Published:Updated:

ஹாக்கி : வென்றது பெல்ஜியம்... பெனால்ட்டிகளில் கோட்டைவிட்ட இந்தியா! LIVE UPDATES

ஹாக்கி
ஹாக்கி

டோக்கியோ ஒலிம்பிக்கின் அரையிறுதிப்போட்டியில் இந்தியாவை 5-2 என்ற கோல்கணக்கில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பெல்ஜியம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

03 Aug 2021 6 AM

2018-ல் நடைபெற்ற ஹாக்கி உலகக்கோப்பையை வென்ற அணி பெல்ஜியம். 2016 ரியோ ஒலிம்பிக்கில் காலிறுதிப்போட்டியில் இந்தியாவையும் தோற்கடித்திருக்கிறது. ஆனால், இந்தியா தற்போது நல்ல ஃபார்மில் இருப்பதால் இன்றையப் போட்டி இரு அணிகளுக்கும் இடையே கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

03 Aug 2021 6 AM

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலியாவிடம் 7-1 என மோசமாகத் தோற்றாலும் மற்ற போட்டிகளில் தொடர்ந்து வெற்றிபெற்றிருக்கிறது இந்தியா. நியூசிலாந்தை 3-2, ஸ்பெயினை 3-0, அர்ஜென்டினாவை 3-1, ஜப்பானை 5-3 எனத் தோற்கடித்து வெற்றிபெற்றிருக்கிறது இந்தியா. காலிறுதிப் போட்டியில் பிரிட்டனையும் 3-1 என தோற்கடித்தது.

03 Aug 2021 6 AM

இந்தியாவின் ப்ளேயிங் லெவன் : மன்ப்ரீத் சிங் (கேப்டன்), ஸ்ரீஜிஷ் (கோல் கீப்பர்), அமித் ரோஹிதாஸ், ரூபிந்தர் பால் சிங், ஹர்மன்ப்ரீத் சிங், சுரேந்தர் குமார், ஹர்திக் சிங், நிலகந்த ஷர்மா, ஷம்ஷெர் சிங், மந்தீப் சிங், தில்ப்ரீத் சிங்

03 Aug 2021 7 AM

முதல் கோலை பெனால்ட்டி கார்னர் மூலம் அடித்தது பெல்ஜியம். லாக் லியூபெர்ட் பெல்ஜியத்தின் முதல் கோலை அடித்தார்!

03 Aug 2021 7 AM

இந்தியா கோல்... ஆட்டம்1-1 என சமநிலை. இந்தியாவுக்கான கோலை பெனால்ட்டி கார்னர் மூலம் அடித்தார் ஹர்மன்ப்ரீத் சிங்!

03 Aug 2021 7 AM

இந்தியா 2-1 என முன்னிலை. இரண்டே நிமிடங்களில் ஆட்டம் மாறியது. பெனால்ட்டி கார்னர் மூலம் இந்தியாவுக்கான முதல் கோலை ஹர்மன்ப்ரீத் 7-வது நிமிடத்தில் அடிக்க, 8-வது நிமிடத்தில் மந்தீப் சிங் பவர்ஃபுல் ஸ்ட்ரைக் மூலம் இந்தியாவுக்கான இரண்டாவது கோலை அடித்தார்!

03 Aug 2021 7 AM

2-1 என முன்னிலைப் பெற்றிருப்பதால் பந்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்து நேரம் கடத்தும் ஆட்டமுறையைப் பின்பற்றுகிறது இந்தியா. முதல் கால் மணி நேரம் முடிய இன்னும் 1 நிமிடமே இருக்கிறது!

03 Aug 2021 7 AM

முதல் 15 நிமிட ஆட்டம் முடிந்தது. இந்தியா 2-1 என உலக சாம்பியன் பெல்ஜியத்தை முந்தியிருகிறது.

03 Aug 2021 7 AM

பெல்ஜியத்துக்கான பெனால்ட்டி கார்னர் வாய்ப்பை தடுத்தது இந்தியா. மூன்று முறை முயன்றும் பெல்ஜியம் அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

03 Aug 2021 7 AM

பெனால்ட்டி கார்னர் மூலம் பெல்ஜியம் இரண்டாம் கோலை அடித்தது. ஆட்டம் 2-2 என மீண்டும் சமனுக்கு வந்தது. அலெக்ஸாண்டர் ஹென்ட்ரிக்ஸ் இந்த கோலை அடித்திருக்கிறார்.

03 Aug 2021 7 AM

மீண்டும் பெல்ஜியத்தின் பெனால்ட்டி கார்னர் வாய்ப்பைத் தடுத்தார் இந்தியாவின் அமித். ஆட்டம் 2-2 என தொடர்கிறது.

03 Aug 2021 7 AM

அரை மணி நேர ஆட்டம் முடிந்தது. இந்தியா, பெல்ஜியம் அணிகள் தலா இரண்டு கோல்கள் அடிக்க 2-2 என ஆட்டம் சமநிலையில் இருக்கிறது. 

03 Aug 2021 8 AM

இந்தியா - பெல்ஜியம் இரு அணிகளும் மூன்றாவது கோல் அடிக்கப் போராடுகின்றன. ஆட்டம் 2-2 என தொடர்கிறது.

03 Aug 2021 8 AM

மூன்றாவது 15 நிமிடங்கள் முடிந்தது. இரு அணிகளும் இந்த 15 நிமிட ஆட்டத்தில் கோல் அடிக்காததால் ஆட்டம் 2-2 என தொடர்கிறது!

03 Aug 2021 8 AM

நான்காவது 15 நிமிட ஆட்டம் தொடங்கியிருக்கிறது. இதுவரை இந்தியாவுக்கு 5 பெனால்ட்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்த நிலையில் அதில் ஒன்றை மட்டுமே இந்தியா கோல் ஆக்கியது. ஹர்மன்ப்ரீத் அந்த கோலை அடித்தார்.

03 Aug 2021 8 AM

பெல்ஜியத்துக்கு தொடர்ந்து கிடைக்கும் பெனால்ட்டி கார்னர் வாய்ப்புகள். மூன்றாவது முறையாக பெனால்ட்டி கார்னரில் பெல்ஜியம் கோல் அடித்தது. அலெக்ஸாண்டர் ஹெண்ட்ரிக்ஸ் இரண்டாவது கோல் அடித்தார்.

03 Aug 2021 8 AM

ஆட்டம் முடிய இன்னும் 8 நிமிடங்களே இருக்கின்றன. பெல்ஜியத்துக்கு மீண்டும் ஒரு பெனால்ட்டி கார்னர் வாய்ப்பு!

03 Aug 2021 8 AM

பெனால்ட்டி ஷூட்டில் தனது மூன்றாவது கோலை அடித்தார் அலெக்ஸாண்டர். பெல்ஜியம் 4-2 என முன்னிலை!

03 Aug 2021 8 AM

பெல்ஜியத்துக்கு இதுவரை மொத்தம் 14 பெனால்ட்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அதில் மூன்று கோல்களை அடித்திருக்கிறது பெல்ஜியம். நான்காவது கோல் பெனால்ட்டி ஷூட்டில் கிடைத்தது. இந்தியாவுக்கு ஐந்து பெனால்ட்டி கார்னர் வாய்ப்புகளே கிடைத்தன. அதில் ஒன்று மட்டும் கோலாக மாறியது!

03 Aug 2021 8 AM

கடைசி நேரத்தில் கோல் கீப்பர் இல்லாமல் ஆடிய இந்தியா. பெல்ஜியம் ஐந்தாவது கோலை அடித்தது!

03 Aug 2021 8 AM

நான்காவது 15 நிமிடத்தில் ஆட்டத்தையே தலைகீழாக மாற்றிவிட்டது பெல்ஜியம். இந்த கால் மணி நேர ஆட்டத்தில் மட்டும் பெல்ஜியம் மூன்று கோல்கள் அடிக்க 5-2 என இந்தியாவை வீழ்த்தியது. மூன்றாம் கால் மணி நேரம் வரை இரண்டு அணிகளும் 2-2 என சமநிலையில் இருந்தன.

03 Aug 2021 9 AM

இந்தியா இந்தப் போட்டியில் தோல்வியடைந்தாலும் பதக்க வாய்ப்பு இன்னும் இருக்கிறது. ஆகஸ்ட் 5-ம் தேதி காலை வெணகலப்பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா மோத இருக்கிறது. மதியம் நடைபெற இருக்கும் ஆஸ்திரேலியா - ஜெர்மனிக்கு இடையிலான போட்டியில் தோல்வியடையும் அணிக்கு எதிராக இந்தியா விளையாடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு