Published:Updated:

பூஜா ராணி : தந்தையின் முட்டுக்கட்டை, தீபாவளி வெடிவிபத்து... எதிர்த்து அடித்த சிங்கப்பெண்!

பூஜா ராணி

பூஜா ராணி, அல்ஜீரிய வீராங்கனையை வென்று காலிறுதிக்கு தகுதிபெற்றிருக்கிறார். இன்னும் ஒரு படி ஏறினால் இந்தியாவே அவரை தோளில் தூக்கிக் கொண்டாடும்!

பூஜா ராணி : தந்தையின் முட்டுக்கட்டை, தீபாவளி வெடிவிபத்து... எதிர்த்து அடித்த சிங்கப்பெண்!

பூஜா ராணி, அல்ஜீரிய வீராங்கனையை வென்று காலிறுதிக்கு தகுதிபெற்றிருக்கிறார். இன்னும் ஒரு படி ஏறினால் இந்தியாவே அவரை தோளில் தூக்கிக் கொண்டாடும்!

Published:Updated:
பூஜா ராணி

வரிசையாக ஒவ்வொரு போட்டியிலும் இந்திய வீரர்/வீராங்கனைகள் தோல்வியோடு வெளியேறிக் கொண்டிருக்க, பாக்ஸிங் மட்டுமே இப்போதைக்கு இந்தியாவிற்கு பதக்க நம்பிக்கையை கொடுத்துக் கொண்டிருக்கிறது. பூஜா ராணியின் காலிறுதி தகுதியைத் தொடர்ந்து அந்த நம்பிக்கை இன்னும் அதிகரித்திருக்கிறது.

மிடில்வெயிட் பிரிவில் அல்ஜீரிய வீராங்கனையான Ichrak Chaib என்பவருடன் மோதினார் பூஜா. முழுமையாக ஆதிக்கம் செலுத்தி 5-0 என வெற்றிபெற்று காலிறுதிக்கும் தகுதிப்பெற்றுள்ளார். அவர் போடியத்தில் ஏற இன்னும் ஒரே ஒரு சவாலை மட்டுமே எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பூஜா ராணி கடந்து வந்திருக்கும் பாதைகளை புரட்டி பார்க்கும் போது அவர் இந்த சவாலையும் வெற்றிகரமாக கடந்துவிடுவார் என்றே தோன்றுகிறது.

ஹரியானா விளையாட்டு வீரர்களுக்கான புனித பூமி. மற்ற மாநிலங்களில் ஒரு குழந்தை பிறக்கும் போதே பெற்றோர்கள் டாக்டராக்க, இன்ஜினியராக்க நினக்கும் போது, ஹரியானாவில் மட்டுமே குழந்தை பிறந்து நடை பழகியவுடனேயே மல்யுத்த களத்தில் இறக்கிவிடுவார்கள். கையில் பாக்ஸிங் கிளவுஸை மாட்டிவிடுவார்கள். விளையாட்டுகளை அன்றாட வாழ்வோடு கலந்த உணர்வாகவும் ஒலிம்பிக் பதக்கத்தை வாழ்நாள் லட்சியமாகவும் பாவிக்கும் மனம் ஹரியானா மக்களுக்கு இயல்பிலேயே வாய்க்கப் பெற்றிருக்கும். அப்படிப்பட்ட மண்ணிலிருந்து வந்தவரே பூஜா ராணி. ஆனால், பூஜா ராணிக்கு மேற்கூறிய எதுவுமே நடக்கவில்லை.த

பூஜா ராணி
பூஜா ராணி
Frank Franklin II
பூஜா ராணியின் அப்பா மல்யுத்த வீரர் இல்லை. அவருக்கு நிறைவேறாத ஒலிம்பிக் கனவெல்லாம் இல்லை. தன்னுடைய பிள்ளைகளுக்கும் ஒலிம்பிக் கனவை ஊட்டி உரம் போட்டு வளர்க்கும் எண்ணமும் இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவர் ஒரு காவல்துறை அதிகாரி. நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். ஒரு நடுத்தர குடும்ப தலைவர் எப்படி யோசிப்பாரோ அப்படியே யோசித்தார். பாக்ஸிங்கெல்லாம் பூஜாவுக்கு செட் ஆகாது என முட்டுக்கட்டை போட்டார். இந்த முட்டுக்கட்டைக்கு பின்னால் தன் பிள்ளை குத்து வாங்கி நிலைக்குலைந்து விழுவதை பார்க்கும் சக்தியில்லாத ஈரம்மிகுந்த தந்தைக்குரிய நெஞ்சம் இருந்ததை மறுக்க முடியாது.

லட்சியக் கனவுகளுக்கு கஷ்டம், கட்டுப்பாடு எதுவுமே தெரியாது. அதற்கு தன்னுடைய பயணியை எப்பேற்பட்ட தடைகளையும் தாண்டி உயர்ந்த இலக்கை நோக்கி முன்னகர்த்துவதே வேலையாக இருக்கும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தந்தையின் முட்டுக்கட்டையையும் தாண்டி பூஜாவின் கனவு அவரை முன்னகர்த்தி சென்றது. பாக்ஸிங் ரிங்கில் எதிராளியிடம் வாங்கிய குத்துகளினால் ஏற்பட்ட காயத்தை பெற்றோரிடம் மறைத்து, தன்னை ஒரு ஜாம்பவானாக குத்துகளே வாங்காத வீராங்கனையாக காட்டிக் கொண்டார். அப்படி பெற்றோரிடம் மறைத்து அவர் உடம்பில் வடுவாக மாறியிருக்கும் காயங்கள் ஏராளம்.

வீட்டருகே இருக்கும் பயிற்சி மையத்தில் ஆரம்பக்கட்ட பயிற்சிகளை முடித்தார். நிஜமான ரிங்குக்குள் இறங்கி ரோஷமாக தனது குத்துகளை விட தொடங்கினார். 2009 தேசிய அளவிலான போட்டி ஒன்றில் வென்றுவிட்டு பதக்கத்தை தந்தையிடம் கொண்டு வந்து காண்பித்தார். அந்த பதக்கம் அவரின் மனதைக் கரைத்தது. இதன்பிறகு, பூஜாவின் தந்தை 'கமான் வேலு' என கில்லி பட க்ளைமாக்ஸ் ஆஷிஸ் வித்யார்த்தி போல மாறிப்போனார். பூஜா ராணியின் முதல் ரசிகர் அவர்தான்.

இத்தனை நாள் வாங்கிய குத்துகளை கூட அப்பாவிடமிருந்து மறைக்க வேண்டிய சூழலிலிருந்த பூஜா ராணி, இப்போது ஏதோ விடுதலை பெற்றவரை போல உணர்ந்தார். தந்தையின் ஆதரவு அவருக்கு கூடுதல் உத்வேகத்தை கொடுத்தது. அவருடைய கனவுகள் இன்னும் வேகமாக சிறகடித்து பறந்தன. 2012, 2014, 2015 மூன்று ஆண்டுகளிலும் ஆசிய மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்றார்.

தனது உச்சபட்ச கனவான 2016 ரியோ ஒலிம்பிக்கில் தகுதிப்பெற முடியாமல் தடுமாறியிருந்தார் பூஜா. அந்த 2016-2018 இரண்டு ஆண்டுகளுமே பூஜாவுக்கு போதாதகாலமாக அமைந்தன. தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்தில் சிக்கினார். பயிற்சியின் போது தோள்பட்டையில் பெரிய காயம் ஏற்பட்டது. முழுதாக ஒரு வருடம் முடங்கியிருக்க வேண்டிய நிலை. ஆனால், மீண்டு வந்தார். முன்பை விட சக்திமிக்க ராணியாக!

பூஜா ராணி
பூஜா ராணி
Pooja's Twitter handke
கடந்த முறை வெள்ளி, வெண்கலம் என முடித்திருந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்த முறை 2019, 2021 என இரண்டு ஆண்டுகளிலும் தங்கம் வென்று தனது பலத்தை நிரூபித்தார். ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் தங்கம் வென்று டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான டிக்கெட்டையும் பெற்றுவிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்போது டோக்கியோவில் அல்ஜீரிய வீராங்கனையை வென்று காலிறுதிக்கு தகுதிப்பெற்றிருக்கிறார். இன்னும் ஒரு படி ஏறினால் இந்தியாவே இவரை தோளில் தூக்கி வைத்து கொண்டாடும். ஆனால், காலிறுதியில் இவர் சந்திக்கப்போகும் எதிராளிகள் இவரை விட தரவரிசையில் உயர்ந்தவர்கள் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இருந்துவிட்டு போகட்டும். பூஜா ராணிக்கு அதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. அவர் தந்தையின் வைராக்கியத்தையே வென்றவராச்சே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism