Published:Updated:

முதல் ஒலிம்பிக் தங்கம்... வெறும் 63,000 பேர் மட்டுமே வசிக்கும் நாட்டில் இருந்து மாபெரும் சாதனை!

1.5 கிமீ நீச்சல், 40 கிமீ சைக்கிளிங் மற்றம் 10 கிமீ ஓட்டம் என மிகவும் சவாலானது ட்ரையத்லான். 1 மணி நேரம் 55 நிமிடம் 36 விநாடிகளோடு பிரிட்டனின் ஜார்ஜியா டெய்லர் பிரௌனை விட 14 நொடிகள் முன்னதாக இலக்கை எட்டி தங்கப்பதக்கத்தைத் தட்டிச் சென்றிருக்கிறார் ஃப்ளோரா.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

63,000 பேர் மட்டுமே கொண்ட சிறிய மக்கள் தொகை கொண்ட நாடு. அந்நாட்டில் இருந்து இரண்டு பேர் மட்டுமே ஒலிம்பிக்கில் பங்கேற்க டோக்கியோ வருகிறார்கள். அவர்களில் ஒருவர் அந்நாட்டிற்கான முதல் தங்கப்பதக்கத்தைப் பதிவு செய்கிறார். பதிவு செய்தவர் ஃப்ளோரா டஃபி.... விளையாட்டு : ட்ரையத்லான், நாடு : பெர்முடா.

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் நாடுகளிலேயே மிகச்சிறிய நாடு பெர்முடா. 1936-ல் இருந்து இதுவரை 27 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றிருக்கும் பெர்முடாவுக்கு இது இரண்டாவது பதக்கம். 1976-ல் மான்ட்ரியலில் நடந்த ஒலிம்பிக்கில் ஆண்கள் குத்துச்சண்டைப் பிரிவில் கிளேரன்ஸ் ஹில் (Clarence Hill) என்பவரது வெண்கலப் பதக்கம் தான் பெர்முடாவின் முதல் ஒலிம்பிக் பதக்கம். அதன் பிறகு தற்போது தான் இரண்டாவது பதக்கத்தை வென்றிருக்கிறது பெர்முடா.

முதல் ஒலிம்பிக் தங்கம்... வெறும் 63,000 பேர் மட்டுமே வசிக்கும் நாட்டில் இருந்து மாபெரும் சாதனை!
David Goldman
முதல் ஒலிம்பிக் தங்கம்... வெறும் 63,000 பேர் மட்டுமே வசிக்கும் நாட்டில் இருந்து மாபெரும் சாதனை!
David Goldman

1.5 கிமீ நீச்சல், 40 கிமீ சைக்கிளிங் மற்றம் 10 கிமீ ஓட்டம் என மிகவும் சவாலானது ட்ரையத்லான். 1 மணி நேரம் 55 நிமிடம் 36 விநாடிகளோடு பிரிட்டனின் ஜார்ஜியா டெய்லர் பிரௌனை விட 14 நொடிகள் முன்னதாக இலக்கை எட்டி தங்கப்பதக்கத்தைத் தட்டிச் சென்றிருக்கிறார் ஃப்ளோரா. 33 வயதாகும் ஃப்ளோராவுக்கு ஒலிம்பிக்கில்தான் இது முதல் தங்கம். இதற்கு முன்னர் இரண்டு முறை உலகக் கோப்பையில் தங்கமும், 2018 காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்றிருக்கிறார் ஃப்ளோரா. பெர்முடா மக்கள் ஐந்து ஆண்டு காலமாக தங்களின் ஒலிம்பிக் தங்கக் கனவை ப்ளோராவின் மீது வைத்து காத்திருந்தார்கள். அந்தக் கனவை இன்று நிறைவேற்றியிருக்கிறார் ஃப்ளோரா டஃபி.

"ஒரு நாட்டின் கனவைச் சுமப்பது மிகவும் அழுத்தம் நிறைந்தது. ஐந்து ஆண்டுகளாக அவர்களின் கனவை என் மீது வைத்துவிட்டு அவர்கள் காத்திருந்தார்கள். அதற்கான பலன் இன்று கிடைத்திருக்கிறது. ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வது என்னுடைய கனவு தான். ஆனால், இந்தத் தங்கம் என்னிலும் மேலானது"
ஃப்ளோரா
முதல் ஒலிம்பிக் தங்கம்... வெறும் 63,000 பேர் மட்டுமே வசிக்கும் நாட்டில் இருந்து மாபெரும் சாதனை!
David Goldman

தன் நாட்டிற்கான முதல் தங்கத்தைப் பெற்றுக் கொடுத்துச் சிலாகிக்கிறார் ஃப்ளோரா. இந்தத் தங்கத்தோடு சேர்த்து ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற சிறிய நாடு என்ற பெயரையும் பெற்றிருக்கிறது பெர்முடா.

வாழ்த்துகள் ஃப்ளோரா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு