Published:Updated:

லவ்லினா போர்கோஹெய்ன் அரையிறுதியில் தோல்வி... வெண்கலம் வென்றார்! LIVE UPDATES

லவ்லினா
லவ்லினா ( THEMBA HADEBE )

டோக்கியோ ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையின் பெண்கள் வெல்டர்வெயிட் பிரிவில் அரையிறுதிப் போட்டியில் துருக்கி வீராங்னை Busenaz Sürmeneli- உடன் மோதுகிறார் இந்தியாவின் லவ்லினா போர்கோஹெய்ன்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

04 Aug 2021 10 AM

லல்லினா போர்கோஹெய்னுக்கும் Busenaz Sürmeneli எனும் துருக்கி வீராங்கனைக்குமான ஆட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது.

04 Aug 2021 11 AM

துருக்கியின் Busenaz Sürmeneli உலக சாம்பியன் மற்றும் உலகின் நம்பர் 1 வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது!

04 Aug 2021 11 AM

அதிரடியாக ஆடும் லவ்லினா... நடுவரால் எச்சரிக்கப்பட்டார்.

04 Aug 2021 11 AM

முதல் மூன்று நிமிடங்கள் முடிந்தது. முதல் சுற்றில்துருக்கி வீராங்கனை 10 புள்ளிகள் பெற லவ்லினா 9 புள்ளிகள் பெற்றிருக்கிறார்.

04 Aug 2021 11 AM

இரண்டு சுற்றுகள் முடிவில் துருக்கி வீராங்கனை 20 புள்ளிகளுடன் இருக்க, லவ்லினா 17 புள்ளிகளுடன் பின்தங்கியிருக்கிறார்.

04 Aug 2021 11 AM

அதிரடியாக ஆடிய துருக்கி வீராங்கனை Busenaz வெற்றிபெற்றார். ஐந்து நடுவர்களின் தீர்ப்புப்படி துருக்கி வீராங்கனை 30 புள்ளிகளும், லவ்லினா 25 புள்ளிகளும் பெற்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு