Published:Updated:

யூரோவில் ஃபின்லாந்து.. டென்னிஸில் சிட்சிபாஸ். ஐபிஎல்லில் டிரேட்விண்டோ?! #VikatanSportsRoundUp

#VikatanSportsRoundUp
Listicle
#VikatanSportsRoundUp

இது, கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணி பெறும் 10-வது இன்னிங்ஸ் வெற்றி. இந்த வெற்றியின்மூலம், கேப்டன் விராட் கோலி புதிய சாதனைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.


கிரிக்கெட் தொடங்கி தடகளம் வரை கடந்த வார விளையாட்டு உலக அப்டேட்ஸ் இங்கே... #VikatanSportsRoundUp


1
Finland Football

ஃபின்லாந்தின் 80 ஆண்டுக்கால கனவு! 

கால்பந்து விளையாட்டின் முக்கியமான தொடர்களில் யூரோ கோப்பையும் ஒன்று. 2020 ஜூலை மாதம் நடக்க இருக்கும் யூரோ கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. 10 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, மொத்தம் 55 அணிகள் போட்டியிடுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள், 2020 யூரோ கோப்பைக்குத் தகுதிபெறும். 

9 போட்டிகளில் விளையாடியுள்ள ஃபின்லாந்து அணி, 6 போட்டிகளில் வெற்றிபெற்று யூரோ கோப்பைக்கு  முதல் முறையாகத் தகுதிபெற்றுள்ளது. 1938-ம் ஆண்டு முதல்  தகுதிச்சுற்றுப் போட்டிகளில் பங்கேற்றுவரும் ஃபின்லாந்து அணி, 80 ஆண்டுகளில் முதல் முறையாகத் தகுதிபெற்றுள்ளது. ஃபின்லாந்து கால்பந்து அணியின் இச்சாதனையை, அணி வீரர்களும் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். 


2
Indian team

குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 12 பதக்கங்கள்

மங்கோலியாவில் நடைபெற்ற ஆசிய யூத் குத்துச்சண்டை தொடரில், இந்தியா 12 பதக்கங்கள் வென்றது.  வெவ்வேறு எடைப் பிரிவுகளில் பங்கேற்றிருந்த இந்திய மகளிர், 5 தங்கமும், 3 வெண்கலப்பதக்கங்களும் வென்றனர். ஆண்கள் பிரிவில், 2 வெள்ளியும், 2 வெண்கலப்பதக்கங்களும் கிடைத்தன.

மகளிருக்கான குத்துச்சண்டையில் சானு (51 கிலோ) , வின்கா (64 கிலோ), சானு (75 கிலோ), பூனம் (54 கிலோ), சுஷ்மா (81 கிலோ) ஆகியோர் தங்கம் வென்றனர்.


3
கோலி

தோனியின் சாதனையை முறியடித்த கேப்டன்  கோலி

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் வங்கதேச அணி, முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இந்தூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இதன்மூலம், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்தியா 1–0 என முன்னிலை வகிக்கிறது.

இது, கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணி பெறும்  10-வது  இன்னிங்ஸ் வெற்றி. இந்த வெற்றியின்மூலம், கேப்டன் விராட் கோலி புதிய சாதனைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இதுவரை, தோனி தலைமையிலான இந்திய அணி 9 முறை இன்னிங்ஸ் வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது. இப்போது, தோனியின் சாதனையை கோலி முறியடித்துள்ளார்.


4
Stephano Tsitsipas

டென்னிஸ் ஏடிபி ஃபைனல்ஸ் -  21 வயது சிட்சிபாஸ் சாம்பியன்

லண்டனில் நடைபெற்ற டென்னிஸ் ஏ.டி.பி ஃபைனல்ஸ் இறுதிப்போட்டியில், கிரீஸ் நாட்டைச் சேர்ந்த 21 வயது வீரர் ஸ்டெஃபனோ சிட்சிபாஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

முன்னணி வீரர்கள் ஜோக்கோவிக், நடால் ஆகியோர் டாப் நான்கில் தேர்வாகாத நிலையில், ரோஜர் ஃபெரடர் மட்டும் அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

அரை இறுதியில், ஃபெடரரை எதிர்கொண்ட சிட்சிபாஸ், 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் போட்டியை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இறுதிப்போட்டியில், ஆஸ்திரியாவின் டாமினிக் தியமுடன் மோதிய சிட்சிபாஸ், 6-7, 6-2, 7-6 என்ற செட் கணக்கில் போட்டியை வென்றார்.


5
IPL Trade window

ஐபிஎல் டிரேட் டிரான்ஸ்ஃபர் அப்டேட்ஸ்

2020 ஐபிஎல் தொடருக்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஆண்டுதோறும் நடைபெறும் டிரேட் விண்டோ இப்போது நடந்துமுடிந்துள்ளது.

இந்த முறைப்படி, ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் உள்ள வீரர்களை விடுவிக்கலாம் அல்லது தக்கவைக்கலாம். மேலும், மற்ற அணியிலிருந்தும் வீரர்களை வாங்கிக்கொள்ளலாம்.

இதில், மொத்தம் 73 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். தோனி, ரெய்னா, டுப்ளெஸ்ஸி, தாஹீர் என முக்கிய வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் தக்கவைத்துள்ளது. வீரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஐபிஎல் ஏலம், வரும் டிசம்பர் மாதம் 19-ம் தேதி தொடங்க உள்ளது.

டிரேட் விண்டோவுக்குப் பிறகு அணிகளிடம் இருக்கும் மீதித் தொகை.

டிரேட் டிரான்ஸ்ஃபர் ஆப்ஷன் மூலம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்த ரஹானே, இப்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார். மேலும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டனாக இருந்த அஷ்வினையும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வாங்கியுள்ளது.