Published:Updated:

ஒலிம்பிக் போட்டிகளில் பாலின சமத்துவம் இருக்கிறதா, பெண்களின் பங்கேற்பு ஏன் முக்கியம்?!

1952-ம் ஆண்டுவரை 10 சதவிகிதத்துக்கும் குறைவான பெண்களே ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டனர். சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள்; 2014 வரை ஒலிம்பிக்கில் அனுமதிக்கப்பட்ட அனைத்து விளையாட்டுகளிலும் பெண்களால் கலந்துகொள்ள முடியாத நிலையே இருந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நவீன ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்பட்டு இந்த 125 ஆண்டுகளில், முதல் முறையாக எண்ணிக்கையளவில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். உண்மையில் ஒலிம்பிக் போட்டிகள் பாலின சமன்பாட்டை எட்டிவிட்டதா?

போட்டிகளில் பங்கேற்பதற்காக டோக்கியோ நகருக்கு வந்துள்ள 11,000 வீரர்களில், 49 % வீரர்கள் பெண்கள். 2016 ரியோ ஒலிம்பிக்கில் இந்த எண்ணிக்கை 45.6 சதவிகிதமாகவும், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் 44.2 சதவிகிதமாகவும் இருந்தது.

ஆரம்ப காலங்களில் பெண்களின் பங்கேற்பு எந்தளவிற்கு மோசமாக இருந்துள்ளது என்பதை திரும்பிப்பார்க்கும்போது இந்த அதிகரிப்பின் முக்கியத்துவம் தெரியும்.

1896-ல் நடைபெற்ற முதல் ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் கலந்துகொள்ளக் கூடாது என தடை விதித்துள்ளார் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் நிறுவனர் பேரன் பியரி டி கூபர்டின். 1900-ல் பெண்களுக்கான ஐந்து போட்டிகளில் விளையாடுவதற்காக 22 வீராங்கனைகள் வந்திருக்கிறார்கள். ஆனால், அதே ஒலிம்பிக்கில் தடகளம் முதல் படகு ஓட்டுவது வரை என அனைத்து போட்டிகளிலும் சேர்த்து 975 ஆண் வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஒலிம்பிக் போட்டிகளில் பாலின சமத்துவம் இருக்கிறதா, பெண்களின் பங்கேற்பு ஏன் முக்கியம்?!
Ashley Landis

1952-ம் ஆண்டுவரை 10 சதவிகிதத்துக்கும் குறைவான பெண்களே ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டனர். சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள்; 2014 வரை ஒலிம்பிக்கில் அனுமதிக்கப்பட்ட அனைத்து விளையாட்டுகளிலும் பெண்களால் கலந்துகொள்ள முடியாத நிலையே இருந்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளில் “50% பெண்கள் பங்கேற்பதை உறுதிப்படுத்த வேண்டும்” என 2014-ம் ஆண்டு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கொள்கை வகுத்த பிறகே நிலைமை கொஞ்சம் மாறத்தொடங்கியுள்ளது.

போட்டிகளில் கலந்துகொள்வதில் வேண்டுமானால் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம். ஆனால், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அதிகாரப் பதவிகளில் ஆண்களே நிரம்பியுள்ளனர். நிர்வாக போர்டுகளில் 33.3 சதவிகிதமும், கமிட்டி உறுப்பினர்களில் 37.5 சதவிகிதமும் மட்டுமே பெண்கள் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொள்கை அளவிலான மாற்றங்கள், விளையாட்டிற்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதி அதிகரிப்பு, ஊடகங்களில் வீராங்கனைகள் பற்றிய செய்திகளுக்கு அதிக நேரம் ஒதுக்கியது போன்றவை இதற்கு காரணமாக கூறலாம். ஆனால், சில நாடுகளில் இன்றும் கூட ஊடக கவரேஜிலும், நிதி ஒதுக்குவதிலும், வாய்ப்புகளைப் பெறுவதிலும் சக பெண் வீரர்களை விட ஆண்களே முன்னிலையில் உள்ளனர்.

ஒலிம்பிக் போட்டிகளில் பாலின சமத்துவம் இருக்கிறதா, பெண்களின் பங்கேற்பு ஏன் முக்கியம்?!
Andrew Medichini

வீரர்களின் முந்தைய செயல்பாடுகளை பொறுத்தே சில நாடுகள் நிதி ஒதுக்குகிறது. பயிற்சி பெறவோ போட்டிகளில் கலந்து கொள்ளவோ பணம் இல்லாதபோது வீரர்களால் எப்படி சாதிக்க முடியும்? பிரபலமான வீரர்களுக்கு நிதி அளிப்பதா அல்லது கீழ்மட்ட அளவில் இளம் வீரர்களை உருவாக்கும் நிறுவனங்களுக்கு நிதிகளை பகிர்ந்தளிப்பதா என்பதிலும் பல நாடுகள் குழப்பத்தில் உள்ளன.

எண்ணிக்கையை தவிர்த்துவிட்டு பார்த்தோம் என்றால், போட்டிகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இன்றும் ஆண்களே முக்கியமான நேரத்தை பெறுகிறார்கள்.

ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சியன்று நடைபெறும் வீரர்கள் அணிவகுப்பின் போது, தங்கள் குழுவில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக பங்கேற்பார்கள் என அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, சீனா போன்ற நாடுகள் அறிவித்து செயல்படுத்தியது பாராட்டத்தக்கது.

ஒலிம்பிக் போட்டிகளில் பாலின சமத்துவம் இருக்கிறதா, பெண்களின் பங்கேற்பு ஏன் முக்கியம்?!
Petr David Josek

ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு நாடும் தொடக்க நிகழ்ச்சியன்று நடைபெறும் வீரர்கள் அணிவகுப்பின் போது ஆணும் பெண்ணும் சேர்ந்து கொடிபிடித்து வர வேண்டும் என சர்வதேச கமிட்டி உத்தரவு பிறப்பித்தது. இதன்மூலம் சீனா, மங்கோலியா போன்ற நாடுகளில் முதல்முறையாக பெண்கள் கொடி பிடித்து வந்தனர்.

பாலின சமன்பாட்டை ஊக்கப்படுத்த ஒலிம்பிக் கமிட்டி எடுத்துள்ள முன்னெடுப்பை ஒருபக்கம் பாராட்டினாலும், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தங்கள் கைக்குழந்தைகளை போட்டிகள் நடைபெறும் இடத்திற்கு அழைத்து வர தடை விதிக்கிறார்கள் என இளம் தாய்மார்களாக இருக்கும் சில வீராங்கனைகள் புகார் தெரிவித்தனர்.

அதனால், ஜூன் இறுதியில் இந்த முடிவை மாற்றிய ஒலிம்பிக் கமிட்டி, வீராங்கனைகள் தங்கள் கை குழந்தைகளை அழைத்து வர அனுமதி வழங்கியது. ஆனால், கடுமையான கட்டுப்பாடுகள் இருப்பதால் கைக்குழந்தையோடு தங்குவது சாத்தியமில்லாதது என்றார் ஸ்பானிஷ் நீச்சல் வீராங்கனை ஓனா கார்போனைல்.

பேஸ்பால், சாஃப்ட்பால், கராத்தே, ஸ்கேட்டிங், அலை சறுக்கு (சர்ஃபிங்) போன்ற புதிய விளையாட்டுகளும் இந்த முறை சேர்க்கப்பட்டுள்ளன. இதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் என தனித்தனியாக போட்டிகள் உள்ளன. இதன்மூலம் திறமையான புதிய வீரர்கள் கிடைப்பார்கள்.

ஒலிம்பிக் போட்டிகளில் பாலின சமத்துவம் இருக்கிறதா, பெண்களின் பங்கேற்பு ஏன் முக்கியம்?!
Kin Cheung

ஆண்களும் பெண்களும் சேர்ந்து பங்கேற்கும் 18 போட்டிகள் இந்த ஒலிம்பிக்கில் நடைபெறுகின்றன. இதில் நீச்சல் மற்றும் தடகள ரிலே போட்டிகளில் பிரபலமான வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர். அதுமட்டுமல்லாமல், டேபிள் டென்னிஸ், ஜூடோ, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் போன்ற போட்டிகளிலும் ஆண்களும் பெண்களும் சேர்ந்து விளையாடப் போகின்றனர்.

ஆனாலும் கூட, இன்றும் சில போட்டிகளில் பெண்கள் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருக்கிறார்கள்.

உதாரணமாக, ஒலிம்பிக் டெகத்லான் போட்டியில் ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும். உலகளவில் பெண்கள் டெகத்லான் போட்டியில் சாதனை படைத்துள்ள அமெரிக்கவைச் சேர்ந்த டோர்டான் க்ரே, 2024 ஒலிம்பிக்கிலாவது இப்போட்டியில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என போராடி வருகிறார். இதேப்போல், 50 கிலோமீட்டர் நடைப் பந்தயத்திலும் பெண்கள் பங்கேற்க முடியாது.

ஒலிம்பிக் போட்டிகளில் பாலின சமத்துவம் இருக்கிறதா, பெண்களின் பங்கேற்பு ஏன் முக்கியம்?!
Eric Gay

இவ்வளவு தடங்கல்கள் இருந்தாலும், தற்போதைய ஒலிம்பிக்கில் அமெரிக்காவின் மிகப்பெரிய நட்சத்திர வீரர்கள் யார் தெரியுமா? இரண்டு பெண்கள்: நீச்சல் வீராங்கனை கேட்டி லெடிக்கி மற்றும் ஜிம்னாஸ்டிக் வீரர் சிமோன் பைல்ஸ். ஒலிம்பிக் அரங்கத்தில் ரசிகர்களின் கரகோஷம் இவர்களுக்காகதான் அதிகம் ஒலிக்கிறது.

ரியோவில் இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத்தந்தவர்களும் இரண்டு பெண்கள் மட்டுமே. டோக்கியோ ஒலிம்பிக்கிலும் இந்தியாவின் பதக்கவேட்டையை மீராபாய் சானு எனும் பெண்தான் தொடங்கிவைத்திருக்கிறார். அதனால், அனைத்து விளையாட்டுகளிலும் பெண்களின் பங்கேற்பை அதிகரிப்போம். பெண் வெற்றியைக் கொண்டாடுவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு