Published:Updated:

Tokyo Olympics: கேட்டி லெடிக்கி - தங்கத்தோடு மட்டுமே கரையேறும் ஸ்விம்மிங் ஸ்டார்!

Katie Ledecky

தற்போது உலகளவில் ஃப்ரீஸ்டைல் நீச்சலில் தனியொரு ஆளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார் கேட்டி லெடிக்கி. டோக்கியாவில் இவர் தங்கப் பதக்கம் வெல்லாமல் இருந்தால்தான் ஆச்சர்யம். நீரில் இறங்கினால் தங்கத்தோடுதான் கரை சேருவார்.

Tokyo Olympics: கேட்டி லெடிக்கி - தங்கத்தோடு மட்டுமே கரையேறும் ஸ்விம்மிங் ஸ்டார்!

தற்போது உலகளவில் ஃப்ரீஸ்டைல் நீச்சலில் தனியொரு ஆளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார் கேட்டி லெடிக்கி. டோக்கியாவில் இவர் தங்கப் பதக்கம் வெல்லாமல் இருந்தால்தான் ஆச்சர்யம். நீரில் இறங்கினால் தங்கத்தோடுதான் கரை சேருவார்.

Published:Updated:
Katie Ledecky
மிக வெற்றிகரமான ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனை ஜென்னி தாம்ஸனின் சாதனையை சமன் செய்ய லிடிக்கிக்கு தேவைப்படுவது இன்னும் மூன்று தங்கப்பதக்கம் மட்டுமே.

2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் முதன் முதலாக களம் கண்டார் கேட்டி. அப்போது அவருக்கு வயது வெறும் 15 மட்டுமே. அப்போதைய அமெரிக்க குழுவில் இவர்தான் வயதில் இளையவர். தனது முதல் ஒலிம்பிக்கிலேயே, 800மீ ஃப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் உலக சாதனை படைத்து தங்கம் வென்றார். நான்கு வருடம் கழித்து ரியோ ஒலிம்பிக் போட்டியில் நான்கு தங்கப்பதக்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றதோடு இரண்டு உலக சாதனையும் படைத்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

24 வயதாகும் இவர், இதுவரை ஒலிம்பிக் மற்றும் உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் மொத்தமாக 15 பதக்கங்களை வென்றுள்ளார். பெண்களில் இவ்வுளவு பதக்கங்களை வென்றது இவர் மட்டுமே. அதுமட்டுமல்லாமல் 400மீ, 800மீ மற்றும் 1500மீ ஃப்ரீஸ்டைல் நீச்சல் போட்டிகளில் உலக சாதனையை தன் வசம் வைத்துள்ளார்.

நீச்சல் போட்டியின் சாதனைப் புத்தகங்களில் இவரது ஆதிக்கம் பிரமிக்கத்தக்கது. இந்தச் சாதனைகள் போதாதென்று, 800மீ பிரிவில் இதுவரை 24 முறை வேகமாகக் கடந்து வெற்றி பெற்றுள்ளார். 1500மீ பிரிவில் 11 முறை, 400மீ பிரிவில் 12 முறை என அனைத்து சாதனைகளிலும் இவர் பெயர் உள்ளது.

கேட்டி லெடிக்கி
கேட்டி லெடிக்கி
Michael Ledecky, CC BY-SA 4.0 via Wikimedia Commons

வாஷிங்டனில் பிறந்த 6 அடி உயரம் கொண்ட இந்த நீச்சல் வீராங்கனை, வளர்ந்தது எல்லாம் அருகிலுள்ள பெத்செடா, மேரிலேண்டில். ஆறு வயதாக இருக்கும் போதே பாலிசடேஸ் நீச்சல் மற்றும் டென்னிஸ் க்ளப்பில் நீச்சல் கற்றுக் கொண்டார். இவருடைய அம்மா மேரி, நியூ மெக்ஸிகோ பல்கலைகழகத்தின் சார்பாக நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். அதேபோல் இவருடைய சகோதரர் மைக்கேலும் நீச்சல் வீரரே. தற்போது அதே பாரம்பர்யத்தை கேட்டியும் தொடர்கிறார்.

2015-ல் இவர் பள்ளிப் படிப்பை முடித்த போது, 100மீ பிரெஸ்ட்ஸ்ட்ரோக் பிரிவை தவிர மற்ற அனைத்து பிரிவு நீச்சல் போட்டிகளிலும் பள்ளியளவில் சாதனை படைத்திருந்தார். பள்ளிப்படிப்பை முடித்ததும், பல மில்லியன் டாலர் ஸ்பான்ஸர்ஷிப்களை ஒதுக்கி தள்ளிவிட்டு ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழகத்திற்கு படிக்கச் சென்றார். இந்த ஜூன் மாதம்தான் உளவியல் துறையில் பட்டம் பெற்றார். ஸ்டான்போர்டில் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருக்கும் போதே தொழில்முறை நீச்சல் வீராங்கனையாக மாறினார் கேட்டி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெருந்தொற்று காலத்தில் லிடிக்கி கலிஃபோர்னியாவில் உள்ள பலோ அல்டோவில் தங்கியிருந்தார். பலரையும் போல இவரும் கடந்த ஒரு வருடமாக தன் குடும்பத்தை நேரில் சந்திக்காமல் உள்ளார். ஸ்டான்போர்டடில் பயிற்சி செய்ய முடியாத நிலை வந்ததும், வீட்டிற்குள்ளும் வீட்டின் பின்னால் உள்ள நீச்சல் குளத்திலும் பயிற்சி செய்து வருகிறார். நீச்சல் போட்டிகளுக்காக கடுமையான பயிற்சியை எடுக்ககூடியவர் எனப் பெயரெடுத்தவர் இவர்.

Katie Ledecky
Katie Ledecky
Agência Brasil Fotografias, CC BY 2.0 via Wikimedia Commons

அமெரிக்க தேசிய நீச்சல் அணியின் செயல்பாட்டு இயக்குநர் மேட் பார்பினி கூறுகையில், “கேட்டிக்கு அதிகப்படியான போட்டி மனப்பான்மை உண்டு என்றாலும் கருணையோடு நடந்து கொள்வார். எதிராளியை விட அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என கேட்டி விரும்புவார். ஆனால் அவர் மைக்கேல் ஜோர்டன் போல் மற்றவர்களின் இதயத்தை நொறுக்க விரும்ப மாட்டார் என நினைக்கிறேன். ஒருவர் இந்தளவிற்கு ஒரு விளையாட்டில் நீண்டகாலத்திற்கு ஆதிக்கம் செலுத்துகிறார் என்றால் அதற்கு அளப்பரிய அர்ப்பணிப்பு வேண்டும். அதே சமயத்தில் அவர் கனிவாகவும் கண்ணியமாகவும் நடந்து கொள்கிறார். இந்த இரண்டும் ஓருசேர அவரிடம் அமைந்திருப்பது ஆச்சர்யமான விஷயம்” என்றார்.

2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் திட்டம் உள்ளதாக கூறும் லிடிக்கி, அதன்பிறகு ஓய்வு பெறுவேனா அல்லது 2028 லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் கலந்து கொள்வேனா என்பதை பிறகுதான் முடிவு செய்யமுடியும் என்கிறார்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism