Published:Updated:

சந்தீப் குமார்... கொரோனாவை வென்றவர் டோக்கியோவில் நடந்தே வெல்லத் தயார்!

Sandeep Kumar

சர்வதேச அரங்கிலான தடகள போட்டிகளில் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றிகளை இந்தியா இதுவரை பெற்றதில்லை. அதிலும் குறிப்பாக கிழக்கு ஆப்பிரிக்கர்களின் கையே பெரும்பாலும் ஓங்கி இருக்கும் தொலைதூர பந்தயங்கள் இந்தியாவுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

சந்தீப் குமார்... கொரோனாவை வென்றவர் டோக்கியோவில் நடந்தே வெல்லத் தயார்!

சர்வதேச அரங்கிலான தடகள போட்டிகளில் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றிகளை இந்தியா இதுவரை பெற்றதில்லை. அதிலும் குறிப்பாக கிழக்கு ஆப்பிரிக்கர்களின் கையே பெரும்பாலும் ஓங்கி இருக்கும் தொலைதூர பந்தயங்கள் இந்தியாவுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

Published:Updated:
Sandeep Kumar

கனவாகவே இருக்கும் இந்த நடைபந்தய போட்டிகளின் சமீபத்திய நம்பிக்கை சந்தீப் குமார். தொலைதூர நடைபந்தைய வீரரான இவர் 2016-ம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் 50 கி.மீ நடைபந்தய போட்டியில் கலந்துகொண்டு 4.07.55 விநாடிகளில் 35-வது நபராக நிறைவு செய்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும் 2014-ம் ஆண்டு சீனாவின் டைஷங் நகரில் நடைபெற்ற IAFF அமைப்பின் உலக நடைபந்தய போட்டியின் மொத்த தூரத்தை 3.56.22 நேரத்தில் நிறைவு செய்த சந்தீப், இதன்மூலம் பசன்ட் பகதூர் ராணாவின் முந்தைய தேசிய சாதனையை தனதாக்கினார். இதுதவிர 2015-ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றுள்ளார் சந்தீப். கடந்த பிப்ரவரி மாதம் ராஞ்சியில் நடைபெற்ற தேசிய நடைபந்தய சாம்பியன்ஷிப்பின் 20 கி.மீ போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் சந்தீப். இப்போட்டியிலும் பந்தய தூரத்தை 1.20.16 நேரத்தில் நிறைவுசெய்து மற்றுமொரு தேசிய சாதனையை படைத்தார்.

Sandeep Kumar
Sandeep Kumar

ஹரியானா மாநிலம் மகேந்திரகர்க் மாவட்டத்தில் 1986-ம் ஆண்டு மே 1-ல் பிறந்தவர் சந்தீப் குமார். விவசாய குடும்பத்தை சேர்ந்த சந்தீப் இந்திய ராணுவத்தில் பணி சேர்ந்த பிறகுதான் நடைபந்தய போட்டி பற்றி முதன்முதலில் கேள்விப்பட்டுள்ளார். அதிலும் உத்தர பிரதேசத்தில் உள்ள ஜெட் ரெஜிமென்ட் சென்டரில் சேர்ந்த பிறகுதான் நடைபந்தயத்தில் தீவிரமாக பயிற்சி பெற்று ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற எண்ணம் சந்தீப்பின் மனதில் எழுந்திருக்கிறது.

கோவிட் பெருந்தொற்று காரணமாக சுமார் ஒரு வருட காலம் பயிற்சிகள் ஏதும் இல்லாத போதிலும் 20 கி.மீ நடைபந்தயத்திற்கான ஒலிம்பிக் தகுதியினை பெற்றுள்ளார் சந்தீப். இவ்வருடமும் ஊரடங்கு தொடரவே தனது சொந்த கிராமத்தில் உள்ள நெல் வயல்களில் மூன்று மாத காலத்திற்கு பயிற்சிகளை விடாமல் தொடர்ந்தார். கடந்த மே மாதம் கொரோனா தொற்றுக்கு ஆளான சந்தீப் தன் முன்னால் தோன்றிய அனைத்து இடர்களிலும் எதிர்நீச்சல் போட்டு மிகுந்த நம்பிக்கையுடன் தற்போது டோக்கியோவில் பதக்கம் வெல்ல ஆயத்தமாகி வருகிறார்.