Published:Updated:

Olympics Trivia: 72 வயதில் ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்!

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் தொடரான ஒலிம்பிக் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள் இங்கே...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஒலிம்பிக் தொடக்கவிழா நிகழ்வுகளில் பங்கேற்கும் ஒவ்வொரு நாடும் அணிவகுப்பில் கலந்துகொள்ளும். அந்த அணிவகுப்பு கிரேக்க அகரவரிசையின்படி நடக்கும். ஆனால், முதலில் வருவது எப்போதும் கிரீஸ்தான். ஒலிம்பிக்கின் தொடக்கம் கிரீஸ்தான் என்பதால் அந்த அணிதான் அணிவகுப்பைத் தொடங்கும். அதற்கடுத்து அகதிகள் கலந்துகொள்ளும் 'Refugee Olympic Team'. கடைசியாக, போட்டியை நடத்தும் நாடு வந்து அணிவகுப்பை முடித்துவைக்கும்.

இதுவரை லண்டன் மட்டும் 3 ஒலிம்பிக் தொடர்களை நடத்தி முடித்திருக்கிறது. 1908, 1948, 2012. ஏதன்ஸ், லாஸ் ஏஞ்சலஸ், பாரிஸ் ஆகிய மூன்று நகரங்களிலும் 2 முறை ஒலிம்பிக் தொடர் நடந்திருக்கிறது.

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டும் இடம்பெறவேண்டும் என்று சில பல ஆண்டுகளாகவே பலரும் கோரிக்கை விடுத்துக்கொண்டிருக்கின்றனர். அதிலும் டி-20 ஃபார்மேட்டின் எழுச்சிக்குப் பிறகு, அதை சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துக்கொண்டே இருக்கிறது. 1900 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டும் இடம்பெற்றிருந்தது. இங்கிலாந்து, பிரான்ஸ் என இரண்டு அணிகள் மட்டுமே கலந்துகொண்டு முறையே தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றிருந்தன.

Oscar Swahn
Oscar Swahn

ஒலிம்பிக் தொடரில் பங்கேற்ற மிகவும் வயதான வீரர் ஸ்வீடனைச் சேர்ந்த ஆஸ்கர் ஸ்வான். 1908 ஒலிம்பிக்கில் தன் அறுபதாவது வயதில் பங்கேற்ற அவர், துப்பாக்கி சுடுதலில் 2 தங்கம், 1 வெண்கலம் என மூன்று மெடல்கள் வென்றார். 1912 ஒலிம்பிக்கில் 1 தங்கம், 1 வெண்கலம் வென்று அசத்தினார். 1920 ஒலிம்பிக்கில் மீண்டும் பங்கேற்ற அவர், 1 வெள்ளிப் பதக்கம் வென்றார். அப்போது அவருக்கு வயது 72 வருடம் 280 நாள்கள்! அந்த ஒலிம்பிக்கில் அவரது மகன் ஆல்ஃப்ரட் ஸ்வானும் பங்கேற்றிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கனடாவைச் சேர்ந்த குதிரையேற்ற வீரரான இயான் மில்லர், 10 ஒலிம்பிக் தொடர்களில் பங்கேற்றிருக்கிறார். அதிக ஒலிம்பிக் தொடர்களில் பங்கேற்ற வீரர் இவர்தான். 'Show Jumping' எனப்படும் விளையாட்டில் பங்கேற்கும் அவர் 1972 ஒலிம்பிக்கில் முதல் முறையாகப் பங்கேற்றார். 2012-ம் ஆண்டு வரை பங்கேற்ற அவர், நடுவே 1980 ஒலிம்பிக்கில் மட்டும் கலந்துகொள்ளவில்லை. 10 ஒலிம்பிக்கில் பங்கேற்றிருந்தாலும் 2008 பீஜிங் ஒலிம்பிக்கில் மட்டுமே அவர் பதக்கம் (1 வெள்ளி) வென்றிருந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு