பிளே முடியும் நேரத்தில் தமீம் இக்பால் அவுட். செளமியா சர்கார் செட்டிலானதுபோல தெரிந்தது. ஆனால், பாண்டியா ஒரு ப்ரேக்த்ரூ கொடுத்தார். இத்தனைக்கும் அது பிரமாதமான பந்து கிடையாது. மோசமான ஷாட் செலக்ஷனால், கவரில் இருந்த விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து செளமியா சர்கார் அவுட்டானார். ஒட்டுமொத்த சுமையும் ஷகிப் தலையில்.

Bangladesh's Shakib Al Hasan, right, bats during the Cricket World Cup match between Bangladesh and India.
Bangladesh's Shakib Al Hasan, right, bats during the Cricket World Cup match between Bangladesh and India.
AP

இந்த உலகக் கோப்பையில் இரண்டு சதம், நான்கு அரைசதம், 542 ரன்கள், 11 விக்கெட்டுகள் என மொரட்டு ஃபார்மில் இருக்கிறார் ஷகிப். அவர், இந்த உலகக் கோப்பையைப் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்ததன் ரிசல்ட் இது. ஷகிப் ஆட்டத்தில் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், பிட்வீன் தி விக்கெட்டில் அவர் ஓடிய விதம். கோலி, தோனியைத்தான் நாம், விக்கெட்டுகளுக்கு இடையே நன்றாக ஓடுவார்கள் என்று நினைத்திருந்தோம். ஷகிப் அதை சத்தமில்லாமல் செய்துவருகிறார். இந்தப் போட்டியில் முஷ்ஃபிகுர், லிட்டன் தாஸ் உடன் இணைந்து அரைகுறையான வாய்ப்புகளையும் ரன்களாக மாற்றிக்கொண்டிருந்தார் ஷகிப். இதற்காக, வெயிட்டைக் குறைத்து ஃபிட்டாக இருக்கிறார். ஷகிப் அடித்த 64 ரன்களில் 28 சிங்கிள்கள், 12 இரண்டுகள்.

ஸ்லோ பிட்ச். வேகத்துக்கு ஒத்துழைக்காது. டர்ன் இருக்கும் என்பது எதிர்பார்த்ததே. பிட்ச்சின் தன்மையைப் புரிந்து வேகத்தைக் குறைத்து, பேக் ஆஃப் தி லென்த்தில் பிட்ச் செய்து, கட்டர்களை வீசிய பெளலர்கள் பிழைத்துக்கொண்டார்கள். வங்தேச தரப்பில் ஷகிப் பிட்ச்சின் தன்மையைப் புரிந்து பந்துவீசினார் எனில், இந்திய பெளலர்கள் எல்லோருமே பிட்ச்சை சரியாக ரீட் செய்திருந்தனர். குறிப்பாக, பும்ரா, பாண்டியா. இந்த இடத்தில் பாண்டியாவா என்ற கேள்வி எழலாம்.

Rubel Hossain bowled by Bumrah.
Rubel Hossain bowled by Bumrah.
AP

ஆம், செளமியா சர்கார் வேண்டுமானால் ஷாட் செலக்ஷனில் தவறு செய்திருக்கலாம். ஆனால், ஷகிப்பை அந்தப் பந்தில் திக்கு முக்காட வைத்தார் பாண்டியா. பேக் ஆஃப் தி லென்த்தில் 122 கி.மீ வேகத்தில், லெக் ஸ்டம்புக்கும், மிடில் ஸ்டம்புக்கும் இடையே பிட்ச்சாகி, வந்த ஆஃப் கட்டரை என்ன செய்வதென்று தெரியாமல், ஸ்டம்பை விட்டு விலகி பேட்டை நீட்டினார் ஷகிப். அது கவர் திசையில் இருந்த தினேஷ் கார்த்திக் வசம் சிக்கியது. ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய விக்கெட் இது.

Match winner Jasprit Bumrah.
Match winner Jasprit Bumrah.
AP

பாண்டியாவே ஆஃப் கட்டர்களில் அசத்துகிறார் எனில், பிரதான வேகப்பந்துவீச்சாளர்கள் விடுவார்களா… தமீம் இக்பால் விக்கெட்டை முகமது ஷமி எடுத்ததும், மொசடெக் ஹுசைன் விக்கெட்டை பும்ரா எடுத்ததும் ஆஃப் கட்டர்கள் மூலமே.

உலகக் கோப்பையில் ஸ்கிரிப்டில் இல்லாத ஒருவர் ஜொலிப்பது இயல்புதானே. அந்த வகையில், எட்டாவது இறங்கிய முகமது ஷைஃபுதின் 9 பவுண்டரிகள் அடித்தார். 38 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆனால், அவருடன் பார்ட்னர்ஷிப் அமைக்க இருந்த டெய்லெண்டர்களை எப்படி அனுப்ப வேண்டுமோ அப்படி அனுப்பி வைத்தார் பும்ரா.

Mohammad Saifuddin Plays a shot.
Mohammad Saifuddin Plays a shot.
AP

உலகின் மிகச் சிறந்த பெளலர், அதுவும் சொந்த அணியின் பேட்ஸ்மேனையே யார்க்கரில் பதம் பார்க்கும் ஒரு பெளலருக்கு எதிராக, மூன்று ஸ்டம்புகளும் தெரியும்படி நின்றிருந்தால் என்ன செய்வாரோ, அதைச் செய்தார் பும்ரா. தன் கோட்டா முடியும் கடைசி இரண்டு பந்துகளில் ருபேல் ஹுசைன், முஸ்டஃபிசுர் ரஹ்மானை போல்டாக்கினார்.

`ஒரு கிரிக்கெட் மேட்ச்சை இதைவிட அழகாக முடித்துவைக்க முடியாது’ என்றார் வர்ணனையில் இருந்த மார்க் நிகோலஸ். உண்மைதான்!
அடுத்த கட்டுரைக்கு