Published:Updated:

Rishabh Pant:தடுப்பின் மீது மோதிய கார்; விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்;அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ரிஷப் பண்ட்
News
ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட் சென்ற கார் சாலை தடுப்பின் மீது மோதி தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய நட்சத்திர வீரரான ரிஷப் பண்ட் சென்ற கார் விபத்துக்குள்ளாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ரிஷப் பண்ட் இன்று (டிசம்பர் 30) காலை உத்தரகாண்டில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த போது அவரது கார் சாலை தடுப்பின் மீது மோதி தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்த விபத்தில் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்துள்ளார். அங்கிருந்தவர்கள் உடனடியாக ரிஷப் பண்டை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் அபாயக்கட்டத்தை தாண்டிவிட்டார் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. விபத்தில் சிக்கிய காரும் காயமடைந்த பண்ட்டின் புகைப்படத்தையும் பகிர்ந்து ரசிகர்கள் தங்களின் வருத்தத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

Rishabh Pant:தடுப்பின் மீது மோதிய கார்; விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்;அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஹரிதுவார் ரூர்க்கி நகருக்கு அருகே ரிஷப் பண்ட் காரில் சென்றுகொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்ட நிலையில் ரிஷப் பண்டிற்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார்.

தற்போது நடைபெற்று முடிந்த வங்கதேசத்திற்கு உடனான சுற்றுப்பயணத்தை முடித்து பண்ட் சில நாட்களுக்கு முன்புதான் நாடு திரும்பியிருந்தார். ஜனவரி மாதம் இந்தியாவில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான T20 தொடரில் ரிஷப் பண்ட்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்த நிலையில் இப்படியொரு சம்பவம் நடந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.