Published:Updated:

அதே ஸ்டைல்; 22 பவுண்டரி; முதல் டபுள் செஞ்சுரி!- U14 போட்டியில் கவனம் ஈர்த்த ஜூனியர் டிராவிட்

சமித் டிராவிட்
சமித் டிராவிட்

கர்நாடகாவில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் Vice-President’s XI அணிக்காக டிராவிட்டின் மகன் சமித் விளையாடி வருகிறார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் கடினமான விஷயம் என்றால் மூன்றாவது வீரராக களமிறங்குவதுதான். ஆனால், அதை அசால்ட்டாக செய்து பல ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டின் சுவர் ஆக இருந்தவர் ராகுல் டிராவிட். அவர் ஓய்வுபெற்று பல ஆண்டுகள் ஆனாலும் உலகின் தலைசிறந்த கிளாஸிக் கிரிக்கெட்டராக இன்றளவும் பேசப்படுகிறார். டெஸ்ட் மட்டுமில்லை ஒருநாள் போட்டிகளிலும் டிராவிட்டை போன்ற மிகச்சிறந்த தற்காப்பு வீரர் யார் என சல்லடை போட்டுத் தேடினாலும், இன்னமும் யாரும் அகப்படவில்லை எனக் கூறும் அளவுக்கு சாதனைகளை அடுக்கிவைத்துச் சென்றுள்ளார்.

சமித் டிராவிட்
சமித் டிராவிட்

தற்போது இந்திய ஜூனியர் அணியின் பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார் டிராவிட். இதற்கிடையே, ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட் தந்தையைப் போலவே கிரிக்கெட்டில் புகழ்பெறத் தொடங்கியுள்ளார்.

இந்தச் சுவரைத் தகர்க்க பீரங்கிகளாலேயே முடியாது! - ராகுல் டிராவிட் பிறந்தநாள் பதிவு #HappyBirthdayDravid

கர்நாடகாவில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் Vice-President’s XI அணிக்காக டிராவிட்டின் மகன் சமித் விளையாடி வருகிறார்.

சமித்
சமித்

சமீபத்தில் Dharwad Zone அணிக்கு எதிராக நடந்த போட்டியில் களமிறங்கிய சமித் தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவு செய்துள்ளார். Dharwad Zone அணிக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் 256 பந்துகளைப் பிடித்த சமித் 22 பவுண்டரிகள் அடித்து தனது கிரிக்கெட் கேரியரில் முதல் டபுள் செஞ்சுரியை அடித்தார்.

Vikatan

முதல் இன்னிங்ஸில் டபுள் செஞ்சுரி அடித்த சமித் இரண்டாவது இன்னிங்ஸிலும் கோலோச்சினார். இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கில் 94 ரன்கள் விளாசிய சமித் பௌலிங்கிலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் தலைப்புச் செய்தியாக மாறியிருக்கிறார் சமித். தந்தையைப் போலவே வலது கை பேட்ஸ்மேனான சமித் இப்போது மட்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கவில்லை.

சமித் டிராவிட்
சமித் டிராவிட்

கடந்த வருடம் இதேபோன்று பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் 150 ரன்கள் எடுத்து கவனம் ஈர்த்தார். மேலும் 9 வயதாக இருக்கும்போதே பெங்களூர் யுனைடெட் கிரிக்கெட் கிளப் போட்டியில் பிராங்க் அந்தோனி பப்ளிக் பள்ளிக்கு எதிராக 125 ரன்கள் சமித் விளாசியது குறிப்பிடத்தக்கது.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு