Published:Updated:

பி.வி.சிந்து வெற்றி... நேர்செட்களில் சீன ஹாங்காங் வீராங்கனையை வீழ்த்தினார்!

பி.வி.சிந்து
பி.வி.சிந்து ( Markus Schreiber )

பேட்மின்டனில் இன்று காலை நடைபெற்ற இரண்டாம் சுற்று ஆட்டத்தில் ஹாங்காங்கின் CHEUNG Ngan Yi எனும் வீராங்கனையுடன் மோதினார் பி.வி.சிந்து.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மின்டன் போட்டிகளின் இரண்டாம் சுற்று ஆட்டம் இன்று நடந்தது. இதில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் CHEUNG Ngan Yi எனும் வீராங்கனையோடு மோதினார்.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே சிந்துவின் ஆதிக்கமே இருந்தது. நிதானமாகவும், அதேசமயம் அதிரடியாகவும் ஆடினார் சிந்து. முதல் செட்டை 21-9 என கைப்பற்றியவர், இரண்டாம் சுற்றில் சற்றே தடுமாறினார்.

பி.வி.சிந்து வெற்றி... நேர்செட்களில் சீன ஹாங்காங் வீராங்கனையை வீழ்த்தினார்!
Markus Schreiber

இரண்டாம் செட்டில் சீன வீராங்கனை சிந்துவுக்கு கொஞ்சம் நெருக்கடியை ஏற்படுத்தினார். ஆனால், கவனத்தை சிதறவிடாமல் தொடர்ந்து பக்குவமாக ஆடி இரண்டாம் செட்டையும் 21-16 என கைப்பற்றி வெற்றிபெற்றார் சிந்து. இதன்மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார் சிந்து.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு