Published:Updated:

ஹாக்கி : ஒருங்கிணைந்து ஆடிய ஃபார்வட், கோல் காக்கும் கடவுளாய் ஶ்ரீஜிஷ்... அரையிறுதியில் இந்தியா!

இந்திய ஹாக்கி அணி
இந்திய ஹாக்கி அணி

இந்தியாவின் டிஃபென்ஸும், ஃபார்வடும் மிகச்சிறப்பாக இருந்ததால் ஒரு பக்கம் கோல் அடிக்கவும், கோல்களைத் தடுக்கவும் இந்தியாவால் முடிந்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆகஸ்ட் 1 இந்தியாவுக்கு வெற்றிகரமான நாளாக அமைந்திருக்கிறது. பேட்மின்டன் வீராங்கனை பிவி சிந்து வெண்கலப்பதக்கம் வென்றிருந்த நிலையில், ஆண்கள் ஹாக்கி காலிறுதி போட்டியில் பிரிட்டனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறது.

8 தங்கம் உள்பட ஒலிம்பிக் வரலாற்றில் 11 பதக்கங்கள் வென்றிருந்த இந்திய ஹாக்கி அணி கடைசியாக பதக்கம் வென்று 41 ஆண்டுகள் ஆகிவிட்டன. 1980 மாஸ்கோ ஒலிம்பிக்தான் இந்தியா கடைசியாகத் தங்கப்பதக்கம் வென்ற ஒலிம்பிக்ஸ். அதன்பிறகு ஒலிம்பிக்ஸின் அரையிறுதிக்குள்கூட இந்திய அணியால் நுழையமுடியவில்லை.

90-களில் தன்ராஜ் பிள்ளை, சந்தீப் சிங் என இந்திய ஹாக்கி அணியில் சூப்பர் ஸ்டார்கள் இருந்தும் இந்தியாவால் அரையிறுதிக்குள்கூட நுழையமுடியவில்லை. இந்த நிலையில்தான் மன்பிரீத் சிங் தலைமையிலான தற்போதைய இந்திய அணி பிரிட்டனை வீழ்த்தி ஒலிம்பிக் அரையிறுதிக்குள் நுழைந்து 40 ஆண்டுகால சரித்திரத்தை மாற்றியிருக்கிறது.

ஹாக்கி : ஒருங்கிணைந்து ஆடிய ஃபார்வட், கோல் காக்கும் கடவுளாய் ஶ்ரீஜிஷ்... அரையிறுதியில் இந்தியா!
John Locher
ஹாக்கி : ஒருங்கிணைந்து ஆடிய ஃபார்வட், கோல் காக்கும் கடவுளாய் ஶ்ரீஜிஷ்... அரையிறுதியில் இந்தியா!
John Locher

ஆட்டம் தொடங்கிய ஏழாவது நிமிடத்திலேயே இந்தியாவின் தில்பிரீத் சிங் முதல் கோலை அடித்துவிட்டார். இரண்டாவது கோலை குர்ஜந்த் சிங் 16-வது நிமிடத்தில் அடிக்க, மூன்றாவது கோலை ஹர்திக் சிங் 57-வது நிமிடத்தில் அடித்தார். பிரிட்டனின் சாம் வார்ட் 45-வது நிமிடத்தில் பெனால்ட்டி கார்னர் மூலம் அடித்தது மட்டுமே அவர்களின் ஒரே கோல். அதன்பிறகு இறுதிவரை பிரிட்டனிடம் இருந்து எந்த தாக்குதலும் இல்லாமல் போக இந்தியா 3-1 என வரலாற்று வெற்றியைப் பெற்றுவிட்டது.

ஹாக்கி : ஒருங்கிணைந்து ஆடிய ஃபார்வட், கோல் காக்கும் கடவுளாய் ஶ்ரீஜிஷ்... அரையிறுதியில் இந்தியா!

எல்லா வீரர்களும் ஒருங்கிணைந்து, சரியான திட்டத்தோடு ஆடியதுதான் இந்தியாவின் வெற்றிக்குக் காரணம். குறிப்பாக இந்தியாவின் டிஃபென்ஸும், ஃபார்வடும் மிகச்சிறப்பாக இருந்ததால் ஒரு பக்கம் கோல் அடிக்கவும், கோல்களைத் தடுக்கவும் இந்தியாவால் முடிந்தது.

இந்தியாவின் ஹாக்கி சூப்பர் ஸ்டாரான கோல் கீப்பர் ஶ்ரீஜிஷ் வழக்கம்போல பாதுகாப்பு அரணாக நின்று இந்தியாவைக் காப்பாற்றினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலியாவிடம் 7-1 என மோசமாகத் தோற்ற இந்திய அணி அதில் இருந்து மீண்டுவந்திருப்பது யாராலும் நம்பமுடியாத பெரும் சாதனை. நியூசிலாந்தை 3-2, ஸ்பெயினை 3-0, அர்ஜென்டினாவை 3-1, ஜப்பானை 5-3 எனத் தோற்கடித்து தொடர்ந்து வெற்றிபெற்றிருக்கிறது இந்தியா. இப்போது பிரிட்டனையும் 3-1 என தோற்கடித்து பதக்கம் வெல்லத் தகுதியான அணியாக தன்னை உயர்த்திகொண்டிருக்கிறது.

ஶ்ரீ
ஶ்ரீ

ஆகஸ்ட் 3-ம் தேதி காலை 7 மணிக்கு பெல்ஜியத்துடன் அரையிறுதிப்போட்டியில் மோதுகிறது இந்தியா. பெல்ஜியம் டோக்கியோ ஒலிம்பிக்கில் இதுவரை தோல்வியை சந்திக்காத அணி என்பதுமட்டுமல்ல, தென்னாப்பிரிக்காவையும், கனடாவையும் 9-4, 9-1 என்கிற கோல்கணக்கில் வெற்றிபெற்று கதறவிட்ட அணி. அத்தோடு 2016 ரியோ ஒலிம்பிக்கில் காலிறுதியில் இந்தியாவை தோற்கடித்த அணி பெல்ஜியம். 2018 ஹாக்கி உலகக்கோப்பையும் பெல்ஜியத்திடம்தான் இருக்கிறது. அதனால் அரையிறுதியில் இந்தியாவுக்கான போட்டி கடுமையாகவே இருக்கும் என்றாலும் பிரிட்டனை வீழ்த்தியதைப் போன்றே வீரர்கள் ஒருங்கிணைந்து ஆடினால் வெற்றி நிச்சயம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு