Published:Updated:

ஹாக்கி : அரையிறுதியில் இந்தியா தோல்வி... அர்ஜென்டினா 2-1 என வெற்றிபெற்றது! LIVE UPDATES

ஹாக்கி
Live Update
ஹாக்கி ( John Locher )

ஹாக்கி அரையிறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி அர்ஜென்டினாவை எதிர்கொள்கிறது.

04 Aug 2021 3 PM

ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே பெனால்ட்டி கார்னர் மூலம் இந்தியாவின் குர்ஜித் கவுர் கோல் அடித்தார். இந்தியா 1-0 என முன்னிலை!

04 Aug 2021 3 PM
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதிப்போட்டியிலும் குர்ஜித் சிங் கவுரே கோல் அடித்திருந்தார். 25 வயதான குர்ஜித் கவுர் பஞ்சாபின் அமிர்தசரஸில் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தவர். 2017 முதல் இந்திய அணியில் தொடர்ந்து ஆடி வருகிறார்.

04 Aug 2021 3 PM

முதல் 15 நிமிடம் முடிந்தது. இந்தியா 1-0 என அர்ஜென்டினாவை முந்தியிருக்கிறது. இரண்டு அணிகளுக்குமே தலா 1 பெனால்ட்டி கார்னர் வாய்ப்பு கிடைக்க இந்தியா கோல் அடித்தது. அர்ஜென்டினாவுக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகத் தடுத்தது இந்தியா.

04 Aug 2021 4 PM

அர்ஜென்டினாவின் கேப்டன் மரியா நோயல் கோல் அடிக்க ஆட்டம் 1-1 என சமநிலை.

04 Aug 2021 4 PM

அர்ஜென்டினா இரண்டாவது கோல் அடித்து 2-1 என முன்னிலைப் பெற்றுள்ளது. இரண்டாவது கோலையும் அர்ஜென்டினா கேப்டன் மரியா நோயலே அடித்திருக்கிறார். இந்தியாவுக்கு இதுவரை இரண்டே பெனால்ட்டி கார்னர் வாய்ப்புகளே கிடைக்க, அர்ஜென்டினா 6 பெனால்ட்டி கார்னர் வாய்ப்புகளைப் பெற்றுள்ளது. அதில் இரண்டை வெற்றிகரமாக கோல் ஆக்கியிருக்கிறது.

04 Aug 2021 4 PM

அர்ஜென்டினாவின் பால் பொசஷன் 52 சதவிகிதமாக இருக்கிறது. இந்திய வீராங்கனைகள் மனதளவில் சற்று சோர்வடைந்ததுபோல் இருக்கிறார்கள்.

04 Aug 2021 4 PM

ஆட்டம் முடிய இன்னும் 10 நிமிடங்களே இருக்கும் நிலையில் அர்ஜென்டினா தொடர்ந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது!

04 Aug 2021 4 PM

ஆண்கள் ஹாக்கி போலவே மகளிர் அணியும் அரையிறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவியிருக்கிறது. பெனால்ட்டி கார்னர் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி 2 கோல்கள் அடித்து வெற்றிபெற்றிருக்கிறது அர்ஜென்டினா. ஆட்டத்தின் இரண்டாவது நிமிடத்திலேயே கோலோடு தொடங்கிய இந்தியா இரண்டாம் பாதியில் அட்டாக்கிங் ஆட்டம் ஆடாதது தோல்விக்கான காரணமாக அமைந்திருக்கிறது.

பெனால்ட்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தும் இந்தியா தவறவிட்டது. கடைசி 5 நிமிட ஆட்டமே மீதம் இருக்கும் நிலையில் அர்ஜென்டினா 2-1 என தொடர்ந்து முன்னிலை!

04 Aug 2021 5 PM

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஆகஸ்ட் 6-ம் தேதி பிரிட்டனுடன் மோதுகிறது இந்திய மகளிர் அணி.

04 Aug 2021 5 PM

கோல் போஸ்ட்டை நோக்கிய இந்திய அணியின் ஷூட்டிங் எஃபெஷியன்ஸி 25 சதவிகிதமே இன்றைய ஆட்டத்தில் இருந்தது. அர்ஜென்டினாவின் ஷூட்டிங் எஃபெஷியன்ஸி 33 சதவிகிதம். தொடர்ந்து இந்திய அணியை ஆதிக்கம் செலுத்தியது அர்ஜென்டினா.