Published:Updated:

சூப்பர் சிந்து : ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி டோக்கியோ ஒலிம்பிக்கின் அரையிறுதிக்குள் நுழைந்தார்!

பி.வி சிந்து
பி.வி சிந்து ( Dita Alangkara )

வெற்றி வேட்கை கொண்டு, ஆட்டத்தை மூன்றாவது செட்டுக்குள் கொண்டுபோய் விடக்கூடாது என அதிரடியாக ஆடிய சிந்து 22-20 என வெற்றிபெற்றார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மின்டன் போட்டியின் காலிறுதியில் இன்று ஜப்பானின் யமாகுச்சியுடன் மோதினார் சிந்து. உலக தரவரிசைப்படி சிந்து 7-ம் ரேங்க்கில் இருக்க, யமாகுச்சி 5-வது இடத்தில் இருக்கிறார். இதனால் சிந்து வெற்றிபெறுவாரா என்கிற சந்தேகமே எல்லோருக்கும் இருந்தது. ஆனால், யமாகுச்சியை நேர் செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்திருக்கிறார் சிந்து.

யமாகுச்சிக்கு எதிரான ஆட்டத்தை மிகவும் நம்பிக்கையோடு எதிர்கொண்டார் சிந்து. இதனால் முதல் செட்டை 21-13 என கைப்பற்றினார். ஆனால், இரண்டாவது செட்டில் யமாகுச்சி அதிரடி காட்டினார். ஒரு கட்டத்தில் இரண்டாவது செட்டை கைப்பற்றும் வகையில் இரண்டு பாயின்ட் லீடிலும் இருந்தார் யமாகுச்சி. ஆனால், வெற்றி வேட்கை கொண்டு, ஆட்டத்தை மூன்றாவது செட்டுக்குள் கொண்டுபோய் விடக்கூடாது என அதிரடியாக ஆடிய சிந்து 22-20 என இரண்டாவது செட்டையும் கைப்பற்றி வெற்றி பெற்றார்.

சிந்து
சிந்து
Dita Alangkara

இதன்மூலம் அரை இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருக்கும் சிந்து, உலகின் நம்பர் 1 வீராங்கனையான சைனீஸ் தாய்பேவின் Tai Tzu-ying- ஐ எதிர்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு