Published:Updated:

முதல் ஜம்ப்பில் ஒலிம்பிக் சாதனை... கடைசி ஜம்ப்பில் உலக சாதனை- வெனிசுலாவின் ஜூலிமர் ரோஹாஸ்!

ஜூலிமர் ரோஹாஸ்- Yulimar Rojas ( David J. Phillip )

15-வது வயதில் முதன் முதலாக உயரம் தாண்டும் போட்டியில் கலந்து கொண்ட ரோஹாஸ், தேசிய சாதனை படைத்ததோடு உளகளவில் 11-வது இடமும் பிடித்துள்ளார். ஆனால், சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்ள அவரது தந்தை அனுமதிக்க மறுத்ததால் ரோஹாஸால் பல போட்டிகளில் கலந்துகொள்ளமுடியவில்லை.

முதல் ஜம்ப்பில் ஒலிம்பிக் சாதனை... கடைசி ஜம்ப்பில் உலக சாதனை- வெனிசுலாவின் ஜூலிமர் ரோஹாஸ்!

15-வது வயதில் முதன் முதலாக உயரம் தாண்டும் போட்டியில் கலந்து கொண்ட ரோஹாஸ், தேசிய சாதனை படைத்ததோடு உளகளவில் 11-வது இடமும் பிடித்துள்ளார். ஆனால், சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்ள அவரது தந்தை அனுமதிக்க மறுத்ததால் ரோஹாஸால் பல போட்டிகளில் கலந்துகொள்ளமுடியவில்லை.

Published:Updated:
ஜூலிமர் ரோஹாஸ்- Yulimar Rojas ( David J. Phillip )

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான ட்ரிப்பிள் ஜம்ப் போட்டியில் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ஜூலிமர் ரோஹாஸ் 15.67மீ தூரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார். இப்போட்டியில் உலக சாதனை படைத்ததோடு ஒலிம்பிக்கில் வெனிசுலா நாட்டிற்கான முதல் தங்கப்பதக்கத்தையும் பெற்றுக் கொடுத்துள்ளார் ரோஹாஸ். இதற்கு முன் உக்ரைனின் இனஸ்ஸா க்ரேவெட்ஸ் 1995-ம் ஆண்டு 15.50மீ தூரம் தாண்டியதே உலக சாதனையாக இருந்தது.

ரோஹாஸ் ஏற்கெனவே 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளதோடு, 2017 மற்றும் 2019 உலக சாம்பியன்ஷிப் ட்ரிப்பிள் ஜம்ப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார்.

''ஃபேஸ்புக்கில் இவானைச் சந்தித்தது தான் என் வாழ்க்கையில் ஏற்பட்ட முக்கியமான திருப்புமுனை'' என்கிறார் ரோஹாஸ். ''இவானின் பயிற்சியின் கீழ்தான் நான் தங்கம் வெல்ல வேண்டும் என ஏற்கெனவே விதி எழுதபட்டுள்ளது. இந்த வெற்றிக்கு இவான்தான் முழு காரணம்'' என வெற்றிக்கான முழு ஜூலிமார் ரோஹாஸ். பயிற்சியாளர் இவான் பெட்ரோஸா கியூபாவின் முன்னாள் நீளம்தாண்டுதல் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் ஜம்ப்பில் ஒலிம்பிக் சாதனை... கடைசி ஜம்ப்பில் உலக சாதனை- வெனிசுலாவின் ஜூலிமர் ரோஹாஸ்!
David J. Phillip

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!


1995-ம் ஆண்டு வெனிசூலா நாட்டின் தலைநகர் காரகாஸில் பிறந்த ரோஹாஸ், மிக ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். தன்னுடைய பெற்றோருக்கு ஆறாவது குழந்தையாக பிறந்த ரோஹாஸ், இளம் வயதிலிருந்தே வறுமையால் பல இன்னல்களைச் சந்தித்துள்ளார். ஆரம்பத்தில் வாலிபால் மற்றும் பேஸ்கட் பால் விளையாட விரும்பினாலும், அதற்குறிய அணியோ பயிற்சி மையமோ அவர் ஊரில் இல்லாத காரணத்தால் அந்த ஆசையை பாதியிலேயே கைவிட்டிருக்கிறார்.

பிறகுதான் பயிற்சியாளர் ஒருவரின் அறிவுரையை கேட்டு தூரம் தாண்டும் போட்டியில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். தன்னுடைய 15-வது வயதில் முதன் முதலாக உயரம் தாண்டும் போட்டியில் கலந்து கொண்ட ரோஹாஸ், தேசிய சாதனை படைத்ததோடு உளகளவில் 11-வது இடமும் பிடித்துள்ளார். ஆனால், சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்ள அவரது தந்தை அனுமதிக்க மறுத்ததால் ரோஹாஸால் பல போட்டிகளில் கலந்துகொள்ளமுடியவில்லை. இந்த சமயத்தில்தான் 20 வயதிற்குட்பட்டோருக்கான தென் அமெரிக்க சாம்பியன்ஷிப் போட்டி கொலம்பியா நாட்டில் நடைபெற்றுள்ளது.

முதல் ஜம்ப்பில் ஒலிம்பிக் சாதனை... கடைசி ஜம்ப்பில் உலக சாதனை- வெனிசுலாவின் ஜூலிமர் ரோஹாஸ்!
Francisco Seco


பல கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டிருந்த தந்தை அருகில் உள்ள நாடுதானே என ரோஹாஸை போட்டியில் பங்கேற்க அனுமதித்திருக்கிறார். இத்தனை நாளாக தன்னுடைய திறமை எல்லாம் வீணாகிக் கொண்டிருக்கிறதே என்ற கோபமோ என்னவோ, உயரம் தாண்டும் போட்டியில் தங்கப் பதக்கத்தோடு திரும்பிய ரோஹாஸைப் பார்த்து நாடே வியந்திருக்கிறது. அதன்பிறகு தான் கலந்துகொண்ட போட்டிகள் அனைத்திலும் வெற்றி வாகை சூடினார். உயரம் தாண்டுதலில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டிருந்த ரோஹாஸ், முதல் முறையாக 2014-ம் ஆண்டு ட்ரிப்பிள் ஜம்ப் போட்டியில் கலந்து கொண்டவர் முதல் போட்டியிலேயே 13.57மீ தாண்டி தேசிய சாதனை படைத்திருக்கிறார்.


அன்று முதல் ட்ரிப்பிள் ஜம்ப் போட்டியில் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்க ஆரம்பித்துள்ளார் ரோஹாஸ். தொடர்ச்சியான வெற்றிகளால் அவரது வீடு முழுவதும் பதக்கங்களால் நிரம்பியது. 2020-ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த தடகள வீரருக்கான விருது ஜூலிமர் ரோஹாஸுக்கு அறிவிக்கப்பட்டதும், ஒட்டுமொத்த வெனிசுலா நாடுமே கொண்டாடியது.

ஜூலிமர் ரோஹாஸ்
ஜூலிமர் ரோஹாஸ்
David J. Phillip


காயம் காரணமாக 2018-ம் ஆண்டு பெரும்பாலான போட்டிகளில் கலந்துகொள்ளாவிட்டாலும், 2019-ம் ஆண்டு தோஹாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று தன்னுடைய திறமையை நிரூபித்தார்.


டோக்கியோ ஒலிம்பிக்கில் ரோஹாஸ் நிச்சயம் உலக சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதை பொய்யாக்காமல் 15.67மீ தாண்டி 25 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார். இதற்கு முன்பாக முதல் ஜம்ப்பில் ரோஹாஸ் புதிய ஒலிம்பிக் சாதனையையும் படைத்தார். “இந்த சாதனையை முடியடிக்க வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாகவே என் மனதில் இருந்தது. என் கால்களால் இவ்வளவு தூரம் தாண்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. கடைசி முயற்சியில் என் உயிரையே கொடுத்து தாண்டினேன். எதிர்பார்த்தது போல் எல்லாம் சரியாக அமைந்தது” என மகிழ்ச்சியில் திளைக்கிறார் ரோஹாஸ்.

தன்பாலின ஈர்ப்பாளர் என வெளிப்படையாக அறிவித்துக் கொண்டவர் ரோஹாஸ் என்பது குறிப்பிடத்தக்கது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism