Published:Updated:

பிரனதி நாயக்... ஒரே ஒரு தோல்வியோடு முடிந்துவிடுவதல்ல இந்த சாம்பியனின் பயணம்!

பிரனதி நாயக்
பிரனதி நாயக்

ஜிம்னாஸ்டிக்ஸ்... ரியோ ஒலிம்பிக் வரை இந்தியர்கள் இந்த விளையாட்டைப் பற்றி அதிகம் கவலைப்பட்டதில்லை. ஆனால், தன் அற்புத செயல்பாட்டால் அந்த ஆட்டத்துக்கு கவனம் பெற்றுக்கொடுத்தார் தீபா கர்மாகர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தீபாவைத் தொடர்ந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாக பங்கேற்கவுள்ள ஒரே போட்டியாளர் என்கிற பெருமையுடன் பிரனதி நாயக் கலந்துகொண்டார். 26 வயது நிரம்பிய பிரனதிதான் ஒலிம்பிக் போட்டிகளில் ஜிம்னாஸ்டிக்ஸில் கலந்துகொண்ட இரண்டாவது இந்தியர். நேற்று நடைபெற்ற ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் தகுதிச்சுற்றில் கலந்துகொண்ட பிரனதி நாயக்கின் பர்ஃபாமென்ஸ் போட்டியில் கொஞ்சம் பின்தங்க இறுதிச்சுற்றுக்குள் நுழைய முடியாமல் வெளியேறினார் பிரனதி. ஆனால், ஒரு தோல்வியோடு, முதல் ஒலிம்பிக் பயணத்தோடு முடிந்துவிடக்கூடியதல்ல இந்த சாம்பியனின் கதை!

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு பிரனதி தேர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதுமின்றி குழப்பம் நீடித்துவந்தது. டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான தகுதி போட்டியாக நடைபெறவிருந்த ஆசிய ஜிம்னாஸ்டிக் (Asian artistic gymnastics championships) போட்டிகள் கொரோனா தொற்று பரவலின் அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டன. அதனால், அதற்குபதில் 2019-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய அளவிலான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகள் ஒலிம்பிக்கிற்கான தகுதியாக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் பிரனதி நாயக் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்ததால் அவரின் ஒலிம்பிக் கனவு இறுதியாக மெய்ப்பட்டது.

Pranati Nayak
Pranati Nayak

மேற்குவங்க மாநிலத்தின் ஜர்காமை சேர்ந்த பிரனதி மிகச் சாதாரண குடும்பப் பின்னணியை கொண்டவர். இவரின் தந்தை பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். தனது ஒன்பதாவது வயதில் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியைத் தொடங்கினார் பிரனதி. தன் கனவுகளைத் துரத்தத் தொடங்கிய முதல் நாளில் இருந்தே பணம் என்பது அவருக்கும் அவரின் குடும்பத்துக்கும் மிகப்பெரிய சவாலாக இருந்தது. பிரனதியின் பயிற்சிக்காக மொத்த குடும்பமும் கொல்கத்தாவுக்கு குடிபெயர்ந்ததுதான் அவரின் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அங்கு அவர் மினரா பேகம் என்ற பயிற்சியாளரைச் சந்தித்ததுதான் ஜிம்னாஸ்டிக்ஸில் தனது திறமைகளை வளர்த்துக்கொண்டு இன்று ஒலிம்பிக் வரை தகுதி பெற்றதற்கான தொடக்கப்புள்ளி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பயிற்சியாளர் பேகம், பிரனதிக்கு மிகச்சிறந்த பயிற்சியை மட்டும் அளித்திடாமல் அவருக்கு முழுமையான பொருளாதார வசதிகளையும் வழங்கினார். அவரின் கனவுகளுக்குப் பணம் என்பது எந்த ஒரு வகையிலும் தடையாக இருந்துவிடாமல் தங்குமிடம், உணவு, செலவுக்குப் பணம் என அனைத்தையும் பேகமே பார்த்துக்கொண்டார். பிரனதியும் அதற்கேற்றவாறு மிக விரைவிலேயே இந்திய அளவிலான போட்டிகளில் தன்னை நிரூபித்தார். இதற்குப் பலனாக இந்திய ரயில்வேயில் அவருக்குப் பணியும் கிடைத்தது.

பிரனதி நாயக்
பிரனதி நாயக்

பிரனதியின் வாழ்கையை மொத்தமாகப் புரட்டிபோட்டது 2019-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகள். மங்கோலிய தலைநகரில் நடைபெற்ற அப்போட்டிகளில் அவரின் சிறந்த செயல்பாடுகள்தான் இன்று ஒலிம்பிக் வரை கொண்டு போய் சேர்த்தது.

முதல் முயற்சியில் சாம்பியன்கள் பலரும் தோற்றதுதான் இதுவரையிலான வரலாறு. இந்தியாவுக்காக வெள்ளிப்பதக்கம் வென்றிருக்கும் மிராபாய் சானுவும் ரியோ ஒலிம்பிக்கில் தடுமாறியவர்தான். அதனால் 2024-ல் நடைபெற இருக்கும் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் தங்கமகளாக பிரனதி தடம் பதிக்க வாழ்த்துவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு