Published:Updated:

"நீரஜ் சோப்ரா பிறந்த ஊரில் ரூ.10 கோடிக்கு மைதானம் அமைக்கப்படும்!"- ஹரியானா மாநில முதல்வர் அறிவிப்பு

மனோகர் லால் கட்டார், நீரஜ் சோப்ரா

"நீரஜ் சோப்ரா பிறந்த ஊரான பானிபட் அருகே உள்ள கந்த்ராவில் அவரது பெயரிலேயே விளையாட்டு மைதானம் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்." - மனோகர் லால் கட்டார்

"நீரஜ் சோப்ரா பிறந்த ஊரில் ரூ.10 கோடிக்கு மைதானம் அமைக்கப்படும்!"- ஹரியானா மாநில முதல்வர் அறிவிப்பு

"நீரஜ் சோப்ரா பிறந்த ஊரான பானிபட் அருகே உள்ள கந்த்ராவில் அவரது பெயரிலேயே விளையாட்டு மைதானம் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்." - மனோகர் லால் கட்டார்

Published:Updated:
மனோகர் லால் கட்டார், நீரஜ் சோப்ரா
கடந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் ஜாவ்லின் த்ரோ எனப்படும் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவை பெருமிதம் கொள்ள செய்தவர் நீரஜ் சோப்ரா. இவரின் சொந்த ஊர் ஹரியானா மாநிலம் பானிபட்டுக்கு அருகில் உள்ள கந்த்ரா (Khandra). இந்த ஊரில் அவரது பெயரில் விளையாட்டு மைதானம் ஒன்று 10 கோடி ரூபாய் மதிப்பில் அமையவிருக்கிறது. இதற்கான அறிவிப்பை ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் வெளியிட்டுள்ளார்.

"நீரஜ் சோப்ரா பிறந்த ஊரில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். ஹரியானா, விளையாட்டுக்கு பிரதான மையமாக மாறி வருகிறது. நமது வீரர்கள் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் விருதுகளை வென்று வருகிறார்கள். ஹரியானா - வீரர்களுக்கு அதிகமான பரிசு தொகை கொடுக்கிற மாநிலங்களில் ஒன்று" என பானிபட்டில் அமைக்கப்பட்டிருக்கும் சர்க்கரை ஆலையைத் திறந்து வைத்து பேசும் போது ஹரியானா முதல்வர் தெரிவித்து இருக்கிறார்.

நீரஜ் சோப்ரா
நீரஜ் சோப்ரா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹரியானா அரசு ஒருங்கிணைக்கும் கேலோ இந்தியா யூத் விளையாட்டு போட்டிகள் 2021 (Khelo India) கோவிட் சூழலால் பல முறை ஒத்திவைக்கப்பட்டன. இந்தப் போட்டிகள் வரும் ஜூன் 4 முதல் 13 வரை நடக்கும் என அந்த மேடையில் குறிப்பிட்டார்.

"ஹரியானாவில் தொடங்கப்பட்ட இந்தச் சர்க்கரை ஆலை உழவர்களுக்கு உதவிகரமாக இருக்கும். பக்கத்து மாநிலங்களுக்கு அனுப்பும் செலவு இதனால் குறையும். உழவர்களின் நலனை உறுதிசெய்வதே மாநிலத்தின் பிரதான கடமை. ஹரியானாதான் 14 தானியங்களுக்கு ஆதார கொள்முதல் விலை நிர்ணயித்துள்ள மாநிலம். அதே போல கரும்புக்கு நாட்டிலேயே அதிகபட்ச கொள்முதல் விலை தருகிற மாநிலமும் கூட" எனப் பேசியுள்ளார்.

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரர் பெயரில் மைதானம் என்கிற அறிவிப்பு, விளையாட்டு ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism