Published:Updated:

ரிஷப் பண்ட் விபத்து தொடர்பான வைரல் வீடியோ - எதிர்ப்பு தெரிவிக்கும் ரோஹித் சர்மா மனைவி ரித்திகா!

ரிஷப் பண்ட், ரோஹித் சர்மா மனைவி ரித்திகா
News
ரிஷப் பண்ட், ரோஹித் சர்மா மனைவி ரித்திகா

ரிஷப் பண்ட் விபத்து தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிரும் நபர்களுக்கு ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய நட்சத்திர வீரரான ரிஷப் பண்ட் நேற்று டெல்லியிலிருந்து உத்தரகாண்ட்  சென்றுகொண்டிருந்தபோது அவரது கார், சாலைத் தடுப்பின் மீது மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தொடர்பாக பிசிசிஐ அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தது.

அந்த அறிக்கையில், "ரிஷப் பண்டிற்கு நெற்றியில் இரண்டு வெட்டுகள், வலது முழங்கால், வலது மணிக்கட்டில் தசைநார் கிழிவு, கணுக்கால் மற்றும் முதுகில் சில சிராய்ப்பு காயங்களும் ஏற்பட்டுள்ளன. அவருக்குத் தேவையான சிகிக்சை மற்றும் இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து வெளிவரத் தேவையான அனைத்தையுமே பிசிசிஐ அமைப்பு கவனித்துக்கொள்ளும்" என்று தெரிவித்திருந்தது.  

ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா
ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா

இதனிடையே ரிஷப் பண்ட் விபத்து தொடர்பான பதிவுகள் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவை சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வந்தன. இதற்கு  கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா எதிர்ப்பு தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அப்பதிவில், "ஒருவர் அடிபட்டு படுகாயம் அடைந்திருக்கும்  நிலையில் அவரின் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிடுவது வெட்கப்படுவதற்குரிய செயல். இது போன்ற புகைப்படங்களைப் பார்க்கும்போது அவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் மனநிலை பெரிதும் பாதிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.