Published:Updated:

பிவி சிந்து : ''வருத்தம்தான் ஆனாலும் மகிழ்ச்சி… 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன்!''

பிவி சிந்து
பிவி சிந்து ( Markus Schreiber )

''இந்த ஒரு போட்டிக்காக என் எல்லா உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்திக்கொண்டு வெற்றியில் மட்டுமே கவனம் செலுத்தினேன். நாட்டுக்காக ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் வெல்வது எப்போதும் பெருமைக்குரியது.''

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தொடர்ந்து இரண்டாவது ஒலிம்பிக்காக பதக்கம் வென்றவர் என்கிற சாதனையைப் படைத்திருக்கிறார் பேட்மின்டன் வீராங்கனை பிவி சிந்து. 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றவர், 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றிருக்கிறார். சில்வர் சிந்து இந்தமுறை தங்கம் வெல்வார் என நாடே எதிர்பார்க்க, வெண்கலம் வென்றது அவருக்கு ஏமாற்றம்தான் என்றாலும் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதுதான் லட்சியம் என்று சொல்லியிருக்கிறார் சிந்து.

"பேட்மிட்டன் விளையாட்டுக்குள் இளைஞர்கள் ஆர்வம் காட்ட நான் ஒரு ஊக்க சக்தியாக மாறியிருப்பதில் மகிழ்ச்சி. என்னால் வெற்றி பெற முடிந்திருக்கும்போது நிச்சயம் நம் இளைஞர்களாலும் சாதிக்கமுடியும். 2016-ல் வென்ற வெள்ளிப்பதக்கத்தைவிட சிறப்பாக விளையாடமுடியவில்லை என்பதில் வருத்தம்தான். ஆனாலும், ரசிகர்களை முழுமையாக ஏமாற்றிவிடாமல் வெண்கலம் வென்றதில் மகிழ்ச்சி. இந்த ஒரு போட்டிக்காக என் எல்லா உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்திக்கொண்டு வெற்றியில் மட்டுமே கவனம் செலுத்தினேன்.

பிவி சிந்து
பிவி சிந்து
Markus Schreiber

தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருக்க விரும்புகிறேன். 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல விளையாடுவேன். அதற்கு கடுமையாக உழைக்கவும் தயாராகியிருக்கிறேன். நிச்சயம் என்னால் தங்கம் வெல்லமுடியும்'’ என்று டோக்கியோவில் செய்தியாளர்களிடம் சொல்லியிருக்கிறார் சிந்து.

26 வயதேயான பிவி சிந்து இன்னும் 3 ஆண்டுகால இடைவெளியில் நடைபெற இருக்கும் பாரிஸ் ஒலிம்பிக்கில் நிச்சயம் சிறப்பாகவே விளையாட முடியும்.

சிந்துவின் தங்கக் கனவு நிறைவேற வாழ்த்துவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு