Published:Updated:

தங்க மங்கைக்கு பிரத்யேக XUV700 பரிசளித்த ஆனந்த் மஹிந்திரா... நெகிழ்ச்சியில் அவனி லெஹ்ரா!

அவனி லெஹ்ராவுக்கு பரிசளிக்கப்பட்ட XUV700 ( twitter )

2020 பாராலிம்பிக் போட்டியில் தங்கமும் வெண்கலமும் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த அவனி லெஹ்ராவுக்கு மஹிந்திரா குழுமத்தில் இருந்து பரிசாக XUV700 அளிக்கப்பட்டுள்ளது.

தங்க மங்கைக்கு பிரத்யேக XUV700 பரிசளித்த ஆனந்த் மஹிந்திரா... நெகிழ்ச்சியில் அவனி லெஹ்ரா!

2020 பாராலிம்பிக் போட்டியில் தங்கமும் வெண்கலமும் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த அவனி லெஹ்ராவுக்கு மஹிந்திரா குழுமத்தில் இருந்து பரிசாக XUV700 அளிக்கப்பட்டுள்ளது.

Published:Updated:
அவனி லெஹ்ராவுக்கு பரிசளிக்கப்பட்ட XUV700 ( twitter )

அவனி லெஹ்ரா இந்தியாவின் தங்க மங்கை. 2020 டோக்கியோ பாராலிம்பிக்கில் 19 வயதில் இவர் நிகழ்த்திய சாதனை என்றைக்குக்கும் இந்தியர்கள் மனதில் நிறைந்து நிற்கும். ஆர்-2 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் 249.6 மொத்த புள்ளிகளைப் பெற்று இந்தியாவுக்கு தங்கத்தை வாங்கிக் கொடுத்ததோடு அது வரைக்கும் இருந்த உலக சாதனையையும் நேர் செய்தார். இந்தியாவையே நெகிழ செய்த அவனியை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார், ஆனந்த் மஹிந்திரா.

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா, அவனிக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட XUV 700 மாடல் கார் ஒன்றைப் பரிசாக அனுப்பி வைத்திருக்கிறார். அவனி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மஹிந்திரா ஆட்டோ நிறுவனத்திற்கும் ஆனந்த் மஹிந்த்ராவிற்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டிருக்கிறார். மேலும் அந்தப் பதிவில், "இது போன்ற கார்கள் ஒன்றுபட்ட இந்தியாவுக்கான மிகப்பெரிய முன்னெடுப்பு. இது போலான பல கார்கள் சாலைகளில் வலம் வருவதை நான் எதிர்பார்க்கிறேன்" என நெகிழ்ந்திருக்கிறார்.

ஆனந்த் மஹிந்திராவின் ட்வீட்
ஆனந்த் மஹிந்திராவின் ட்வீட்
twitter

"இந்தியாவிற்காக இரண்டு மெடல் பெற்று தந்த அவனிக்கு பிரத்யேகமாக இந்தக் காரை வடிவமைத்து வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம்" என்று Mahindra XUV700-ன் அதிகாரபூர்வ பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதனைப் பகிர்ந்த ஆனந்த் மஹிந்த்ரா 'நல்ல செயல்' என்று இதில் பங்கெடுத்த ஊழியர்களைப் பாராட்டியதுடன் "தங்களது தேராக ஏற்று XUV700 வாகனத்தைப் பெருமை சேர்த்ததற்கு நன்றி அவனி" எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய பாராலிம்பிக் கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் தீபா மாலிக் இந்தியாவின் ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் வைத்த சிறப்பு கோரிக்கை இங்கு குறிப்பிடத்தக்கது.