Published:Updated:

சரத் கமல் - மனிகா பத்ரா அதிர்ச்சி தோல்வி… டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் போட்டியில் ஏமாற்றம்!

சரத் கமல் - மனிகா பத்ரா
சரத் கமல் - மனிகா பத்ரா

முதல் சுற்றுப்போட்டியில் மனிகா - சரத் இணை சைனீஸ் தாய்பே வீரர்களுடன் மோதியது. உலக ரேங்க்கில் மூன்றாவது இடத்தில் இந்த சைனீஸ் தாய்பே இணை இந்திய இணையை 4-0 என தோற்கடித்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டோக்கியோ ஒலிம்பிக்கில் கலப்பு இரட்டையர் போட்டியில் இந்தியாவின் ஒரே போட்டியாளர்களான சரத் கமல் - மனிகா பத்ரா இணை அதிர்ச்சி தோல்வியடைந்திருக்கிறது.

முதல் சுற்றுப்போட்டியில் மனிகா - சரத் இணை சைனீஸ் தாய்பேவைச் சேர்ந்த லின் யுன் ஜு - செங் ஐ சிங் வீரர்களுடன் மோதியது. உலக ரேங்கிங்கில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்த சைனீஸ் தாய்பே இணை இந்திய இணையை 4-0 என தோற்கடித்தது.

சரத் - மனிகா
சரத் - மனிகா

4 கேம்களிலுமே இந்திய இணை 11-8, 11-6, 11-5, 11-4 எனத் தோல்வியைத் தழுவியது. இந்த ஆட்டம் மொத்தம் 27 நிமிடங்களே நீடித்தது.

அடுத்ததாக நடைபெற இருக்கும் பெண்கள் ஒற்றையர் போட்டியில் மனிகா பத்ரா, இங்கிலாந்து வீராங்கனையுடன் இன்று மதியம் 12.15 மணிக்கு நடைபெறும் முதல் சுற்றுப்போட்டியில் மோதுகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு