Published:Updated:

ரவிக்குமார் தஹியா... டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கத்தை உறுதி செய்த முதல் ஆண் வீரர்!

ரவிக்குமார் தஹியா

டோக்கியோ ஒலிம்பிக்கில் 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கிறார் ரவிக்குமார் தஹியா. அரையிறுதிப் போட்டியில் அவர் Nurislam Sanayev எனும் கஜகஸ்தான் வீரரைத் தோற்கடித்தார்.

ரவிக்குமார் தஹியா... டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கத்தை உறுதி செய்த முதல் ஆண் வீரர்!

டோக்கியோ ஒலிம்பிக்கில் 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கிறார் ரவிக்குமார் தஹியா. அரையிறுதிப் போட்டியில் அவர் Nurislam Sanayev எனும் கஜகஸ்தான் வீரரைத் தோற்கடித்தார்.

Published:Updated:
ரவிக்குமார் தஹியா

மல்யுத்த பூமியான ஹரியானாவிலிருந்து ஒலிம்பிக் கனவோடு கிளம்பிய இளைஞர்களில் ரவிக்குமார் தாஹியாவும் ஒருவர். டோக்கியோ ஒலிம்பிக்கின் 57 கிலோ எடைப்பிரிவில் இன்று காலை விளையாடிய முதல் சுற்றில் கொலம்பிய வீரரை வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதிபெற்றவர் அதில் பல்கேரிய வீரர் ஜார்ஜி வங்கலோவ் என்பவரை 14-4 என்கிற புள்ளிக்கணிக்கில் வீழ்த்தி அரையிறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார்.

தற்போது அரையிறுதிப்போட்டியில் கஜகஸ்தான் வீரரை சந்தித்தார் ரவிக்குமார் தஹியா. இதில் அவர் ஃபால் முறையில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் முதல் ஆண் வீரர் என்கிற அடையாளத்தைப் பெற்றிருக்கிறார் ரவி தஹியா.

ரவிக்குமார் தஹியா பங்கேற்கும் இறுதிப்போட்டி நாளை நடைபெற இருக்கிறது.

ரவிக்குமார் தஹியாவின் கதை என்ன?!

23 வயதாகும் ரவிக்குமார் ஹரியானாவின் சோனிபாட் மாவட்டத்திலுள்ள நஹ்ரி எனும் கிராமத்தில் பிறந்தவர். விவசாய தொழில் செய்யும் குடும்பத்தை சேர்ந்தவர். ஹரியானாவிலிருந்து ஏகப்பட்ட மல்யுத்த வீரர்கள் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதால் இயல்பிலேயே ரவிக்குமாருக்கும் மல்யுத்தத்தின் மீது ஆர்வம் உண்டானது. ஹரியானா மண்ணின் பாரம்பரியத்தை நன்கு உணர்ந்திருந்த ரவிக்குமாரின் பெற்றோரும் அவருக்கு எந்த மறுப்பும் சொல்லாமல் மல்யுத்தத்திற்கு அனுமதி அளித்தனர்.

ஆசியப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றிருக்கும் சத்பால் சிங் எனும் பயிற்சியாளரிடமே ஆரம்பக்கால பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். இதன்பிறகு, அடுத்தக்கட்டமாக டெல்லியில் உள்ள பிரபலமான சத்ரசால் மைதான பயிற்சி மையத்தில் தங்கியிருந்து பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார். நஹ்ரி கிராமத்திலிருந்து சத்ரசால் மைதானம் 40 கி.மீ தொலைவில் இருக்கிறது. ரவிக்குமாரின் தந்தை தினமும் 40 கி.மீ பயணம் செய்து தன்னுடைய மகனுக்கு தங்களுடைய பண்ணையில் கிடைக்கும் சுத்தமான பாலை கொடுத்துவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

குடும்பத்தின் முழு ஆதரவாலும் சத்ரசால் பயிற்சி மையத்தின் தீவிர பயிற்சியாலும் ஜுனியர் அளவிலேயே வெற்றிகளை குவிக்கத் தொடங்கினார். 2015-ல் ஜுனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரவிக்குமாருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட கிட்டத்தட்ட ஒரு வருடம் ஓய்விலிருக்க வேண்டிய சூழல் உண்டாகியிருக்கிறது. காயத்திலிருந்து மீண்டு புத்துணர்ச்சியுடன் வந்தவர் மீண்டும் பதக்க வேட்டை நடத்தினார்.

ரவிக்குமார் தஹியா
ரவிக்குமார் தஹியா
2018-ல் 23 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்றார். 2019-ல் ப்ரோ ரெஸ்லிங் லீகில் ஹரியானா ஹேமர்ஸ் அணிக்காக ஆடிய அத்தனை போட்டிகளிலும் வென்று அணியை சாம்பியனாக்கினார். 2019, 2020 என அடுத்தடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார்.

இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் 57 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்கும் தகுதியை அடைந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

யாருடனும் எளிதில் பேசிவிடாத கூச்ச சுபாவம் கொண்ட ரவிக்குமார் தஹியா மல்யுத்த களத்தில் இறங்கிவிட்டால் அதகளப்படுத்திவிடுகிறார். இப்போதும் சமீபத்தில் நடந்து முடிந்த போலந்து ஓபனில் வெள்ளி வென்று நல்ல ஃபார்மில் இருக்கிறார். அதன் தொடர்ச்சியாக ஒலிம்பிக்கின் முதல் சுற்றிலும் வென்றிருக்கிறார்.

மல்யுத்தத்தில் வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா மீது அதிக கவனம் இருக்க, யாரும் எதிர்பாரா வகையில் ரவிக்குமார் தாஹியா பதக்கத்தை வென்று கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!

ரவிக்குமார் கலந்துகொள்ளும் அரையிறுதிப்போட்டி இன்றே நடைபெற இருக்கிறது!