Published:Updated:

நீச்சல் ஜாம்பவான் லெடிக்கியை வீழ்த்திய டிட்மஸ்... கொண்டாட்டத்தால் வைரல் ஆன பயிற்சியாளர்!

dean boxall

விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் நிரந்தரம் இல்லை. அடுத்த நொடி என்ன நடக்கும் என யாருக்கும் தெரியாது. நொடிக்கு நொடி ஆச்சர்யத்தை ஒளித்து வைத்திருப்பதால்தான் நாம் எல்லாவற்றையும் மறந்து விளையாட்டை நேசிக்கிறோம். அதுவும் ஒலிம்பிக் போட்டியில் சுவாரஸ்யத்திற்கா பஞ்சம் இருக்கப் போகிறது?!

நீச்சல் ஜாம்பவான் லெடிக்கியை வீழ்த்திய டிட்மஸ்... கொண்டாட்டத்தால் வைரல் ஆன பயிற்சியாளர்!

விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் நிரந்தரம் இல்லை. அடுத்த நொடி என்ன நடக்கும் என யாருக்கும் தெரியாது. நொடிக்கு நொடி ஆச்சர்யத்தை ஒளித்து வைத்திருப்பதால்தான் நாம் எல்லாவற்றையும் மறந்து விளையாட்டை நேசிக்கிறோம். அதுவும் ஒலிம்பிக் போட்டியில் சுவாரஸ்யத்திற்கா பஞ்சம் இருக்கப் போகிறது?!

Published:Updated:
dean boxall

இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான 400மீ ஃப்ரீஸ்டைல் நீச்சல் போட்டி, ரசிகர்களுக்கு நல்ல விருந்து படைத்திருக்கிறது. ஒலிம்பிக் தொடங்குவதற்கு முன்பே இப்போட்டி விளையாட்டுப் பிரியர்களிடம் ஆவலை ஏற்படுத்தியிருந்தது. அதற்கு காரணம் அமெரிக்க வீராங்கனை கேட்டி லெடிக்கி. தற்போதைய ஒலிம்பிக் சாம்பியனும் இப்பிரிவில் உலக சாதனை படைத்தவருமான லெடிக்கி, இதுவரை 400மீ நீச்சல் போட்டியில் தோல்வியடைந்ததில்லை. 24 வயதிலேயே ஐந்து ஒலிம்பிக் பதக்கம், 15 உலக சாம்பியன்ஷிப் பதக்கம் என நீச்சல் போட்டிகளில் தன்னிகரற்ற வீரராகத் திகழ்பவர் லெடிக்கி.

மற்றொரு காரணம், 20 வயதாகும் ஆஸ்திரேலிய வீராங்கனை ஏரியன் டிட்மஸ். லெடிக்கியின் வெற்றியை தடுக்க முடியாவிட்டாலும், நிச்சியம் இன்று டிட்மஸ் சவாலாக இருப்பார் என்றே ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஏனென்றால் ஒரு சில வருடங்களாகவே இவரின் வேகம் லெடிக்கிக்கு இணையாக இருந்து வருகிறது. ஆனால் ஒலிம்பிக் தனிநபர் நீச்சல் போட்டியில் லெடிக்கி இதுவரை தோல்வியடைந்ததில்லை என்பதால் எளிதில் தங்கம் வெல்வார் என்றே நம்பப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

போட்டி தொடங்கியதிலிருந்து 300மீ வரை லெடிக்கியே முன்னிலையில் இருந்தார். ஆனால் கடைசி 100 மீட்டரில் டிட்மஸின் கை ஓங்கியது. எல்லைக் கோட்டை தொட 50மீ இருக்கும்போது போட்டி விறுவிறுப்பானது. முடிவில் 3:56.69 நொடிகளில் எல்லைக் கோட்டை தொட்டு, தன்னுடைய முதல் ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தை வென்றார் டிட்மஸ். லெடிக்கியால் இரண்டாம் இடத்தையே பிடிக்க முடிந்தது.

டிட்மஸ் - லெடிக்கி
டிட்மஸ் - லெடிக்கி

லெடிக்கி தோல்வியடைந்த அதிர்ச்சி ஒருபுறம் இருக்க, ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் டீன் போக்ஸால். இன்று இவரது வீடியோதான் இணையத்தில் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. டிட்மஸ் வெற்றி பெற்ற அடுத்த நொடி சந்தோஷத்தில், முகத்தில் அணிந்திருந்த மாஸ்க்கை கழற்றிவிட்டு துள்ளி குதித்தார். சந்தோஷத்தில் அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சத்தமாக கத்தியபடி அங்கும் இங்கும் ஓடினார். 1000 வாட்ஸ் மின்சாரம் பாய்ந்த நபர் போல்தான் காட்சியளித்தார். அந்த சமயத்தில் அவரது கையில் ஏதாவது சிக்கி இருந்தால், சுக்கு நூறாகி இருக்கும். அவரது கொண்டாட்டம் அப்படித்தான் இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெற்றிக்கு பின் பேட்டியளித்த டிட்மஸ், “டீன் எப்போதும் அப்படித்தான். ஆனால் எதை செய்தாலும் ஆர்வத்தோடு செய்பவர். தனது குடும்பம், குழந்தை எல்லாரையும் விட்டுவிட்டு எனக்காக முழுமூச்சாக பயிற்சி அளித்தார். அவர் இல்லை என்றால் என்னால் இங்கு வந்திருக்கவே முடியாது. அவரைப் பெறுத்தவரை இது கொண்டாட்டமான தருணம். அவர் சந்தோஷத்தில் கத்தியதைப் பார்த்து எனக்கு அழுகையே வந்துவிட்டது” என உணர்ச்சிப் பொங்க கூறினார்.

Ariarne Titmus
Ariarne Titmus
AP

இந்த வீடியோவை பார்த்து பலர் சந்தோஷப்பட்டாலும், “இந்தளவிற்கு கொண்டாட்டம் தேவையா” என சிலர் விமர்சிக்கவும் செய்கின்றனர். ஒலிம்பிக் தங்கத்தை வென்ற பிறகு அடக்கியா வாசிக்க வேண்டும். சும்மா தூள் கிளப்ப வேண்டாமா? அதைத்தான் செய்துள்ளார் பயிற்சியாளர் போக்ஸால்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism