Published:Updated:

டோக்கியோ ஒலிம்பிக் இந்தியாவுக்கு சொல்லியிருக்கும் மெசேஜ் என்ன? - விகடன் வெபினாரில் பேசுவோம் வாங்க!

ஆனந்த விகடன் & அவள் விகடன் நடத்தும் இந்த வெபினார் நாளை காலை 11 மணிக்கு துவங்குகிறது. பத்திரிகையாளர் & வர்ணனையாளர் டி.என்.ரகு கலந்துகொள்கிறார். Zoom மூலம் இந்த வெபினார் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள். இப்படிப் பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேசுவோம்.

137 கோடி மக்கள் வாழும் நாடு 7 ஒலிம்பிக் பதக்கங்கள்தான் வென்றிருக்கிறது. பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் நம் நாட்டை விடச் சிறிய நாடுகள் நிறைய பதக்கங்கள் வென்றிருக்கின்றன. மறுக்க முடியாதுதான். அதற்காக, `ஏன் நாம் அதிக பதக்கங்கள் ஜெயிக்க முடியவில்லை?' என்று இப்போது வாதிட ஒன்றும் இல்லை. அப்படி வாதிடுவது அறமும் இல்லை. நாம் ஒன்றும் 50 பதக்கங்களைக் குறிவைத்துச் சென்று ஏழோடு திரும்பி வரவில்லை. இரட்டை இலக்கம் அடைவதுதான் எதிர்பார்ப்பாக இருந்தது. கொஞ்சம் குறைந்திருக்கிறது. அவ்வளவே.

137 கோடிப் பேர் இருக்கிறார்கள் என்பதற்காக உடனே அமெரிக்காவுடனும் சீனாவுடனும் போட்டியிட முடியாது. நம் சமுதாய, பொருளாதார நிலைகளை யோசிக்கவேண்டும். ரியோவில் இரண்டு பதக்கங்கள் வென்ற நிலையில், இப்போது 7 வென்றிருப்பது நல்ல விஷயமே.

Olympics
Olympics
AP
இந்தியா உயர்த்திப் பிடித்த ஒலிம்பிக் சுடர்!

அப்படியிருக்கையில் 'ஏன் சறுக்குகிறோம்' என்ற விவாதத்தை இப்போது எழுப்புவது மிகவும் தவறு. ஒவ்வொரு ஒலிம்பிக் தொடர் முடிந்ததும் அடுத்த இரண்டு நாள்கள் நடத்தப்படும் இந்த விவாதங்களால் என்ன மாறியிருக்கிறது. விவாதங்களில்தான் என்ன மாறியிருக்கிறது? இந்த விவாதங்கள் எப்போதும் அரசையும், அமைப்புகளையும் மட்டுமே குறிவைத்திருக்கின்றன. பிரச்னை அங்கு மட்டும் இல்லை. அடிப்படையே இங்கு பிரச்னையாகத்தான் இருக்கிறது.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பின்வரும் லிங்க்கில் பதிவு செய்யவும்: https://forms.gle/W92v1c4sgJjBkXC59

பி.டி பீரியடை எடுத்துக்கொண்ட கணக்கு வாத்தியாரைக் கட்டம் கட்டுவதும் பெரும் குற்றம். நீங்கள் அவரிடமும், பள்ளி நிர்வாகத்திடமும் மகன் சென்டம் எடுக்கவேண்டும், பாஸாக வேண்டும் என்றுதான் கேட்டிருக்கிறீர்கள். யாரும் பையன் ஏன் வேகமாக ஓடவில்லை என்றோ, ஃபிட்டாக இல்லையென்றோ கேட்டதில்லையே!

2020 ஒலிம்பிக் பதக்கம்
2020 ஒலிம்பிக் பதக்கம்

இங்கு நானும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவன் அல்லன். கடந்த நான்கு ஆண்டுகளில் நானூறு முறை கோலியின் பெயரை எழுதியிருக்கிறேன். நான்கு முறையே நீரஜ் சோப்ரா பெயரை எழுதியிருப்பேன். அந்த நான்கு முறையும் அந்தக் கட்டுரைகளை யாரும் படித்திருக்கவில்லை.

இப்படி சுட்டிக்காட்ட ஆயிரம் காரணங்களும் ஆயிரம் குற்றவாளிகளும் நமக்கு இருக்கப்போகிறார்கள். ஆனால், அதிலேயே உழன்றுகொண்டிருப்பது நேர விரயம்தான்.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பின்வரும் லிங்க்கில் பதிவு செய்யவும்: https://forms.gle/W92v1c4sgJjBkXC59

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டோக்கியோ ஒலிம்பிக், எதிர்காலத்துக்கான மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. பல வீரர்கள் பதக்கம் ஜெயிக்காவிட்டாலும் தங்கள் போராட்டத்தால் தடம் பதித்திருக்கிறார்கள். இதுவரை கலந்துகொள்ளாத, பெரும்பான்மை மக்களுக்குப் பரிச்சயமில்லாத விளையாட்டுகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இன்னும் 15 வருடங்கள் வரை விளையாடக்கூடிய டீனேஜர்கள் இப்போதே ஒலிம்பிக் அனுபவம் பெற்றிருக்கிறார்கள். அனைத்தையும்விட, அடுத்த தலைமுறைக்கு, வருங்கால சாம்பியன்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை கொடுத்திருக்கிறார்கள்.

Tokyo 2020
Tokyo 2020
முதல் நாளில் வெள்ளி... கடைசி நாளில் தங்கம்... டோக்கியோ ஒலிம்பிக்கில் சாதித்த இந்தியர்கள்!

இப்படியான விஷயங்களையும் நாம் பேசலாம். இங்கிருந்து முன் நகர்வதற்கு இருக்கும் வாய்ப்புகள் பற்றி விவாதிக்கலாம். இவர்கள் வெற்றி பெற்ற காரணங்கள் பற்றி ஆலோசிக்கலாம்.

டோக்கியோ ஒலிம்பிக் இந்தியாவுக்கு கொடுத்துள்ள நம்பிக்கை!
மீராபாய் சானு, லவ்லினா, சிந்து... இவர்கள் வெற்றி எவ்வளவு முக்கியம்?
வடகிழக்கு மாநில மக்களின் அடையாளத்துக்கு, அங்கீகாரத்துக்கு டோக்கியோ ஒலிம்பிக் எந்த வகையில் உதவியிருக்கிறது?
இந்திய ஹாக்கியின் மகத்தான எழுச்சி!
ஒலிம்பிக்கும் 11 வீரர்களும் - மாறுகிறதா தமிழக ஆடுகளம்?

இந்த டோக்கியோ ஒலிம்பிக் நமக்கு என்ன பாடம் சொல்லியிருக்கிறது. எப்படியான நம்பிக்கை கொடுத்திருக்கிறது. அடுத்த தலைமுறைக்கு இது ஏன் முக்கியம் - பத்திரிகையாளர் & வர்ணனையாளர் டி.என்.ரகு உடன் ஓர் உரையாடல் மேற்கொள்ளலாம். ஆனந்த விகடன் & அவள் விகடன் நடத்தும் இந்த வெபினார் நாளை காலை 11 மணிக்கு துவங்குகிறது. Zoom மூலம் இந்த வெபினார் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள். இப்படிப் பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேசுவோம்.

கட்டணமில்லா இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பின்வரும் லிங்க்கில் பதிவு செய்யவும்: https://forms.gle/W92v1c4sgJjBkXC59

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு