Published:Updated:

சூப்பர் சிந்து வென்றது வெண்கலம்… தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக்ஸிலும் பதக்கம் வென்று சாதனை!

பிவி சிந்து ( Markus Schreiber )

இன்றைய சிந்துவின் ஸ்மாஷ் ஷாட்களில் பவர் தெறித்தது. டிராப் ஷாட்களில் தெளிவு தெரிந்தது. இன் அவுட் பார்ப்பதில் தனிகவனம் பிறந்திருந்தது.

சூப்பர் சிந்து வென்றது வெண்கலம்… தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக்ஸிலும் பதக்கம் வென்று சாதனை!

இன்றைய சிந்துவின் ஸ்மாஷ் ஷாட்களில் பவர் தெறித்தது. டிராப் ஷாட்களில் தெளிவு தெரிந்தது. இன் அவுட் பார்ப்பதில் தனிகவனம் பிறந்திருந்தது.

Published:Updated:
பிவி சிந்து ( Markus Schreiber )

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வெல்வதற்கான போட்டியில் இன்று ஹீ பிங்ஜியாவோ (He Bingjiao) எனும் சீன வீராங்கனையுடன் மோதினார் சிந்து. டோக்கியோ ஒலிம்பிக்கில் சிந்து எதிர்கொண்ட முதல் இடது கை போட்டியாளர் இந்த பிங்ஜியாவோ. மின்னல் வேகத்தில் ஆடக்கூடியவர் என பாராட்டப்பட்ட பிங்ஜியாவோவுக்கு என இன்று தனி வியூகம் அமைத்து களமிறங்கினார் சிந்து.

நேற்றைய அரையிறுதிப்போட்டியில் ஸ்மாஷ், டிராப் ஷாட், இன் அவுட் என தன்னுடைய பலங்களில் எல்லாம் சொதப்பியிருந்த சிந்து, இன்று அனைத்திலுமே சிக்ஸர் அடித்து துவம்சம் செய்தார். இன்றைய சிந்துவின் ஸ்மாஷ் ஷாட்களில் பவர் தெறித்தது. டிராப் ஷாட்களில் தெளிவு தெரிந்தது. இன் அவுட் பார்ப்பதில் தனிகவனம் பிறந்திருந்தது.

பிவி சிந்து
பிவி சிந்து
Dita Alangkara

பிங்ஜியாவோ சிந்துவுக்கு ஈடுகொடுத்து லாங் ரேலிக்களில் ஆடினாலும் ஆட்டத்தின் போக்கை சிந்துவே தீர்மானித்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய சிந்து முதல் செட்டை 21-13 எனவும் இரண்டாவது செட்டை 21-15 எனவும் கைப்பற்றி, நேர்செட்களில் சீன வீராங்கனையை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார்.

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற சிந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே சந்தேகம்தான், ஃபார்மில் இல்லை என்கிற விமர்சனங்கள் பறந்த நிலையில் தொடர்ந்து இரண்டாவது ஒலிம்பிக்கிலும் பதக்கம் வென்று சாதனைப்படைத்திருக்கிறார்.

வாழ்த்துகள் சிந்து... உங்கள் வெற்றியில் பெருமிதம் கொள்கிறோம்!