Published:Updated:

`தங்கை தந்த அறிமுகம்; 14 வருட டேட்டிங்; ப்ரி-வெட்டிங் ஹனிமூன்!’ - பிரமாண்டமாக நடந்த நடால் திருமணம்

Nadal -  Xisca
Nadal - Xisca ( marca.com )

நடாலின் நண்பரும் களத்தின் கடுமையான போட்டியாளருமான ரோஜர் ஃபெடரர், சுவிஸ் நாட்டில் நடக்கும் உள்ளூர் தொடர் காரணமாக நடாலின் திருமணத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

டென்னிஸ் விளையாட்டின் உச்ச நட்சத்திரம் ரஃபேல் நடால். களிமண் களம் என்று வந்துவிட்டால் இவரை வீழ்த்துவது அத்தனை சுலபம் கிடையாது. இதுவரை 19 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கும் நடாலின் திருமணச் செய்தி பலருக்கு ஆச்சர்யம்தான்.

Nadal -  Xisca
Nadal - Xisca
Twitter

காரணம், `களத்தில் என்னுடைய டென்னிஸ் ஆட்டம் முடிந்த பின்னர்தான் திருமணம்’ எனப் பலமுறை சொல்லியிருக்கிறார். இந்த நிலையில் நேற்று ஸ்பெயினில் இருக்கும் தீவான மல்லோர்காவில் தனது நீண்ட நாள் காதலியான ஸிஸ்கா பெரெல்லோவை திருமணம் செய்துகொண்டார்.

மல்லோர்காவில் உள்ள பிரபல கோட்டையில் இந்தத் திருமணம் நடைபெற்றது. சுமார் 350 நபர்கள் மட்டுமே இந்த நிகழ்வில் அழைக்கப்பட்டனர். அவர்களில் 1975 முதல் 2014 வரை ஸ்பெயின் மன்னராக இருந்த ஜூவான் கார்லோஸும் ஒருவர் என்று கூறப்படுகிறது. இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட யாரும் புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படவில்லை. உலக பிரபல சமையல் கலைஞரான டகோஸ்டா(Quique Dacosta) தான் திருமண விழாவுக்கான உணவு வகைகளை தயாரித்துள்ளார்.

Nadal -  Xisca
Nadal - Xisca
https://www.tennisworldusa.org

33 வயதான நடால், 31 வயதாகும் ஸிஸ்கா பெரெல்லோவை 2005 -ம் ஆண்டு தனது சகோதரி மூலம் தான் சந்தித்தார். நடாலின் சகோதரியும் ஸிஸ்காவும் குழந்தைப் பருவம் முதல் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 14 வருடங்களாக நடாலும் ஸிஸ்காவும் காதலித்து வந்தனர். பிசினஸ் படிப்பை படித்து முடித்த பெரெல்லோ முதலில் ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினார். நடாலுடனான காதலுக்குப் பின்னர் ரஃபேல் நடால் ஃபவுண்டேஷனின் திட்ட மேலாளராக நியமிக்கப்பட்டார்.

இந்தியப் பயணிகள் விமானத்தைச் சுற்றிவளைத்த பாகிஸ்தானின் எஃப்16 போர் விமானங்கள்!-வானில் நடந்தது என்ன?

சமூக வலைதளங்களில் அதிகம் தலைகாட்டாத பெரெல்லோ, கிராண்ட் ஸ்லாம் ஆட்டங்களில் நடால் விளையாடும் போட்டிகளில் கலந்துகொண்டு கண்டுகளிப்பார். ஆனாலும் போட்டியின் போது நடாலுடன் அவர் பயணிப்பதில்லை. இது தொடர்பாக அவர் கூறுகையில், ``ஒரு தொடரின் போது போட்டி, பயிற்சி நேரம் போக நடால் அமைதியை விரும்புவார். அதனால் அவரை தனிமையில் விட்டுவிடுவேன். அதைத்தான் அவரும் விரும்புவார்” என்றார்.

Nadal -  Xisca
Nadal - Xisca
Twitter

நேற்று திருமணம் நடைபெற்ற நிலையில் நடாலுக்கு அதைக் கொண்டாட அதிக நேரம் இல்லை. அடுத்தடுத்த டென்னிஸ் தொடர்கள் வருவதால் விரைவாகப் பயிற்சி செய்ய வேண்டும். அதனால் திருமணத்துக்குப் பிந்தய ஹனிமூன் திட்டம் குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், கடந்த செப்டம்பர் மாதமே இந்த ஜோடி ப்ரி-வெட்டிங் ஹனிமூனுக்காக பஹாமாஸ் சென்று வந்துள்ளது.

View this post on Instagram

😜

A post shared by Rafa Nadal (@rafaelnadal) on

இத்தனை காலமாக நடாலின் காதலியாக போட்டிகளுக்குச் சென்றுவந்த பெரெல்லோ, இனி மனைவியாக வலம் வர இருக்கிறார். நடாலின் நண்பரும் களத்தின் கடுமையான போட்டியாளருமான ரோஜர் ஃபெடரர், சுவிஸ் நாட்டில் நடக்கும் உள்ளூர் தொடர் காரணமாக நடாலின் திருமணத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு