Published:Updated:

எடையைக் குறைக்க டேபிள் டென்னிஸுக்குள் வந்தவர்... போராடி வென்ற சுதிர்தா முகர்ஜியின் கதை!

சுதிர்தா முகர்ஜி ( SAIMedia )

தடையிலிருந்து மீண்டு வந்த சுதிர்தா இதற்கு பிறகு செய்ததெல்லாம் புலிப்பாய்ச்சல்தான். சர்வதேச தரவரிசையில் ஒரே வருடத்தில் 502-வது இடத்திலிருந்து 100-வது இடத்துக்குள் முன்னேறினார். 

எடையைக் குறைக்க டேபிள் டென்னிஸுக்குள் வந்தவர்... போராடி வென்ற சுதிர்தா முகர்ஜியின் கதை!

தடையிலிருந்து மீண்டு வந்த சுதிர்தா இதற்கு பிறகு செய்ததெல்லாம் புலிப்பாய்ச்சல்தான். சர்வதேச தரவரிசையில் ஒரே வருடத்தில் 502-வது இடத்திலிருந்து 100-வது இடத்துக்குள் முன்னேறினார். 

Published:Updated:
சுதிர்தா முகர்ஜி ( SAIMedia )

எல்லாருக்கும் எப்போதும் ஒரு இரண்டாம் வாய்ப்பு அவ்வளவு எளிதாக கிடைத்துவிடாது. அப்படி கிடைக்கும்பட்சத்தில் அதை உறுதியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும். டேபிள் டென்னிஸ் வீராங்கனையான சுதிர்தா முகர்ஜி அதைதான் செய்துக்கொண்டிருக்கிறார். ஒரு வருடம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் ரியோ ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தவர் அதிலிருந்து மீண்டு வந்து இப்போது டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்று, முதல் சுற்றில் போராடி வெற்றியும் பெற்றுவிட்டார்.

கொல்கத்தாவிலுள்ள நைஹாட்டி எனும் ஊரை சேர்ந்தவரே சுதிர்தா. 1995-ல் பிறந்த இவர், சிறுவயதில் கொஞ்சம் உடல் எடை அதிகம் இருந்ததால், ஏதாவது ஒரு விளையாட்டில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும் என அவருடைய அம்மா முடிவு செய்துள்ளார். வீட்டிற்கு அருகே டேபிள் டென்னிஸுக்கென்றே பெயர் போன அகாடமி இருக்க அதிலேயே தனது மகளை சேர்த்திருக்கிறார். அந்த அகாடமியில் மீர் கோஷ் என்பவரிடமே ஆரம்பகால பயிற்சிகளை எடுத்திருக்கிறார். பெரிய ஆர்வமின்றி டேபிள் டென்னிஸ் ஆட சென்றிருந்தாலும் சில போட்டிகளில் வெற்றி பெற்றவுடன் முழு ஈடுபாட்டோடு டேபிள் டென்னிஸில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார்.

கொஞ்சம் வளர்ந்த பிறகு, உதய்பூரில் அகாடமி நடத்தி வரும்  முன்னாள் வீராங்கனைகளான சௌமியாதீப் ராய், பலோமி கதாக் இருவரிடமும் பயிற்சிக்கு சேர்ந்தார். சுதிர்தாவின் அம்மாவும் உதய்பூரில் அவருடனே தங்கி உறுதுணையாக இருந்திருக்கிறார்.

ஜுனியர் அளவிலான ஆசிய, உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொண்டவர், ரியோ ஒலிம்பிக்கிற்கான தகுதிச்சுற்றில் ஆடுவதற்கு மிகுந்த ஆர்வத்தோடு காத்திருந்தார். இந்நேரத்தில்தான், இடியென ஒரு பிரச்சனை சுதிர்தாவை தாக்கியது.

2015-ல் சான்றிதழ்களில் சரியான வயதை குறிப்பிடவில்லை எனக் கூறி, சுதிர்தாவுக்கு ஒரு வருடம் தடைவிதிக்கப்பட்டது. அந்த சமயத்தில் சுதிர்தாதான் இந்தியாவின் நம்பர் 1 வீராங்கனையாக இருந்தார். ரியோ ஒலிம்பிக்கிற்கு நிச்சயம் செல்வார் என்ற நிலையில் இந்த தடையால் அந்த வாய்ப்பை இழந்து சுக்குநூறாக நொறுங்கி போனார்.
சுதிர்தா முகர்ஜி
சுதிர்தா முகர்ஜி
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அம்மாவின் அரவணைப்பு மற்றும் பயிற்சியாளர்களின் ஊக்குவிப்பால் இந்த தடையிலிருந்து மீண்டு வந்த சுதிர்தா இதற்கு பிறகு செய்ததெல்லாம் புலிப்பாய்ச்சல்தான்.  2017 மற்றும் 2019 ஆண்டுகளில் தேசிய அளவில் சாம்பியன் ஆனார். 2018 காமன்வெல்த் போட்டியில் அணிகளுக்கான பிரிவில் மற்ற வீராங்கனைகளோடு சேர்ந்து தங்கம் வென்றிருந்தார். சர்வதேச தரவரிசையில் ஒரே வருடத்தில் 502-வது இடத்திலிருந்து 100-வது இடத்துக்குள் முன்னேறினார். 

2019 அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீகில் அனைத்து போட்டிகளையும் வென்று அசத்தினார். தரவரிசை பட்டியலில் டாப் 20-ல் இருக்கும் ஜெர்மனி வீராங்கனையையும் இதில் வீழ்த்தி ஆச்சர்யப்படுத்தியிருந்தார்.

இதனைத்தொடர்ந்தே, இந்தியாவின் தற்போதைய நம்பர் 1 வீராங்கனையான மனிகா பத்ராவை ஒலிம்பிக்கிற்கான ஆசிய தகுதிச்சுற்று போட்டியில் வீழ்த்தி, டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒற்றையர் பிரிவிற்கு தகுதிப்பெற்றார்.

அந்த ஒரு வருட தடைக்கு பிறகு சுதிர்தா அடைந்திருக்கும் உச்சம் மலைப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுவரை இந்திய வீராங்கனைகள் செய்யாத சாதனைகளை செய்ய வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறேன்.
சுதிர்தா முகர்ஜி

டோக்கியோ ஒலிம்பிக்கின் முதல் சுற்றில் ஸ்வீடனின் லிண்டாவோடு மோதினார் சுதிர்தா. 7 செட்கள் கொண்ட ஆட்டத்தில் போராடி 4-3 என வென்று அடுத்த சுற்றுக்குள் முன்னேறியிருக்கிறார் சுதிர்தா முகர்ஜி. இரண்டாவது சுற்றில் வரும் திங்கட்கிழமை போர்ச்சுகலின் ஃபூ யூ எனும் வீராங்கனையோடு மோத இருக்கிறார் சுதிர்தா.

டோக்கியோ ஒலிம்பிக்கில் சுதிர்தாவின் அற்புதங்களும் அதிசயங்களும் தொடர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்!