Published:Updated:

சிந்து அரையிறுதியில் தோல்வி... தாய் சூ யிங் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்! Live updates

சிந்து
சிந்து ( Dita Alangkara )

டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மின்டன் அரையிறுதிப்போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து, சீனா தைபேவைச் சேர்ந்த தாய் சூ யிங் வீராங்கனையுடன் மோதுகிறார். தாய் சூ யிங் உலகின் நம்பர் 1 வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

31 Jul 2021 4 PM

இப்போட்டியில் தோல்வியடைந்தாலும் சிந்து வெண்கலம் வெல்வதற்கான வாய்ப்பிருக்கிறது. மூன்றாம் இடத்துக்கான போட்டியில் சீனாவின் He Bingjiao-வுடன் மோத இருக்கிறார் சிந்து

31 Jul 2021 4 PM

இறுதிப்போட்டிக்குள் நுழைய இன்னும் 3 பாயின்ட்களே தாய் சூ யிங்கிற்குத் தேவை!

31 Jul 2021 4 PM

இரண்டாவது செட்டில் தாய் சூ யிங் 16-8 என முன்னிலை. சிந்து பின்னடைவு.

31 Jul 2021 4 PM

தாய்-சூ-யிங் நடுப்பகுதியிலேயே நின்று கொண்டு பெரும்பாலான ஆட்டத்தை ஆடுவதால், சிந்து தன்னுடைய வழக்கமான ஆட்டத்தை ஆட முடியாமல் போராடுகிறார். இரண்டாவது செட்டில் 10-6 என பின்தங்கியிருக்கிறார் சிந்து.

31 Jul 2021 4 PM

தொடர்ந்து நான்கு புள்ளிகள் பெற்று தாய் சூ யிங் 7-4 என முன்னிலை

31 Jul 2021 4 PM

இரண்டாவது செட்டில் 4-4 என சிந்து - தாய் சூ யிங் கடும் போட்டி

31 Jul 2021 4 PM

அழுத்தமான தருணங்களில் கூட நிதானத்தை இழக்காமல் ஆடுவது சிந்துவின் பலம். இரண்டாவது செட்டில் மீண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.

31 Jul 2021 4 PM

முதல் செட்டை 21-18 என கைப்பற்றினார் தாய் சூ யிங். 

31 Jul 2021 4 PM

முதல் செட்டில் பரபர ஆட்டம்... 18-18 என சிந்து - தாய் சூ யங் கடும் போட்டி

31 Jul 2021 4 PM

இன்-அவுட் பார்ப்பதில் சிந்து கில்லாடி. அதனால் இந்த முறையில் அவருக்கு அதிக புள்ளிகள் கிடைத்துக்கொண்டிருக்கிறது.

31 Jul 2021 4 PM

முதல் செட்டில் சிந்து - தாய் சூ யிங் இருவரும் தலா 14 புள்ளிகளுடன் மோதிக்கொண்டிருக்கிறார்கள்.

31 Jul 2021 4 PM

கம்பேக் கொடுக்கும் தாய் சூ யிங்... 11-11 என ஆட்டத்தில் அனல் பறக்கிறது!

31 Jul 2021 4 PM

டோக்கியோவில் இதுவரைக்கும் ஆடியிருக்கும் நான்கு போட்டிகளிலுமே சிந்து ஒரு செட்டில் கூட எதிராளிகளால் வீழ்த்தப்படவில்லை.

31 Jul 2021 4 PM
சிந்து
சிந்து
Markus Schreiber
31 Jul 2021 4 PM

சூப்பர் ஃபார்மில் சிந்து... 8-4 என லீட் எடுத்து முன்னிலை

31 Jul 2021 4 PM

அதிரடியாகவும், அதிக கவனத்தோடும் ஆடும் சிந்து 4-2 என லீட் எடுத்திருக்கிறார்.

31 Jul 2021 4 PM

ஆட்டம் தொடங்கியது... 2 பாயின்ட் லீட் எடுத்தார் தாய்-சூ-யிங்

31 Jul 2021 3 PM

சிந்துவுக்கும் தாய்-சூ-யிங்குக்கும் இடையேயான போட்டிகளில் தாய்-சூ-வே ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார். இருவரும் மோதிக்கொண்ட போட்டிகளில் தாய்-சூ-யிங் 18 முறை வென்றிருக்கிறார். சிந்து 5 முறை மட்டுமே வென்றிருக்கிறார்.

31 Jul 2021 3 PM

சில்வர் சிந்து என விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கவும், தேசத்தின் பெருமையை உயர்த்தவும் சிந்துவுக்கு இந்த போட்டி எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு தாய்-சூ-யிங்குக்கும் இந்த போட்டி முக்கியமே. உலகளவில் நம்பர் 1 வீராங்கனையாக இருந்தாலும் பெரிய தொடர்களில் சொதப்பிவிடுவார் என்கிற விமர்சனம் அவர் மீது உண்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு