Published:Updated:

Olympics Trivia: ஒரே போட்டியில் 24 கோல்கள் அடித்த இந்திய அணி!

Indian Hockey Team
Indian Hockey Team

அமெரிக்காவுக்கு எதிரான 1932 ஒலிம்பிக் போட்டியில் 24 கோல்கள் அடித்தது இந்திய ஹாக்கி அணி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை 127. இதுதான் ஒரு ஒலிம்பிக் தொடருக்கு இந்தியா அனுப்பும் அதிகபட்ச வீரர் எண்ணிக்கை. ஆனால், இது இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஒட்டுமொத்த கணக்கில் வெறும் 1.1 சதவிகிதம் தான். ஆனால், இந்திய மக்கள் தொகையோ உலக மக்கள் தொகையில் 17.8 சதவிகிதம்!

ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியா ஜாம்பவானாக திகழ்ந்த காலம் உண்டு. ஒலிம்பிக் வரலாற்றில் அதிக தங்கப் பதக்கம் வென்ற ஹாக்கி அணி இந்தியாதான். 8 தங்கம் வென்றிருந்த அணி, 2008 ஒலிம்பிக்ஸில் பங்கேற்க முடியாத சூழலும்கூட உருவானது. ஆனால், அந்தக் காலத்தில் இந்தியா எந்த அளவு பலமான அணி என்றால், கோல்களை ஜஸ்ட் லைக் தட் அடித்துத் தள்ளுவார்கள். ஒரு ஒலிம்பிக் போட்டியில் அதிக கோல்கள் அடித்த அணி இந்தியாதான். 1932 ஒலிம்பிக்கில் அமெரிக்காவை 24-1 என வீழ்த்தியது நம் அணி. ஒரு ஒலிம்பிக் ஃபைனலில் அதிக கோல் அடித்த பெருமையும் நமக்கே. 1936 ஒலிம்பிக்கில் ஜெர்மனியை 8-1 என வீழ்த்தியிருந்தார்கள். இதில் என்ன வேடிக்கையெனில் அந்த இரண்டு அணிகளையும் அவர்களின் சொந்த மண்ணிலேயே தோற்கடித்திருந்தார்கள். இறுதிப் போட்டியில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமை இந்தியாவின் பல்பீர் சிங் சீனியர் வசம் உள்ளது. 1936 பைனலில் நெதர்லாந்துக்கு எதிராக 5 கோல்கள் அடித்தார் அவர்.

1932 Olympics
1932 Olympics

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒலிம்பிக் ஹாக்கி இறுதிப் போட்டியில் 3 முறை மோதியுள்ளன. அதில் 2 முறை (1956, 1964) இந்தியாவும் ஒரு முறை (1960) பாகிஸ்தானும் வென்றுள்ளன. இந்திய ஹாக்கி ஜாம்பவான் உதாம் சிங் அந்த 3 தொடர்களிலும் அங்கம் வகித்தார்.

இந்த முறை இந்திய அணிக்காக டோக்கியோ செல்லும் 127 வீரர்களில் சானியா மிர்சா, ஷரத் கமல், சீமா பிஸ்லா ஆகிய மூவரும் தங்களின் நான்காவது ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கிறார்கள். சஞ்சீவ் ராஜ்புத், தீபிகா குமாரி, விகாஷ் கிருஷன், ஶ்ரீஜேஷ், மன்ப்ரீத் சிங் ஆகியோர் தங்களின் மூன்றாவது ஒலிம்பிக்கில் கலந்துகொள்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு