Published:Updated:

செய்தியாக அல்ல வரலாறாகப் பதிய வேண்டும் - அபூர்வி சந்தேலாவின் லட்சியக் கனவு!

அபூர்வி சந்தேலா

2019 ல் மட்டும் உலகக்கோப்பை போட்டிகளில் மூன்று தங்கம் இரண்டு வெள்ளி என ஐந்து பதக்கங்களை வென்றார். 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவு டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான டிக்கெட் அபூர்வியை தேடி வந்தது.

செய்தியாக அல்ல வரலாறாகப் பதிய வேண்டும் - அபூர்வி சந்தேலாவின் லட்சியக் கனவு!

2019 ல் மட்டும் உலகக்கோப்பை போட்டிகளில் மூன்று தங்கம் இரண்டு வெள்ளி என ஐந்து பதக்கங்களை வென்றார். 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவு டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான டிக்கெட் அபூர்வியை தேடி வந்தது.

Published:Updated:
அபூர்வி சந்தேலா
'யாரையோ பற்றிய செய்தியை எழுதுவதை விட நானே தலைப்புச் செய்தியாக மாற விரும்பினேன்' பத்திரிகையாளராக இருந்து பிரிட்டன் பிரதமராக மாறிய வின்ஸ்டன் சர்ச்சிலின் வார்த்தைகள் இவை.
இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனையான அபூர்வி சந்தேலாவுமே கூட இதே போன்ற எண்ணத்தை உடையவர்தான்.

28 வயதாகும் அபூர்வி ராஜஸ்தானின் ஜெய்பூரில் பிறந்தவர் ஒரு பெரிய ஊடக நிறுவனத்தில் விளையாட்டுப் பிரிவு செய்தியாளராக வேண்டும் என்பதே அவரின் ஆசை. விளையாட்டுகளை பற்றியும் விளையாட்டு வீரர்கள் பற்றியும் எழுத நினைத்தவரின் எண்ணவோட்டத்திக் திடீர் மாற்றம் உண்டானது. காரணம், அபினவ் பிந்த்ரா. 2008 பீஜிங் ஒலிம்பிம்கில் 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கம் வென்று வரலாற்று வெற்றியை பெற்றிருந்தார் அபினவ். ஒட்டுமொத்த இந்தியாவும் அவரை கொண்டாடியது. எங்கு காணினும் அவர் பெயரை உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இதுதான் அபூர்வின் வாழ்வை மாற்றிய சம்பவமாக மாறியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லட்சக்கணக்கான இளைஞர்களை போல அபூர்விக்கும் அபினவ் பிந்த்ராவே இன்ஸ்பிரேஷன் ஆகிப்போனர். வின்ஸ்டன் சர்ச்சியிலுக்கு உதயமான அதே எண்ணம் அபூர்விக்கும் உதயமானது. நாம் ஏன் பிறரை பற்றிய செய்தியை எழுத வேண்டும்? நாமே செய்தியானால் என்ன? இந்த கேள்வி தோன்றிய அடுத்த கணமே கைகளில் துப்பாக்கியை எந்த தொடங்கிவிட்டார் அபூர்வி. செய்தி எழுதப்போகிறேன் எனச் சொன்னவர் செய்தியாக போகிறேன் எனச் சொன்னால் எந்த பெற்றோருக்குத்தான் மகிழ்ச்சியாக இருக்காது? அபூர்விக்கு தங்களால் முடிந்த அத்தனை உதவிகளையும் செய்து கொடுத்தனர் அவரது பெற்றோர். அபினவ் பிந்த்ரா கொடுத்த ஊக்கம், பெற்றோர் கொடுத்த ஆதரவு எல்லாம் சேர்ந்து அபூர்வியின் துப்பாக்கிகளுக்கு ஒரு ஸ்திரத்தன்மையை கொடுத்தது. டார்கெட்கள் லாக் செய்யப்பட்டன. இலக்குகள் துல்லியமாக துளைக்கப்பட்டது. தொடர் வெற்றிகள் அபூர்வியின் முன் வரிசை கட்டின.

10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் 2014 காமென்வெல்த் போட்டியில் தங்கம், 2015 முதல் உலகக்கோப்பையிலேயே வெண்கலம் என ரியோ ஒலிம்பிக்கிற்கான இந்தியாவின் நம்பிக்கையாக உயர்ந்தார்.

பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளோரின் பட்டியலில் அபூர்வியின் பெயரை எல்லாரும் டாப்பில் வைத்திருந்தனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், அந்த ஒலிம்பிக்கில் அபூர்வி மொத்தமாக சொதப்பினார். பதக்கம் வெல்வார் என கணிக்கப்பட்டவர் 34 வது இடத்தை பிடித்து ஏமாற்றினார். தோல்விக்கான காரணங்களை கேட்பதற்கெல்லாம் யாரும் தயாராக இல்லை. ஆனால், அபூர்விக்கு மட்டுமே தெரியும் அந்த தோல்வி தன்னால் ஏற்பட்டதில்லை என்று. போட்டிக்கு முந்தைய நாள் இரவு அவருக்கு வழங்கப்பட்ட முறையற்ற க்ரையோதெரபி தாங்கமுடியாத கால் வலியை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு இடத்தில் நிலையாக நிற்க முடியாத அளவுக்கு சென்ற வலியே அபூர்வியின் தோல்விக்கு மூலக்காரணமாக இருந்தது.  இதெல்லாம் தெரியாதவர்கள் ஒரே நாளில் அபூர்வியை தூற்றி மறந்து போயினர். காரணங்களுக்கு காது கொடுக்க யாரும் தயாராக இல்லை. இந்த உலகத்தின் கவனத்தை தன் பக்கம் திருப்ப, மீண்டும் தன் பெயரை உச்சரிக்க வைக்க, தொடர் வெற்றிகளால் மட்டுமே முடியும் அபூர்விக்கு நன்றாக தெரிந்திருந்தது.

கொஞ்ச கால ஓய்விற்கு பிறகு 2018 லிருந்து மீண்டும் அதே பழைய துல்லியத்தோடு தோட்டாக்களைத் தெறிக்கவிட ஆரம்பித்தார்.

2019 ல் மட்டும் உலகக்கோப்பை போட்டிகளில் மூன்று தங்கம் இரண்டு வெள்ளி என ஐந்து பதக்கங்களை வென்றார். 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவு டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான டிக்கெட் அபூர்வியை தேடி வந்தது.
அபூர்வி சந்தேலா
அபூர்வி சந்தேலா
Apurvi's Twitter handle

முன்னணி வீராங்கனைகள் அத்தனை பேரும் வழிவிட கெத்தாக உலகின் நம்பர் 1 வீராங்கனை எனும் அரியாசனத்தில் ஏறி அமர்ந்தார். விளையாட்டுலகின் கவனம் மீண்டும் அபூர்வியின் பக்கம் திரும்பியது. ரியோ ஒலிம்பிக் தோல்விக்கு பிறகு தூற்றிய அத்தனை உதடுகளும் மீண்டும் அபூர்வியின் பெயரை பெருமையாக உச்சரிக்க தொடங்கின. எப்படி ரியோ ஒலிம்பிக்கிற்கான பதக்க வாய்ப்பு பட்டியலில் அவருடைய பிரதான இடம்பிடித்ததோ, அதைபோன்றே டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான பதக்க வாய்ப்பு பட்டியலிலும் அபூர்வியின் பெயரை பிரதானமாக வைத்திருக்கிறது விளையாட்டுலகம்.

சமீபத்தில் அவரின் டெக்னிக்கில் ஏற்பட்ட சில குழப்பங்கள், கொரோனா பாசிட்டிவ் இதையெல்லாம் கடந்து டோக்கியோவிற்கு நம்பிக்கையோடு பறந்திருக்கிறார் அபூர்வி. கடந்த ஒலிம்பிக்கின் போதும் அபூர்வி செய்தியாகியிருந்தார். ஆனால், அது யாரும் நினைவில் வைக்க விரும்பாத வகையில் அமைந்திருந்தது. இந்த முறை டோக்கியோவில் அதை தலைகீழாக்கும் லட்சியத்தோடு இருக்கிறார் அபூர்வி. வெறும் செய்தியாக மட்டுமில்லை வரலாறாக பதிய குறிவைத்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism