Published:Updated:

Tokyo Olympics : வில்வித்தை ரேங்கிங் சுற்று: தீபிகா குமாரி - 9; பிரவீன் ஜாதவ் - 31

Deepika Kumari

டோக்கியோ ஒலிம்பிக்கின் வில்வித்தை போட்டியின் ரேங்கிங் சுற்று இன்று நடைபெற்றது. இந்த சுற்றில் வீரர்களின் ரேங்கிங்குக்கு ஏற்றவாறு அவர்களை எதிர்த்து விளையாடும் வீரர்கள் முடிவு செய்யப்படுவார்கள்.

அதிகாலை பெண்களுக்கான ரேங்கிங் சுற்று (ரீகர்வ்) நடந்தது. மொத்தம் 12 சுற்றுகள், சுற்றுக்கு 6 அம்புகள் வீதம் 72 அம்புகள் எய்தவேண்டும். 12 சுற்றுகளின் முடிவில் 663 புள்ளிகள் பெற்று 9-வது இடம் பிடித்தார் உலகின் நம்பர் 1 வீராங்கனையான தீபிகா குமாரி. முதல் பாதி (ஆறு சுற்றுகள்) முடிவில் நான்காவது இடத்தில் இருந்தவர், இரண்டாவது பாதியில் சற்று சறுக்கினார். Inner Circle-ஐ 13 முறை சரியாக டார்கெட் செய்திருந்தார் அவர். மொத்தம் பங்கேற்ற 64 வீரர்களில் அது இரண்டாவது அதிகபட்சம். ஒலிம்பிக் சாதனையோடு (680 புள்ளிகளோடு) முதலிடம் பெற்றார் தென் கொரிய வீராங்கனை ஆன் சான்.

Pravin Jadhav
Pravin Jadhav

ஆண்கள் பிரிவில் இந்திய வீரர்களின் செயல்பாடு சற்று சுமாராகவே இருந்தது. அவர்களின் ரேங்கிங்

பிரவீன் ஜாதவ் - 31

அடானு தாஸ் - 35

தருன்தீப் ராய் - 37

11-வது ரவுண்டில் ஒரு 5 பாயின்ட் ஷாட் அடித்தார் அடானு. தருன்தீப் மொத்தம் ஆறு முறை 7 பாயின்ட் ஸ்கோர் செய்திருந்தார். அந்த ஒவ்வொரு 7 பாயின்டும் அந்த சுற்றின் கடைசி வாய்ப்பில் வந்தவை.