Published:Updated:

Olympics Trivia: சூரிய ஒளியின் மூலம் ஏற்றப்படும் ஒலிம்பிக் தீபம்!

கடந்த ஆண்டு நடந்திருக்கவேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் தொடர் வரும் 23-ம் தேதி தொடங்குகிறது. உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவைப் பற்றிய ஆச்சர்யமான சில விஷயங்கள் இங்கே...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

1986 பெர்லின் ஒலிம்பிக்கின்போதுதான் முதல் முறையாக ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது. அன்று முதல் தொடர்ந்து அந்த நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. அந்த டார்சை ஏந்துபவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி டார்ச்சுகள் கொடுக்கப்படும். தீபம் மட்டுமே மாற்றிக்கொள்ளப்படும். ஒவ்வொரு ஒலிம்பிக் டார்ச்சும் வித்தியாசமாகவே இருக்கும். முதல் ஒலிம்பிக் ஜோதி எப்போதுமே ஒலிம்பிக்கின் பிறப்பிடமான கிரீஸில்தான் உருவாக்கப்படும். கண்ணாடிகளைப் பயன்படுத்தி சூரிய ஒளியின் மூலம் தீபம் ஏற்றப்படும்.

ஒலிம்பிக் கொடியில் 5 வளையங்கள் இருப்பது ஏன் என்று நமக்குத் தெரியும். மனிதர்கள் வாழக்கூடிய 5 கண்டங்களைக் குறிப்பதற்காக. ஆனால், அந்தக் கொடியில் வெள்ளை, நீலம், மஞ்சள், சிவப்பு, பச்சை, கறுப்பு ஆகிய 6 வண்ணங்கள் இடம்பிடித்திருக்கும் காரணம் தெரியுமா - ஒவ்வொரு நாட்டின் கொடியிலும், இந்த 6 வண்ணங்களுள் குறைந்தபட்சம் ஒன்றாவது இடம்பெற்றுவிடும் என்பதால்!

Olympics Flag
Olympics Flag

1936 பெர்லின் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான போல் வால்ட் போட்டியில் இரண்டு வீரர்கள் இரண்டாவது இடம் பிடித்தனர். ஜப்பானின் ஷூஹே நிஷிடா, ஷியூ ஓ ஆகிய இருவரும் 4.25 மீட்டர் உயரம் தாண்டி, இரண்டாவதாக வந்தனர். இருவருக்கும் வெள்ளிப் பதக்கம் கொடுப்பதற்குப் பதிலாக, மிகவும் வித்தியாசமான முறை அப்போது கடைபிடிக்கப்பட்டது. மூவருக்கு மட்டும் பதக்கம் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்ததால், வெள்ளி, வெண்கலம் இரண்டு பதக்கங்களையும் பாதியாக வெட்டினர். ஒரு பாதி வெள்ளி, ஒரு பாதி வெண்கலத்தைக் கலந்து இருவருக்கும் அந்தப் புதுவித பதக்கத்தைக் கொடுத்தனர்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒலிம்பிக் தொடரில் முதல் முறையாக பெண்கள் பங்கேற்றது 1900-ம் அண்டு நடந்த பாரிஸ் ஒலிம்பிக்கில். அதேசமயம், கலந்துகொண்ட ஒவ்வொரு அணியிலும் பெண்கள் இடம்பெற்றிருந்தது 2012 லண்டன் ஒலிம்பிக்கில்தான். 112 வருடங்கள் ஆகியிருக்கின்றன!

A woman rides a bicycle near the Olympic Rings
A woman rides a bicycle near the Olympic Rings
AP Photo/Eugene Hoshiko

நவீன ஒலிம்பிக்கின் ஒவ்வொரு தொடரிலும் பங்கேற்ற அணிகள் மொத்தம் ஐந்து மட்டுமே. கிரீஸ், ஆஸ்திரேலியா, கிரேட் பிரிட்டன், பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து. இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகளும் இங்கிலாந்துக்குட்பட்ட இன்னபிற பிரதேசங்களும் ஒன்றாக சேர்ந்தே கிரேட் பிரிட்டன் அணியில் இணைந்து பங்கேற்கும்.

இந்தியா ஒலிம்பிக் தொடரில் இதுவரை 9 தங்கம், 7 வெள்ளி, 12 வெண்கலம் உள்பட 28 பதக்கங்கள் வென்றிருக்கிறது. அதிகபட்சமாக ஹாக்கியில் 8 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் உள்பட 11 பதக்கங்கள் வென்றிருக்கிறது. அதிலும் 1928 முதல் 1966 வரை தொடர்ந்து 6 முறை (1940, 1944 ஒலிம்பிக் தொடர்கள் நடக்கவில்லை) தங்கம் வென்றது இந்திய ஹாக்கி அணி. தனிநபர் பிரிவில் தங்கம் வென்றிருக்கும் ஒரேயொருவர் அபினவ் பிந்த்ரா மட்டுமே.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு