Published:Updated:

இவர் வெச்சா, வெச்ச குறி தப்பாது... பதக்கத்துக்கு டார்கெட் செய்யும் தங்கமகன் அங்கத் பாஜ்வா!

அங்கத் பாஜ்வா
அங்கத் பாஜ்வா ( SAIMedia )

ஸ்கீட் ஷூட்டிங்கில் 59/60 என்ற அதிகபட்ச புள்ளியை ஹேன்காக் எடுத்திருந்தார். இதுதான் உலக சாதனையாக இருந்தது. ஆனால், குருவுடைய சாதனையை உடைத்து 60/60 என முழு புள்ளிகளையும் பெற்று புதிய உலக சாதனையை அங்கத் படைத்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஸ்கீட் ஷூட்டிங்கில் உலகளவில் இந்தியாவுக்காக முதல் தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்த அங்கத் வீர் சிங் பாஜ்வா, இப்போது டோக்கியோ ஒலிம்பிக்கிலும் இந்தியாவிற்காக பதக்கம் வெல்லும் முனைப்போடு தயாராகிக் கொண்டிருக்கிறார்.

25 வயதாகும் அங்கத் பாஜ்வா சண்டிகரில் பிறந்தவர். அவருடைய தந்தை கனடாவில் பெரிய தொழிலதிபராக இருந்ததால் அங்கத்தும் கனடாவிலேயே தனது படிப்பை மேற்கொண்டார். படிக்கின்ற காலத்திலேயே துப்பாக்கிச் சுடுதல் மீது ஆர்வம் உண்டானதால், படிப்பை இடையிலேயே நிறுத்திவிட்டு இந்தியாவிற்கு திரும்பி முழுநேர பயிற்சியில் இறங்கினார்.

முதலில் பிஸ்டல் வகை துப்பாக்கிகளில் ஆர்வமாக இருந்தவர், சில கால பயிற்சிக்கு பிறகு ஷாட் கன் வகை துப்பாகியிலும் பயிற்சி பெற்று ஸ்கீட் சூட்டராக மாறினார்.அமெரிக்காவை சேர்ந்த ஸ்கீட் சூட்டரான வின்சென்ட் ஹேன்காக் 2008 மற்றும் 2012 ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கத்தை வென்றிருந்தார். தன்னுடைய திறனை மேம்படுத்த விரும்பிய அங்கத், ஹேன்காக்கிடம் பயிற்சிக்கு சேர்ந்தார். ஸ்கீட் ஷூட்டிங்கின் நுணுக்கங்களை கற்றுத்தேர்ந்தவர் குருவை மிஞ்சிய சிஷ்யனாக ஜொலிக்க ஆரம்பித்தார். ஸ்கீட் ஷூட்டிங்கில் 59/60 என்ற அதிகபட்ச புள்ளியை ஹேன்காக் எடுத்திருந்தார். இதுதான் உலக சாதனையாக இருந்தது. ஆனால், குருவுடைய சாதனையை உடைத்து 60/60 என முழு புள்ளிகளையும் பெற்று புதிய உலக சாதனையை அங்கத் படைத்தார்.

பெரிய தொடர்களில் இந்தியாவுக்காக ஸ்கீட் ஹூட்டிங்கில் தங்கப்பதக்கம் வென்றுக்கொடுத்த முதல் வீரர் அங்கத்தே. ஆசிய சாம்பியன்ஷிப்பில் 2018 மற்றும் 2019-ல் தங்கம் வென்றிருந்தார்.

அணிகள் பிரிவிலும் ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றிருந்தார். கைரோவில் நடந்த உலகக்கோப்பையில் அணிகள் பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார். டெல்லியில் நடைபெற்ற உலகக்கோப்பையில் அணிகள் பிரிவில் இரண்டு தங்கப்பதக்கம் வென்றிருந்தார்.

ஆசிய போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற போதே டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதியும் பெற்றுவிட்டார்.

டோக்கியோவில் ஸ்கீட் ஷூட்டிங்கில் உறுதியாக பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமீபமாக அவருடைய பெர்ஃபார்மென்ஸில் சிறிய சறுக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

அங்கத் பாஜ்வா
அங்கத் பாஜ்வா
Angad's Twitter handle

சமீபத்தில் நடந்து இத்தாலி உலகக்கோப்பையில் 54 வது இடத்தையே பிடித்தார். இந்த சறுக்கலுக்கு முக்கியக்காரணமாக சில விஷயங்கள் கூறப்படுகிறது. அதாவது, டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு பிரத்யேகமாக தயாராகும் பொருட்டு தன்னுடைய உடல் எடையை குறைத்து அதற்கேற்ப துப்பாக்கியின் வடிவமைப்பில் செய்திருக்கும் புதிய மாற்றங்களே அவருடைய பெர்ஃபார்மென்ஸ் சறுக்கல் காரணமாக இருக்கிறது.

ஒலிம்பிக் தொடங்குவதற்குள் இந்த பிரச்சனையை அங்கத் எப்படியாவது சரி செய்துவிடுவார் என்றே கணிக்கப்பட்டுள்ளது. மேலும், 'ஒலிம்பிக் போட்டிகள் முழுக்க முழுக்க மனநிலை சம்பந்தப்பட்டது. அழுத்தமான சூழல்களை நீங்கள் எப்படி கையாளுகிறீர்கள் என்பதே முக்கியம் எனக் கூறி அந்த துப்பாக்கி விஷயமெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பது போல பாசிட்டிவ்வாக பேசியுள்ளார் அங்கத் பாஜ்வா. அங்கத் வைக்கும் குறி தடைகளை தாண்டி இலக்கை வெற்றிகரமாக அடைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்.

அங்கத் பஜ்வா பங்கேற்கும் போட்டி நாளை(25-07-2021) காலை 6.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு