Published:Updated:

ஹாக்கி : குர்ஜித் கவுரின் ஒற்றை கோல்... அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா! LIVE UPDATES

டோக்கியோ ஒலிம்பிக்கின் மகளிர் ஹாக்கி காலிறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது.

02 Aug 2021 8 AM

இந்திய மகளிர் ஹாக்கி அணி தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. முதல்முறையாக இந்திய மகளிர் அணி காலிறுதியில் விளையாடுகிறது.

02 Aug 2021 8 AM

இந்தியாவின் ஸ்டார்ட்டிங் லெவன் : ராணி ராம்பால்(கேப்டன்), சவிதா (கோல் கீப்பர்), வந்தனா கட்டாரியா, குர்ஜித் கவுர், தீப் கிரேஸ் எக்கா, உதிதா, நிஷா, நேஹா, மோனிகா, நவ்ஜோத் கவுர், நவ்னீத் கவுர்.

02 Aug 2021 8 AM

15 நிமிட ஆட்டம் முடிந்தது. இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. ஆட்டம் 0-0 என தொடர்கிறது.

02 Aug 2021 8 AM

ஆட்டத்தில் இதுவரை இரு அணிகளுக்குமே பெனால்ட்டி கார்னர் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்திய அணியின் டிஃபென்ஸ் பலமாக இருப்பதால் ஆஸ்திரேலியாவின் கோல் அடிக்கும் முயற்சிகள் தடுக்கப்பட்டு வருகிறது.

02 Aug 2021 9 AM

ஆஸ்திரேலியாவின் முதல் பெனால்ட்டி கார்னர் வாய்ப்பை சிறப்பாகத் தடுத்தார் இந்தியாவின் சவிதா. ஆட்டம் 0-0 என நீடிக்கிறது.

02 Aug 2021 9 AM

இந்தியாவின் குர்ஜித் கவுர் கோல் அடிக்க இந்தியா 1-0 என முன்னிலைப் பெற்றிருக்கிறது.

02 Aug 2021 9 AM

முதல் பாதி ஆட்டம் முடிந்த நிலையில் இந்திய 1-0 என லீடிங்கில் இருக்கிறது.

02 Aug 2021 9 AM

வரலாற்று வெற்றியை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது இந்தியா. Q3 ஆட்டம் முடிந்த நிலையில் இந்தியா தொடர்ந்து 1-0 என் முன்னிலை!

02 Aug 2021 10 AM

ஆஸ்திரேலியாவின் அடுத்தடுத்த பெனால்ட்டி கார்னர் வாய்ப்புகளைத் தடுத்த இந்தியா. 1-0 என வெற்றியை நோக்கி பயணிக்கிறது.

02 Aug 2021 10 AM

ஆஸ்திரேலியாவை 1-0 என வீழ்த்தி இந்திய மகளிர் அணி வரலாற்று வெற்றி. முதல்முறையாக அரையிறுதிக்குள் நுழைந்து சாதனை.

02 Aug 2021 10 AM

ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் குர்ஜித் கவுர் அடித்த பெனால்ட்டி கார்னர் கோல் மூலம் இந்தியா வெற்றிபெற்றிருக்கிறது. ஆஸ்திரேலியாவின் கோல் அடிக்கும் முயற்சிகள் அனைத்தையும் தடுத்து நிறுத்தியது இந்தியாவின் டிஃபென்ஸ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு