Published:Updated:

பிவி சிந்து வெண்கலம் வென்றார்... சூப்பர் ஸ்மாஷ்களால் அதிரடி வெற்றி! LIVE UPDATES

சிந்து
சிந்து ( Dita Alangkara )

டோக்கியோ ஒலிம்பிக்கில் சிந்து எதிர்கொள்ளும் முதல் இடது கை போட்டியாளர் இந்த பிங்ஜியாவோ.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

01 Aug 2021 5 PM

பிவி சிந்து வெண்கலம் வென்றார். சீன வீராங்கனை ஹீ பிங்ஜியாவோவை 21-13, 21-15 என நேர்செட்களில் வீழ்த்தினார்.

01 Aug 2021 5 PM

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வெல்ல சிந்துவுக்கு இன்னும் 3 புள்ளிகளே தேவை... இரண்டாவது செட்டில் சிந்து 18-15 என முன்னிலை!

01 Aug 2021 5 PM

இரண்டாவது செட்டில் சிந்து 15-11 என முன்னிலை!

01 Aug 2021 5 PM

இரண்டாவது செட்டில் சிந்துவை பிங்ஜியாவோ நெருங்கிய நிலையில் மீண்டும் சிந்து 13-11 என முன்னிலை!

01 Aug 2021 5 PM

இரண்டாவது செட்டில் 11-8 என சிந்து தொடர்ந்து முன்னிலை. சீனா வீராங்கனைக்கு அதிக இடம் கொடுக்காமல் தொடர்ந்து அதிரடி ஆட்டம் ஆடுகிறார்.

01 Aug 2021 5 PM

இரண்டாவது செட்டிலும் சிந்து 9-7 என தொடர்ந்து முன்னிலை!

01 Aug 2021 5 PM

பவர்ஃபுல் ஸ்மாஷ் ஷாட்கள் மூலம் இரண்டாவது செட்டில் 7-5 என சிந்து முன்னிலை!

01 Aug 2021 5 PM

ஸ்மாஷ் ஷாட் அடிக்கும் அதே வேகத்துக்கு டிராப் ஷாட்களையும் சிந்து ஆட சீன வீராங்கனை தடுக்கமுடியாமல் திணறுகிறார்!

01 Aug 2021 5 PM

வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் தொடர்ந்து சிந்து அதிரடி ஆட்டம் ஆடுகிறார். இரண்டாவது செட்டில் 3 - 1 என முன்னிலை

01 Aug 2021 5 PM

அதிரடி ஆட்டத்தால் முதல் செட்டை 21-13 என கைப்பற்றியிருக்கிறார் பிவி சிந்து.

01 Aug 2021 5 PM

ஆட்டத்தை தன் கன்ட்ரோலில் எடுத்தார் சிந்து... சீன வீராங்கனை திணற சிந்து 16-9 என முன்னிலை!

01 Aug 2021 5 PM

14-8 என சிந்து தொடர்ந்து முன்னிலை!

01 Aug 2021 5 PM

ஃபார்முக்கு வந்த சிந்து... ஸ்மாஷ், டிராப் ஷாட்கள் என கலந்தடித்து அசத்தல் ஆட்டம். 10-8 என முதல் செட்டில் முன்னிலை!

01 Aug 2021 5 PM

சிந்து 9-7 என முதல் செட்டில் முன்னிலை!

01 Aug 2021 5 PM

சிந்து தன்னுடைய பலமான டிராப் ஷாட்களை ஆட, ஹீ பிங்ஜியாவோ தொடர்ந்து தடுத்தாடுகிறார். முதல் செட்டில் 5-5 என போட்டி கடுமையாகியிருக்கிறது.

01 Aug 2021 5 PM

முதல் செட்டில் 4-0 என சிந்து முன்னிலை

01 Aug 2021 5 PM

வெண்கலத்துக்கான போட்டியில் ஹீ பிங்ஜியாவோ (He Bingjiao) எனும் சீன வீராங்கனையுடன் மோதுகிறார் சிந்து. டோக்கியோ ஒலிம்பிக்கில் சிந்து எதிர்கொள்ளும் முதல் இடது கை போட்டியாளர் இந்த பிங்ஜியாவோ. மின்னல் வேகத்தில் ஆடக்கூடியவர் என்பது இவரது பலம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு