Published:Updated:

பழுதான துப்பாக்கி, பறிபோன பதக்க கனவு... மனு பாக்கருக்கு நடந்தது என்ன?

மனு பாக்கர் | Manu Bhaker ( Alex Brandon | AP )

தகுதிபெறவில்லை என்றாலும் 19 வயதேயான மனு பாக்கரின் இன்றைய ஆட்டம் அத்தனை போற்றுதல்களுக்கும் தகுதியுடையது.

பழுதான துப்பாக்கி, பறிபோன பதக்க கனவு... மனு பாக்கருக்கு நடந்தது என்ன?

தகுதிபெறவில்லை என்றாலும் 19 வயதேயான மனு பாக்கரின் இன்றைய ஆட்டம் அத்தனை போற்றுதல்களுக்கும் தகுதியுடையது.

Published:Updated:
மனு பாக்கர் | Manu Bhaker ( Alex Brandon | AP )
விளையாட்டு என்பது வெற்றி, தோல்விகளால் அளக்கப்படுவது இல்லை. ஒருவரின் போராட்ட குணமே விளையாட்டின் வேர்! அதை நிரூபிக்கும் மற்றொரு சம்பவம் இன்று டோக்கியோ ஒலிம்பிக்கில் அரங்கேறியுள்ளது.

இந்த ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில்தான் இந்தியா அதன் முதல் பதக்கத்தை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புக்கிடையே நேற்று பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் தகுதிச்சுற்றில் இளவேனில் வாலறிவன், அபூர்வி சந்தேலா பங்குகொண்டனர். ஆனால், இளவேனில் 16-வது இடத்தையே பிடித்தார். அபூர்வி சந்தேலா 36-வது இடத்தை பிடித்தார். ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதிச்சுற்றில் முதலிடம் பிடித்து அசத்திய சவுரப் சௌத்ரி இறுதிச்சுற்றில் 7-வது இடமே வந்தார். இதற்கு நடுவில் இந்தியாவின் முதல் பதக்கத்தைப் பளுதூக்குதலில் வென்றெடுத்தார் மீராபாய் சானு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

Manu Bhaker
Manu Bhaker
Manu's Twitter handle

இந்நிலையில், இன்று உலக தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் 19 வயதான இந்திய வீராங்கனை மனு பாக்கர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் பங்குகொண்டார். மொத்தம் ஆறு சுற்றுகளாக நடக்கும் தகுதி ஆட்டத்தில் முதல் சுற்றில் 100-க்கு 98 புள்ளிகள் பெற்று முன்னணியிலிருந்தார் மனு பாக்கர். இப்படி சீறி பாய்ந்து கொண்டிருந்த மனு பாக்கரின் ஸ்கோர் இரண்டாம் சுற்றின் நடுவே 160-க்கு 154 என அப்படியே நின்றது. பிரேக் எடுக்கிறார் என்றே முதலில் எண்ணினோம். ஆனால், வெகுநேரம் ஆகியும் அவர் ஸ்கோர் 154-லேயேதான் இருந்தது. அப்போதுதான் அவரது துப்பாக்கியில் கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது. இந்த இடைவெளியில் வேறு வழி இல்லாமல் மீண்டும் சோதனை தளத்திற்குச் சென்று பயிற்சியாளருடன் துப்பாக்கியைச் சரிபார்த்து வந்திருக்கிறார் மனு பாக்கர். ஆனால், அதற்குள் முதலில் ஆட்ட நேரமான 75 நிமிடங்களில் சுமார் 20 நிமிடங்களை இழந்திருந்தார் மனு. 36 நிமிடங்களில் 44 ஷாட்கள் சுட வேண்டிய இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டார். அதிலும் எடுத்துவந்த துப்பாக்கியைச் சோதனை செய்யவே அவருக்கு 4-5 நிமிடங்கள் ஆனது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
இப்படியான நெருக்கடிக்குத் தள்ளப்பட்டும் இறுதியில் 600-க்கு 575 புள்ளிகள் பெற்று 12-வது இடம் வந்திருக்கிறார் மனு. 577 புள்ளிகள் எடுத்திருந்தால் அவர் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றிருக்கலாம். நூலிழையில் இறுதிப்போட்டி வாய்ப்பு அவருக்குப் பறிபோனது.
ஆட்டத்தின் நடுவே மனுவின் துப்பாக்கி பழுதானது. பிஸ்டலுக்குள் இருந்த லிவர் உடைந்திருக்கிறது. அதனால் தோட்டாக்களை மீண்டும் லோட் செய்யமுடியாமல் அவர் தவித்திருக்கிறார். 25 மீட்டர் போட்டிகளில் இது நடக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டிகளில் இதுபோன்ற பழுதுகள் ஏற்படுவது அரிதிலும் அரிதான விஷயம்.
பத்திரிகையாளர்களிடம் பேசிய பயிற்சியாளர் ரானக் பண்டித்
மனு பாக்கர் | Manu Bhaker
மனு பாக்கர் | Manu Bhaker
Alex Brandon | AP

"அதிக காலம் பயன்படுத்தியதே இதற்குக் காரணமாக இருக்க முடியும் என நான் கருதுகிறேன். இந்த லிவர் பிஸ்டலுக்கு உள்ளிருக்கும் பகுதி என்பதால் உள்ளே இருக்கும் கோளாற்றை வெளியிருந்து அடையாளம் காணமுடியாது. இப்படியான கோளாறு ஏற்பட ஆயிரத்தில் ஒரு வாய்ப்பே இருக்கிறது. 1999-லிருந்து நான் ஒரே துப்பாக்கியைத்தான் பயன்படுத்துகிறேன். ஆனால், இன்னும் அதன் லிவரில் எந்தப் பழுதும் இல்லை. ஆனால், மனு பாக்கரின் துப்பாக்கியிலிருக்கும் லிவர் நான்கு ஆண்டுகளில் உடைந்திருக்கிறது. உதிரியாக வைத்திருந்த மற்றொரு துப்பாக்கியில் இருந்த பாகங்களை மாற்றியே இறுதியில் அவர் ஆடினார்" என்றார் பயிற்சியாளர் ரானக் பண்டித்.

இதன் காரணமாகவே முதல் சுற்றில் 98 புள்ளிகள் பெற்ற அவர் அடுத்தடுத்த சுற்றுகளில் 95, 94, 95 புள்ளிகள் எடுத்துப் பின்தங்கினார். இருந்தும் ஐந்தாவது சுற்றில் 98 புள்ளிகள் எடுத்து வேற லெவல் கம்பேக் கொடுத்தார். தகுதிபெற இன்னும் வாய்ப்பிருந்த நிலையில் இறுதிச்சுற்று மனு பாக்கருக்குக் கைகொடுக்கவில்லை. கடைசி இரண்டு ஷாட்களிலும் 10 எடுத்தால் தகுதிபெற்றிருக்க முடியும் என்ற சூழலில் முதல் ஷாட்டில் 10 புள்ளிகள் பெற்ற அவர் அடுத்த ஷாட்டில் 8 புள்ளிகளே பெற்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தகுதிபெறவில்லை என்றாலும் 19 வயதேயான மனு பாக்கரின் ஆட்டம் அத்தனை போற்றுதல்களுக்கும் தகுதியுடையது. சுமார் 34 நிமிடங்களில் 575 புள்ளிகள் பெறுவதெல்லாம் உலகின் தலைசிறந்த துப்பாக்கி சுடுதல் வீரர்களாலும் நினைத்துப்பார்த்துவிட முடியாத ஒன்று. அதனால் வெறும் இறுதி புள்ளிகளைக் கொண்டு நாம் அவரை மதிப்பிட்டுவிட முடியாது. போட்டி முடிவுகள் வந்தவுடன் பலரும் ஒலிம்பிக் என்ற பெரும் மேடையில் பங்குகொள்ளும் அழுத்தம்தான் இந்த முடிவுக்குக் காரணம் என்றனர். ஆனால், யாருமே சந்தித்திராத அழுத்தத்தில்தான் தான் யார் என்று உலகத்திற்குச் சொல்லியிருக்கிறார் மனு பாக்கர். சிறந்த விளையாட்டு வீரர்களிடம் மட்டுமே காணப்படும் குணம் இது.

இந்த இளம்வயதிலேயே அவர் பெற்றிருக்கும் இந்த அனுபவம் அவரை இன்னும் பல உயரங்கள் அடைய வைக்கும். காமன்வெல்த் கேம்ஸ், யூத் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் தங்கம் வென்றவர் விரைவில் மீண்டு வருவார், வர வேண்டும். ஏனென்றால் டோக்கியோ ஒலிம்பிக்கில் மொத்தம் 3 பிரிவுகளில் பங்கேற்கிறார் மனு பாக்கர். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் அவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது உண்மைதான். ஆனால், தனியாக மிஸ் செய்த பதக்கத்தைக் கலப்பு அணி பிரிவில் சௌரப் சௌத்ரி உடன் இணைந்து வென்றெடுப்பார் என நம்புவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism