Published:Updated:

தருன்தீப் ராய் - மூன்றாவது வாய்ப்பில் ஒலிம்பிக் பதக்கம் கிடைக்குமா?

Tarundeep Rai
Tarundeep Rai

சுமார் இருபது வருடங்களாக இந்திய வில்வித்தை அணியில் முக்கிய அங்கம் வகித்து வரும் 37 வயதாகும் தருன்தீப் ராய் டோக்கியோ ஒலிம்பிக்குடன் ஓய்வு பெற உள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்திய வில்வித்தை ஆண்கள் அணியில் சீனியர் வீரர் தருன்தீப் ராய். 2004 (ஏதென்ஸ்) மற்றும் 2012 (லண்டன்) என ஏற்கனவே இருமுறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றவர் தருன்தீப். அவ்விரு முறையும் கைகூடாத அவரின் பதக்க கனவு இம்முறை நிச்சயம் நிறைவேறிவிடும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. அதற்குக் காரணம், சமீபத்திய போட்டிகளில் அவரின் மிகச்சிறப்பான செயல்பாடுகள்.

2019-ம் ஆண்டு நடைபெற்ற உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் இடம்பெற்றிருந்த இந்திய ரீகர்வ் அணி வெள்ளி பதக்கம் வென்று டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான தகுதியையும் சேர்த்து பெற்றிருந்தது. அடானு தாஸ், பிரவீன் ஜாதவ் மற்றும் தருன்தீப் ராய் ஆகியோர் அடங்கிய இந்த மூவர் கூட்டணியில் தற்போது அனைவருமே சிறந்த ஃபார்மில் உள்ளதால் மிகுந்த நம்பிக்கையுடன் டோக்கியோ சென்றிருக்கிறனர்.

சிக்கிம் மாநிலம் நம்சி பகுதியில் 1984-ம் ஆண்டு பிப்ரவரி 22 பிறந்தவர் தருன்தீப் ராய். இந்திய கால்பந்து ஜாம்பவான்களுள் ஒருவரான பைசூங் பூட்டியா தருன்தீப்பின் மிக நெருங்கிய உறவினர். 2003-ம் ஆண்டு மயான்மரில் நடைபெற்ற ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியே இந்தியா சார்பாக தருன்தீப் போட்டியிட்ட முதல் போட்டி. அதற்கு அடுத்த வருடமே பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய கிராண்ட் பிரீயில் தங்கம் வென்று அசத்தினார் அவர்.

Tarundeep Rai
Tarundeep Rai

2005-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்பின் ஆண்கள் ரீகர்வ் பிரிவில் வெண்கலம், ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் 2005-ம் ஆண்டு உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் வெள்ளி, 2006 தோஹாவில் ஆசிய போட்டிகளில் வெண்கலம் என தொடர்ந்த அவரின் வெற்றிகளால் இந்திய வில்வித்தை அணியின் தவிர்க்கமுடியாத வீரரானார். 21 வயதே நிரம்பிய தருன்தீப்பின் சிறப்பான செயல்பாடுகளால் 2005-ம் ஆண்டு அவருக்கு அர்ஜுனா விருது அளித்து கௌரவித்தது இந்திய அரசு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Tokyo Olympics : வில்வித்தை ரேங்கிங் சுற்று: தீபிகா குமாரி - 9; பிரவீன் ஜாதவ் - 31

தன் கரியரின் தொடக்கத்தில் இருந்து அணி பிரிவில் மட்டுமே பதக்கங்களை வென்று வந்த தருன்தீப் 2010ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் முதன்முறையாக வெள்ளி வென்று சாதனை படைத்தார். சர்வதேச வில்வித்தை போட்டிகளில் ஓர் இந்தியர் ஒற்றையர் பிரிவில் பதக்கம் வெல்வதும் அதுவே முதல்முறை.

சுமார் இருபது வருடங்களாக இந்திய வில்வித்தை அணியில் முக்கிய அங்கம் வகித்து வரும் 37 வயதாகும் தருன்தீப் ராய் டோக்கியோ ஒலிம்பிக்குடன் ஓய்வு பெற உள்ளார். எனவே தனது நீண்ட நாள் ஒலிம்பிக் பதக்க கனவை தனது கடைசி ஒலிம்பிக்கில் வென்றிட நிச்சயம் போராடுவார் தருன்தீப்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு