Published:Updated:

"மீரா, 2012-ல தூக்குன வெயிட்டை 2014-ல உன்னால தூக்க முடியலையே!" : மீராபாய் சானு பயோபிக் - 5

Mirabai Chanu

பட்டியாலாவில் மொழி பிரச்னை, சக வீரர்களின் கிண்டல், கேலி என அவதிப்படும் மீராபாய் சானுவின் பெர்ஃபாமன்ஸ் இரண்டு ஆண்டுகள் பின் சென்றுவிட்டது. 2012-ல் தூக்கிய வெயிட்டை 2014-ல் அவரால் தூக்க முடியவில்லை. அவர் எப்படி மீண்டு வந்தார்?!

"மீரா, 2012-ல தூக்குன வெயிட்டை 2014-ல உன்னால தூக்க முடியலையே!" : மீராபாய் சானு பயோபிக் - 5

பட்டியாலாவில் மொழி பிரச்னை, சக வீரர்களின் கிண்டல், கேலி என அவதிப்படும் மீராபாய் சானுவின் பெர்ஃபாமன்ஸ் இரண்டு ஆண்டுகள் பின் சென்றுவிட்டது. 2012-ல் தூக்கிய வெயிட்டை 2014-ல் அவரால் தூக்க முடியவில்லை. அவர் எப்படி மீண்டு வந்தார்?!

Published:Updated:
Mirabai Chanu

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மீண்டும் Disclaimer
இந்தப் படம் மீராபாய் சானுவின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டது. கமர்ஷியல் காரணங்களுக்காக சில புனைவு காட்சிகள், கதாபாத்திரங்களும் இடம்பெறும். மீராபாய் சானு, அவர் பெற்றோர் தவிர்த்து மற்ற கதாபாத்திரங்கள் ஏதும் யாரையேனும் குறிக்கும்படி இருந்தால், அது முழுக்க முழுக்க தற்செயலே.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மறுநாள் காலை. பயிற்சி செய்துகொண்டிருக்கிறார் மீரா. ரெகுலரான வார்ம் அப்கள் முடித்துவிட்டு வெயிட் பக்கம் வருகிறாள். எடை 70 கிலோவில் இருக்கிறது. ஸ்னாட்ச் முறையில் அந்த எடையைத் தூக்க முற்படுகிறாள் மீரா. குனிந்து வெயிட்டை தலைக்கு மேலே தூக்கிவிட்டார். ஆனால், அவரால் நிமிர முடியவில்லை. தன் உடல் எடையை மேலே தூக்க முடியவில்லை. கீழே போட்டுவிடுகிறார். எடையைத் தூக்க முடியாத வருத்தம் அவர் முகத்தில் தெரிகிறது. மீண்டும் தூக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்.

மீராவை நோக்கி வரும் ஒரு பெண், “கோச் கூப்பிட்றாரு” என்று சொல்லிவிட்டு நகர்கிறார். தள்ளி நின்று தன்னைப் பார்த்துக்கொண்டிருக்கும் பயிற்சியாளரை நோக்கிப் போகிறார் மீரா. முதல் நாள் தங்களிடம் கராறாகப் பேசிய விக்ரம் ரத்தோருக்கு சுமார் 40-45 வயது இருக்கும். நல்ல மிடுக்கான தோற்றம். இன்னும் ஒரு முடி கூட நரைக்கவில்லை. எந்தவொரு பயில்வானையும் வீழ்த்திவிடும் உடல்வாகு கொண்டிருந்தாலும், உடலில் கம்பீரத்தைக் காட்டிக்கொள்ளாமல் கண்களில் புதைத்து வைத்திருந்தார். தயங்கித் தயங்கி வந்துகொண்டிருந்த மீராவின் உடலில் பயத்தைப் பாய்ச்சியிருந்தது அந்தப் பார்வை.

கோச்: “ஆசியன் ஜூனியர்ஸ்ல எவ்ளோ வெயிட் தூக்குன?”

மீரா: “168 கிலோ சார்”

கோச்: “பட்டியாலா வந்த அப்றம் அதிகமா எவ்ளோ தூக்கிருக்க?”

மீரா: “165 சார்”

கோச்: “ஏன் வண்டி ரிவர்ஸ்ல போயிட்டிருக்கு?”

அமைதியாக நிற்கிறாள் மீரா. தலை குனிந்து கீழே பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

கோச்: “மேல பாரு முதல்ல”

நிமிர்ந்து கோச்சின் கண்களைப் பார்க்கிறார்

கோச்: “ஒரு ஸ்போர்ட்ஸ் பெர்சன் மாதிரியா இருக்க. அசிங்கமா தலையை குனிஞ்சிகிட்டு. தோத்தாலும் நேரா பாக்கணும். 100 தடவை தோத்தாலும் நேரா பாக்கணும். என்ன?”

தலையாட்டுகிறாள்.

கோச்: “சரி என்ன பிரச்னைனு சொல்லு”

மீரா: “ஒண்ணும் இல்ல சார். இனி நல்லா பண்ணிடுவேன்”

கோச்: “எப்டி தினமும் அழுதுகிட்டேவா?”

மீராவுக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. எச்சிலை விழுங்கிக்கொண்டே கீழே தலை குனிகிறது. கோச் முன்பு சொன்னது நினைவுக்கு வர மீண்டும் நிமிர்கிறாள்.

கோச்: “நியூஸ் வந்துச்சு. உன்ன ரொம்ப கஷ்டப்படுத்தறாங்க, ஹிந்தி புரியல அப்டினு போன் பண்ணி அழுதியாமே”

என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறாள் மீரா.

கோச்: “எனக்கு எப்படி மீத்தேய் மொழி தெரியும் தெரியுமா”

இல்லை என்று தலையாட்டுகிறாள் மீரா.

கோச்: “என் வைஃப் உங்க ஸ்டேட் பொண்ணுதான். ரெண்டு பேரும் இதே அகாடெமில இருந்தோம். நான் வெயிட் லிஃப்ட்டிங். அவ அத்லெட்டிக்ஸ். செமையா ஓடுவா. லவ் பண்ணோம். ரொம்பவே. அவளும் உன்னை மாதிரிதான். மத்தவங்களாம் வித்யாசமா பாக்குறாங்கனு அழுவா. அவளுக்கு ஆறுதல் சொல்ல ரொம்ப வேகமா மீத்தேய் கத்துக்கிட்டேன். கல்யாணம் பண்ணிகிட்டா அவ கொஞ்சம் நிம்மதியா இருப்பான்னு நினைச்சேன். கேட்டுட்டேன். அவளும் தலையாட்டிட்டா. இன்னைக்கு என் பையன் ஸ்கூல் போயிட்டு இருக்கான். அவனை அத்லெட் ஆக்கணும்னு ஆசைப்படுறா” என்று சொல்லி நிறுத்தினார்.

மீரா லேசாகச் சிரிக்கிறாள்

கோச்: “ஆனா, அவளை நான் அத்லெட்டாக விடல. என் காதல் விடலைனு மறுபடித்தான் புரிஞ்சுது. நான் நல்லா பேச ஆரம்பிச்சதும் ஆறுதல் தேட தோள் கிடைச்சிடுச்சுனு ரொம்ப புலம்ப ஆரம்பிச்சா. நாம வேற ஆம்பளையாச்சே. கண்ணீர் சிந்துற பொண்ணுக்கு ஆறுதல் சொல்றதும், அதைத் தேத்துறதும்தான் நம்ம கடைமைனு நினைச்சு அவ அழும்போதெல்லாம் கண்ணீரைத் துடைச்சேன். ரொம்ப vulnerable-ஆ இருக்க பொண்ணுகிட்ட கேட்கக்கூடாத கேள்வி, கல்யாணம் பண்ணிக்கிறியான்றது. அதையும் கேட்டேன். இன்னைக்கு அவ ஹோம் மேக்கர்"

ஒரு இடைவெளி விட்டு, "ஆனா, நான் வேஸ்ட் பண்ணது ஒரு அத்லெட் மட்டும் கிடையாது. பல பொண்ணுகளோட ரோல் மாடலை”

மீராவின் உதடுகளில் இப்போது சிரிப்பு இல்லை.

கோச்: “நீ மெடல் ஜெயிச்சே ஆகணும்னு நான் சொன்னதுக்குக் காரணம் அதுதான். நீ ஜெயிச்சாத்தான் நூறு பொண்ணுங்க முன்னாடி வருவாங்க. உன் சமுதாயம் முன்னாடி வரும். அதையெல்லாத்தையும்விட முக்கியமா இன்னைக்கு உன்னை கேலி பண்றவங்களுக்கு உன்மேல மரியாதை வரும். அந்த மரியாதைக்காக நீ ஜெயிச்சுத்தான் ஆகணும்”

மீரா நிமிர்ந்து பார்க்கிறாள்.

கோச்: “வெள்ளைக்காரன் கோட்டையைப் பிடிக்கிற வரைக்கும் ராஜாக்கள்தான் சண்டைப் போட்டாங்க. என்னைக்கு அவன் சட்டையைப் பிடிக்க ஆரம்பிச்சானோ அப்பத்தான் சாமானியனும் போராட ஆரம்பிச்சான். இங்க பல பேரோட போராட்டம் அந்த மரியாதைக்காகத்தான். நீயும் போராடணும். ஜெயிக்கணும். புரியுதா”

மேலும் கீழும் தலையாட்டுகிறாள் மீரா.

கோச்: “போய் பிராக்டீஸ் கன்டின்யூ பண்ணு”

தலையாட்டிவிட்டு நகர்கிறாள் மீரா. அவளையே பார்த்துக்கொண்டிருக்கிறார் விக்ரம் ரத்தோர். வேகம் கொஞ்சம் கொஞ்சமாக கூடுகிறது. போய் வெயிட்டின் முன் நிற்கிறாள். கீழே குனிந்தவள், சடாரென்று நிமிர்கிறாள். அருகில் இருந்த வெயிட்டை எடுத்துவந்து மொத்த எடையைக் கூட்டுகிறாள். 70 கிலோ 72 ஆகிறது. கீழே குனிந்து வெயிட்டில் கைவைக்கிறார். “மரியாதைக்காக ஜெயிக்கணும்” எனும் விக்ரம் ரத்தோரின் குரல் ஒலிக்கிறது. தூக்கிய வேகத்தில் மொத்தமாக நிமிர்கிறாள். பின்னால் விக்ரம் ரத்தோர் கைதட்டும் ஒலி கேட்கிறது.

CUT

—————

மீரா வெறித்தனமாகத் தன் பயிற்சிகளைத் தொடங்குகிறார். ஒவ்வொரு நாளும் ஜெயிக்கவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவள் மனதில். முன்பு தங்கம் தெரிந்த கண்களில் இப்போது தனக்கு மரியாதை செலுத்தும் மற்ற வீரர்களின் பிம்பங்கள் தோன்றுகிறது. 2012 கடைசியில் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் 168 கிலோ தூக்கிய மீரா, அதன்பிறகு நடந்த 2013 ஜூனியர் உலக சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப் தொடர்களில் 165 கிலோ மட்டுமே தூக்கினார். 2013 காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் 166 கிலோ தூக்கினார். ஒவ்வொரு தொடரிலும் டாப் 3 பொசிஷன்களில் முடித்திருந்தாலும், தூக்கும் எடை அதிகரிக்கவில்லை.

பட்டியாலாவில் நடந்த சம்பவங்கள் அவர் செயல்பாட்டில் அந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. ஆனால், தன் கோச் பேசிய பிறகு வெகுண்டெழுந்த மீரா மீண்டும் தன் பழைய ஃபார்மை மீட்டெடுத்தார். 2014 ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் பழைய எடையான 168 கிலோ தூக்கி வெள்ளிப் பதக்கம் வெல்கிறார் மீரா. சந்தோஷமாகத் தன் பயிற்சியாளரிடம் சென்று நிற்கிறார்.

கோச்: “ரொம்ப சந்தோஷமா இருக்க போல”

மீரா: “ஆமா கோச்”

கோச்: “ஸ்னாட்ச்ல உன் பெர்சனல் பெஸ்ட் எவ்ளோ”

மீரா: “75”

கோச்: “இன்னைக்கு எவ்ளோ தூக்குன?”

மீரா: “75”

கோச்: “குட். குட். கிளீன் & ஜெர்க்ல?”

மீரா: “94”

கோச்: “இன்னைக்கு தூக்குனது?”

மீரா: “93”

கோச்: “அந்த 94 கிலோவை 2012-ல இதே ஜூனியர் ஆசியன்ல தூக்குனது. ரெண்டு வருஷம் கழிச்சு, அதே டோர்னமென்ட்ல ஒரு கிலோ கம்மியா தூக்கிருக்க. பத்தாது மீரா”

மீரா சிறு புன்னகையோடு தலையாட்டுகிறாள்.

கோச்: “ஜீனியர் ஆசியன், ஜூனியர் காமன்வெல்த், ஜூனியர் வேர்ல்ட். இதுல ஜெயிக்கிறதெல்லாம் கொஞ்சம்கூட போதாது. இந்த டோர்னமென்ட்லலாம் இம்ப்ரூவ்மென்ட் காட்டணும். வெறும் மெடல் பத்தாது”

மீரா: “நிச்சயமா இம்ப்ரூவ்மென்ட் காட்டுவேன் கோச்”

CUT

—————

ஜூனியர் ஆசியன் கேம்ஸில் வென்ற பதக்கத்தை ஓரமாக வைத்துவிட்டுத் தன் பயிற்சியைத் தொடங்குகிறார் மீரா. காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து கிரவுண்டில் ஓடத் தொடங்குகிறார். அவர் ஓடி முடித்து வரும்போது சில வீரர்கள் பயிற்சியைத் தொடங்க வருகிறார்கள். அதில் ஒருவன் “நீ ஜூனியர் ஆசியால செகண்ட் தான” என்று கேட்கிறான்.

மீரா: “ஆமாணா”

“பார்றா ஃபர்ஸ்டும் சைனா, செகண்டும் சைனா” என்று தன் நண்பனிடம் சொல்கிறான்.

எல்லோரும் சிரிக்கிறார்கள். அவர்களைப் பார்த்து மீராவும் சிரித்துவிட்டு நகர்கிறாள்

CUT

—————

கிளாஸ்கோ. 2014 காமன்வெல்த் போட்டிகள். ஸ்னாட்சில் 75 கிலோ, கிளீன் & ஜெர்க்கில் 95 கிலோ என 170 கிலோ எடை தூக்கி, 48 kg பிரிவில் வெள்ளிப் பதக்கம் வெல்கிறார் மீரா. முடிவு உறுதியானதும் சந்தோஷத்தில் கோச்சைக் கட்டியனைக்கிறார்.

கோச்: “சில்வர் மெடல் ஜெயிச்ச சந்தோஷமா”

மீரா: “இல்ல கோச். கிளீன் & ஜெர்க்ல என்னோட பெஸ்ட் தூக்கிருக்கேன்ல இன்னைக்கு”

அதைக் கேட்டதும் மீராவைக் கட்டி உச்சிமுகர்கிறார் விஜய் ரத்தோர்.

CUT

—————

இரண்டு மாதங்கள் கழித்து… இன்சியான் ஆசியன் கேம்ஸ்.

கோச்: “ஜூனியர் ஆசியன்ல மெடல் வந்திடுச்சு. காமன்வெல்த்ல மெடல் வந்திடுச்சு. ஆனா, இங்க கஷ்டம் மீரா. சைனா, கொரியானு நிறைய போட்டி இருக்கு”

தலையாட்டும் மீரா, அந்தப் போட்டியில் சிறப்பாக செயல்படுகிறார். ஸ்னாட்சில் 75 கிலோ, கிளீன் & ஜெர்க்கில் 96 கிலோ என 171 கிலோ எடை தூக்கி ஒன்பதாம் இடம் பிடிக்கிறார்.

மீரா: “இம்ப்ரூவ்மென்ட் காட்டிட்டேன்ல கோச்”

சிரித்துக்கொண்டே மீராவின் தலையில் தட்டிக்கொடுக்கிறார்.

CUT

—————

நவம்பர். கஜகஸ்தானில் நடந்த IWF உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று முடித்துவிட்டு வந்திருக்கிறார் மீரா. பட்டியாலா வந்தடைந்ததும் வீட்டுக்கு போனில் பேசுகிறார்.

தாம்பி: “என்னடி 11-வது இடம்தான் கிடைச்சிருக்கு. ஃபீல் பண்றியா என்ன?”

மீரா: “ச்ச ச்ச… போன மாசம் வரைக்கும் 171 கிலோதான் தூக்குனேன். இந்த டோர்னமென்ட்ல 172 கிலோ தூக்கிருக்கேன். இப்போ மெடல் முக்கியம் இல்லமா. இம்ப்ரூவ்மென்ட் காட்டணும். ஒவ்வொரு முறையும் என்னை நானே ஜெயிச்சிட்டு இருக்கேன். சந்தோஷமா இருக்கு”

CUT

—————

தொடரும்…