Published:Updated:

இராணுவ வீரர், பதக்கம் வெல்ல படகோட்டி ஆனார்... டோக்கியோ ஒலிம்பிக்கில் சாதிப்பாரா விஷ்ணு?

விஷ்ணு சரவணன்
விஷ்ணு சரவணன் ( SAIMedia )

இந்தியா சார்பில் படகோட்டும் போட்டியில் நான்கு பேர் பங்கேற்க இருக்கின்றனர். அதில், இளம் வயதிலேயே அதிக சாதனைகளை செய்திருப்பதால் விஷ்ணு சரவணன் மீது அனைவருக்கும் கூடுதல் நம்பிக்கை இருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாட்டை பாதுகாப்பதோடு மட்டுமில்லாமல் நாட்டுக்காக சர்வதேச அளவில் பதக்கம் வென்று கொடுக்கவும் முனைகிறார் இராணுவ வீரரான விஷ்ணு சரவணன். 22 வயதேயாகும் இந்த இளம் வீரர் டோக்கியோ ஒலிம்பிக்கில் படகோட்டும் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க இருக்கிறார். 

விஷ்ணு சரவணன் மகாராஷ்டிராவை சேர்ந்தவர். இவருடைய தந்தையும் இராணுவத்தில் பணிபுரிந்தவரே. அவரின் வழிகாட்டுதலின்படியே படகோட்டும் பயிற்சியில் ஈடுப்பட்டிருக்கிறார் விஷ்ணு. இவருடைய தங்கையான ரம்யா சரவணனும் ஒரு படகோட்டும் வீராங்கனையே.

தந்தையின் ஆதரவு முழுமையாக இருந்ததால், சிறு வயதிலேயே படகோட்டும் போட்டியின் நுணுக்கங்களை கற்று தேர்ந்திருந்தார் விஷ்ணு. இதன் விளைவாக ஜுனியர் லெவல் போட்டிகளிலேயே பல பதக்கங்களை வென்றார். 2016-ல் இளையோருக்கான தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் டைட்டிலை வென்றார். அதே ஆண்டில் ஹாங்காங் சீரிஸில் வெள்ளி வென்றார். 2018 தேசிய அளவிலான சீனியர் சாம்பியன்ஷிப் டைட்டிலை வென்றார். 2019-ல் 21 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றார்.

விஷ்ணு சரவணன்
விஷ்ணு சரவணன்
SAIMedia

சமீபத்தில் ஓமனில் நடைபெற்ற முஸன்னாஹ் ஓபனில் இரண்டாமிடம் பிடித்ததன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிப்பெற்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் Laser Standard பிரிவில் படகோட்ட பந்தயத்தில் பங்கேற்க இருக்கிறார். கொஞ்சம் எடை குறைவான படகுகளை ஒரே ஒரு நபர் இயக்கும் வகையிலான பிரிவு இது.

விஷ்ணு சரவணன் மீது அனைவருக்கும் கூடுதல் நம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கையை காப்பாற்றுவாரா என்பது கூடிய விரைவில் தெரிந்துவிடும்.

விஷ்ணு சரவணன் பங்கேற்கும் லேசர் படகுப்போட்டி நாளை (25-07-2021) காலை 11 மணிக்கு நடைபெற இருக்கிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு