Published:Updated:

`3 வயதில் ஆர்வம்; 16 வயதில் அணிக்குள் என்ட்ரி!' - உலகக் கோப்பையில் கலக்கப்போகும் `இளம்புயல்' ரிச்சா

ரிச்சா கோஷ்
ரிச்சா கோஷ் ( facebook )

கொல்கத்தா உள்ளூர் அணிக்காக விளையாடிக்கொண்டிருந்தபோது அவர் இந்திய அணியில் இடம்பிடித்த செய்தி வெளியானது.

அவளுடன் இருந்தவர்கள் அனைவரும் பொழுதுபோக்குக்காக கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தபோது அவள் மட்டும் மிக தீவிரமாக கிரிக்கெட்டின் அடி நாதத்தைக் கற்றுக்கொண்டிருந்தாள். எனக்காகத்தான் விளையாட ஆரம்பித்தார்... இப்படிப் பேசுவது ஒரு தந்தை தன் மகள் குறித்து. அவர் வேறுயாருமல்ல... இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இளம்புயலாக அடி எடுத்து வைக்கவிருக்கும் ரிச்சா கோஷ் என்ற 16 வயது வீராங்கனைதான்.

ரிச்சா கோஷ்
ரிச்சா கோஷ்
facebook

அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள ஐ.சி.சி பெண்கள் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக புதுமுகமாகக் களமிறங்க தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் இந்த இளம்புயல். 16 வயதே ஆகும் ரிச்சா மேற்குவங்க அணியின் ஸ்டார் பிளேயர் மட்டுமல்ல... ஹிட்டரும்கூட. ஆல் ரவுண்டராகவும் பல போட்டிகளில் ஜொலித்துள்ளார். 11 வயதில், ரிச்சா U-19 மேற்குவங்க அணியில் இடம் பிடித்தார். அதன்பின் 12 வயதில் இருந்தபோது U-23 அணியிலும் நுழைந்தார்.

`355 ரன் பார்ட்னர்ஷிப், திருப்பம் தந்த முதல்தர கிரிக்கெட்!' - இந்திய அணி Vs தமிழர் முத்துசாமி

2018-ம் ஆண்டின் சிறந்த வங்காள கிரிக்கெட் வீரராகத் தேர்வு செய்யப்பட்ட ரிச்சா சமீபத்தில் கட்டாக்கில் நடந்த இந்தியா சி அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா பி அணி சார்பில் களமிறங்கி 26 பந்துகளில் 36 ரன்கள் நொறுக்கி தேர்வாளர்களின் கவனத்தைப் பெற்றார். நேற்று கொல்கத்தா உள்ளூர் அணிக்காக விளையாடிக்கொண்டிருந்தபோது அவர் இந்திய அணியில் இடம்பிடித்த செய்தி வெளியானது.

ரிச்சா கோஷ்
ரிச்சா கோஷ்
facebook

மகிழ்ச்சியின் உச்சத்துக்குச் சென்ற ரிச்சா, ``இந்திய அணியிலும், உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்பது எனது கனவு. ஆனால், அது இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்று நான் நினைக்கவில்லை. என் ரோல்மாடல் என் தந்தைதான். அவரிடமே நான் கிரிக்கெட்டை கற்றுக்கொண்டேன். சச்சினையும் ரோல்மாடலாக வைத்துதான் விளையாடி வருகிறேன்" எனக் கூறும் ரிச்சாவுக்கு சிக்ஸ் அடிப்பதில் அலாதி பிரியம். சிக்ஸ் அடிப்பதில் தோனியை ரோல் மாடலாக கொண்டுள்ள ரிச்சா, ``தோனி சிக்ஸ் அடிக்கும்விதத்துக்கு நான் அடிமை. அது எனக்கு மிகவும் பிடிக்கும்" என்று கூறியுள்ளார்.

Vikatan

யார் இந்த ரிச்சா கோஷ்?

வட மேற்குவங்கத்தில் தேயிலைத் தோட்டங்களால் சூழப்பட்ட இமயமலையின் அடிவார நகரம் சிலிகுரி. சிறிய நகரமான இங்கிருந்து ஏற்கெனவே இரண்டு பிளேயர்கள் (விருத்திமான் சஹா, ஜூலன் கோஸ்வாமி) இந்திய அணிக்காக விளையாடியுள்ள நிலையில் இதே ஊரைச் சேர்ந்த ரிச்சா கோஷ் மூன்றாவது பிளேயராக இந்திய அணிக்குள் என்ட்ரி கொடுக்கவிருக்கிறார். ரிச்சாவின் இந்த கிரிக்கெட் ஆர்வத்துக்கு அவரின் தந்தைதான் காரணம். ரிச்சா தந்தை மனபேந்திரா கோஷ் கிளப் அணிகளுக்காக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்துள்ளார்.

ரிச்சா கோஷ்
ரிச்சா கோஷ்
facebook

ஆனால், அவரால் பெரிய பிளேயராக வர வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற முடியவில்லை. அதனால் சில ஆண்டுகள் அம்பயராகப் பணிபுரிந்தார். அந்த ஏக்கத்தில்தான் தன் மகளை கிரிக்கெட் வீராங்கனையாக மாற்ற முடிவெடுத்தார். ரிச்சா மூன்றுவயதாக இருக்கும்போதே அவரை மைதானத்துக்கு அழைத்துச் சென்று தீவிர பயிற்சி கொடுத்துள்ளார். அந்த வயதில் ரிச்சாவின் ஆர்வத்தைப் புரிந்துகொண்ட மனபேந்திரா அவரை கோச்சிங் கேம்பில் சேர்த்துவிட்டு பயிற்சி அளித்து வந்துள்ளார்.

‘அந்த 2 இன்ச் இடைவெளி.. தினமும் எனக்குள் எழும் கேள்வி!’- ரன் அவுட் குறித்து மனம் திறந்த தோனி

ரிச்சாவின் தாய் உடல்நலக்குறைவு உடையவர். பல ஆண்டுகளாகப் படுத்த படுக்கையாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது. எனினும், ரிச்சாவுக்கு அந்தக் குறை தெரியாமல் வளர்த்துவந்துள்ளார் மனபேந்திரா. அதேநேரம் ரிச்சா கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக 2016-ல் தனது வேலையை விட்டுள்ளார் அவர். சிலிகுரி சொந்த ஊராக இருந்தாலும், தன் மகள் எப்படி இருக்கிறாள் என்பதைப் பார்க்க அவர் அடிக்கடி கொல்கத்தாவுக்குச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்துள்ளார். ``சிலிகுரியில் இருந்து கொல்கத்தா செல்ல குறைந்து 12 - 13 மணி நேரம் ஆகும்.

ரிச்சா கோஷ்
ரிச்சா கோஷ்
facebook

கொல்கத்தாவில் அவள் விளையாடுவது தெரிந்துவிட்டால் பைகளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவேன். அவள் சிறிய பெண் நாங்கள் அவளை தனியாக விட்டுவிட முடியாது. அவளுடன் இருந்தவர்கள் அனைவரும் பொழுதுபோக்குக்காக கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தபோது, அவள் மட்டும் மிகத் தீவிரமாக கிரிக்கெட்டின் அடிநாதத்தைக் கற்றுக்கொண்டிருந்தாள். எனக்காகத்தான் விளையாட ஆரம்பித்தார். அவளுக்காக எத்தனை மணிநேரங்களானாலும் காத்திருப்பேன்" என்று ரிச்சா குறித்து பாசமழை பொழிகிறார் அவரின் தந்தை மனபேந்திரா.

வாழ்த்துகள் ரிச்சா!

Vikatan
அடுத்த கட்டுரைக்கு