Published:Updated:

Tamil Thalaivas: `இனிதான் ஆரம்பம்!'- சரித்திர வெற்றியைப் பெற்ற தமிழ் தலைவாஸ்!

Tamil Thalaivas
News
Tamil Thalaivas ( Pro Kabaddi )

அந்த டை பிரேக்கரில் முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தியது தமிழ் தலைவாஸ் தான். குறிப்பாக அதிக தவறு செய்யும் மோஹித், தான் யார் என்பதை நிரூபித்த சம்பவம் அது.

Published:Updated:

Tamil Thalaivas: `இனிதான் ஆரம்பம்!'- சரித்திர வெற்றியைப் பெற்ற தமிழ் தலைவாஸ்!

அந்த டை பிரேக்கரில் முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தியது தமிழ் தலைவாஸ் தான். குறிப்பாக அதிக தவறு செய்யும் மோஹித், தான் யார் என்பதை நிரூபித்த சம்பவம் அது.

Tamil Thalaivas
News
Tamil Thalaivas ( Pro Kabaddi )
புரோ கபடி 9 ஆவது சீசன் எலிமினேட்டர்-2 சுற்றில் தமிழ் தலைவாஸ் யுபி யோதா அணிகள் மோதின. டை பிரேக்கரில் 6-4 என வென்று தமிழ் தலைவாஸ் முதன்முறையாக அரையிறுதிக்குச் சென்று வரலாறு படைத்திருக்கிறது.

நாக் அவுட் போட்டிகளுக்கே உரிய விறுவிறுப்பும் கடைசி நேர திக் திக் சுவாரஸ்யங்களும் கொண்ட போட்டியாகவே இது அமைந்தது. இரு அணிகளும் கடைசிவரை வெற்றிக்காகத் தீவிரமாக போராடின. புரோ கபடி வரலாற்றிலேயே இரண்டாவது முறையாக நடந்த டை பிரேக்கரில் தமிழ் தலைவாஸ் வென்று புதிய வரலாற்றைப் படைத்திருக்கிறது. இந்த சீசனில் ஒரு வலுவான அணியாகவும் பெஸ்ட் காம்பேக் கொடுத்த அணியாகவும் தமிழ் தலைவாஸ் திகழ்ந்து கொண்டிருக்கிறது. அக்டோபர் 23ஆம் தேதி யுபி யோதா அணியுடன் மோதும் ஆட்டத்தில் 48 -24 என மோசமாகத் தோற்றுப் போயிருந்தது தமிழ் தலைவாஸ். அணியில் பவன் குமார் இல்லை, பயிற்சியாளர் மாற்றம் சாகர் காயம் தொடர் தோல்விகள் என எல்லாவற்றையும் உடைத்துப் பல விஸ்வரூபங்கள் எடுத்து ப்ளே ஆஃப்க்குள் கெத்தாகத் தமிழ் தலைவாஸ் நுழைந்திருந்தது. நேற்றைய ஆட்டத்தில் மோதும் போது தலைசிறந்த வீரர்கள் பவன் குமார் , டிஃபெண்டர் சாகர் அணியில் இல்லையென்றாலும் நம்பிக்கையும் துணிச்சலும் இருக்கும் எங்கள் இளம் வீரர்களைக் கொண்டு சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று ஒரு பெஸ்ட் கம்பேக் கொடுக்க முடியும் எனச் சாதித்திருக்கிறது இந்த மஞ்சள் படை.

"தமிழ் தலைவாஸ் அணியை எளிதாக வென்று விடுவோம்" என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரதீப் நர்வால் கூறியிருந்தார். ஆனால் அவருக்கான பதிலடியைத் தமிழ் தலைவாஸ் வீரர்கள் களத்தில் திருப்பி கொடுத்திருக்கின்றனர் .
Tamil Thalaivas
Tamil Thalaivas
Pro Kabaddi

முதல் பாதியில் பிரதீப் நர்வாலை புள்ளிகள் எடுக்கவிடாமல் டிஃபென்டர் சாஹில் மூன்று முறை டேக்கிள் செய்திருந்தார். கடைசி நிமிடங்களில் பிரதீப் நர்வாலின் அசத்தலான டுப்கி மூலம் இரண்டு சூப்பர் ரெய்டுகள் எடுக்க யுபி யோதா தான் வெல்லபோகிறது என்ற சூழ்நிலையில் நம்பிக்கையைவிடாத தமிழ் தலைவாஸ் கடைசிவரை போராடினர். மீண்டும் பிரதீப் நர்வால் ரெய்டு வரத் துணிச்சலாக நரேந்தர் ஆங்கிள் ஹோல்ட் மூலம் டேக்கிள் செய்தார். ஒட்டுமொத்த தமிழ் தலைவாஸ் வீரர்களும் பிரதீப் நர்வாலை பாய்ந்து மடக்கினர். டை பிரேக்கரிலும் மோஹித் அசத்தலான சோலா டேக்கிளில் பிரதீப் நர்வாலை பிடித்து வீசினார். அது பிரதீப்க்கு மிகப்பெரிய அப்சட்டாக இருந்தது.

நரேந்தரின் ஆக்ரோஷம் முதல் ரெய்டிலிருந்தே வெளிப்பட்டது. டிஃபன்டர் சாஹில் பிரதீப் நர்வாலை மூன்று முறை டேக்கிள் செய்து பெஞ்சில் உட்கார வைத்தார்.
Tamil Thalaivas
Tamil Thalaivas
Pro Kabaddi

கேப்டன் அஜிங்கியா பவார் அழுத்தம் இல்லாமல் வழக்கம் போல டூ ஆர் ரெய்டில் அதிரடி காட்டிக் கொண்டிருந்தார். முதல்பாதி முடிவு வரை தமிழ் தலைவாஸ் கை ஓங்கி இருந்த நிலையில், ஒரு சில தவறான டேக்கிள்களால் யுபி யோதாவிடம் மொமண்டம் சென்றது. இருப்பினும் 14-16 என தமிழ் தலைவாஸ் முன்னிலையில் இருந்தது. முதல் பாதியிலேயே நரேந்தர் கண்டோலா சூப்பர் 10 எடுத்து அசத்தினார். இரண்டாம் பாதி தொடக்கத்தில் யுபியோதாவை ஆல் அவுட் செய்தது தமிழ் தலைவாஸ். கடைசி பத்து நிமிடங்களில் பிரதீப் நர்வாலின் எழுச்சி சுரேந்தர் சிறந்த ரெய்டுகள் யுபி யோத்தாவை மெல்ல மெல்ல ஆட்டத்திற்குள் கொண்டு வந்தன. இரண்டாவது பாதியில் தமிழ் தலைவாஸ் செய்யும் தவறுகளை இந்த ஆட்டத்திலும் நிகழ்த்தினார். கடைசி ஐந்து நிமிடங்களில் 29-26 என விறுவிறுப்பாக ஆட்டம் நகர்ந்தனர். ஆரம்பத்திலிருந்து லீடிங்கில் இருந்த தமிழ் தலைவாஸ் கடைசி இரண்டாவது நிமிடத்தில் ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தது. கடைசி நிமிடங்களில் பிரதீப் நர்வாலின் இரண்டு சூப்பர் ரெய்டுகளை பார்க்கையில் யுபி யோதாதான் வெல்லுமோ என்று தோன்றியது. ஆனால் தமிழ் தலைவாஸ் கடைசி வரை போராடியது. மீண்டும் பிரதீப் நர்வால் ரெய்டு வர துணிச்சலாக நரேந்தர் அவரை ஆங்கிள் டவுன் செய்தார். ஒட்டுமொத்த தமிழ் தலைவாஸ் வீரர்களும் பிரதீப் நர்வாலை பாய்ந்து மடக்கினர். இப்போது ஆட்டம் தமிழ் தலைவாஸ் பக்கம் திரும்பியது. ஒட்டுமொத்த தமிழ் தலைவாஸ் வீரர்களும் நிம்மதி பெருமூச்சுவிட்ட தருணம் அது. இறுதியில் 36-36 என ஆட்டம் டை ஆனது. வெற்றியை முடிவு செய்ய டை பிரேக்கர் நடத்தப்பட்டது. இரு அணிகளும் ஐந்து வீரர்கள் ரெய்டு செல்ல வேண்டும். அந்த டை பிரேக்கரில் முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தியது தமிழ் தலைவாஸ் தான். குறிப்பாக அதிக தவறு செய்யும் மோஹித், தான் யார் என்பதை நிரூபித்த சம்பவம் அது. பிரதீப் நர்வாலை சோலோ டேக்கிள் செய்தும் ரெய்டில் ஒரு புள்ளி எடுத்து அசத்தினார். நரேந்தர், அஜிங்கியா பவார், தலா ஒரு புள்ளி எடுக்க,

Tamil Thalaivas
Tamil Thalaivas
Tamil Thalaivas
டை பிரேக்கரில் 6 - 4 எனத் தமிழ் தலைவாஸ் வென்று முதன் முறையாக அரை இறுதிக்குள் நுழைந்தது.

கடைசி வரை சிறப்பாக விளையாடி வெற்றி வாய்ப்பை இழந்திடும் சூழ்நிலையில், நம்பிக்கை தளரவிடாமல் இறுதிவரை போராடி இந்த மாபெரும் வெற்றியைத் தமிழ் தலைவாஸ் ருசித்திருக்கிறது. பவன் குமார், சாகர் இல்லையென்றாலும் அஜிங்கியா கேப்டன்ஷியில் வெல்ல முடியும் என நிரூபித்திருக்கிறார்கள். இதே உத்வேகத்துடனும் துணிச்சலுடனும் ஒவ்வொரு வீரர்களும் களத்தில் இருக்கும்பட்சத்தில் நிச்சயம் அரையிறுதிப் போட்டியில் சம்பவம் செய்து இறுதிப் போட்டியிலும் தமிழ் தலைவாஸ் அணி சரித்திரம் படைப்பார்கள்.