Published:Updated:

வடசென்னை அவலம்: தேசிய குத்துச்சண்டை வீரர் இப்போது மூட்டை தூக்கும் தொழிலாளி!

ராஜேஷ் நடத்தும் பயிற்சி மையம்

ஒரு காலக்கட்டம் வரை, கௌரவ அடையாளமாக இருந்த குத்துச்சண்டை பிறகு வணிக வடிவெடுத்தது. முதலாளிகள், இரு பரம்பரையிலும் உள்ள வீரர்களை ஒப்பந்தம் செய்து, மோதவிட்டு, டிக்கெட் போட்டு விற்று காசு பார்த்தார்கள்.

வடசென்னை அவலம்: தேசிய குத்துச்சண்டை வீரர் இப்போது மூட்டை தூக்கும் தொழிலாளி!

ஒரு காலக்கட்டம் வரை, கௌரவ அடையாளமாக இருந்த குத்துச்சண்டை பிறகு வணிக வடிவெடுத்தது. முதலாளிகள், இரு பரம்பரையிலும் உள்ள வீரர்களை ஒப்பந்தம் செய்து, மோதவிட்டு, டிக்கெட் போட்டு விற்று காசு பார்த்தார்கள்.

Published:Updated:
ராஜேஷ் நடத்தும் பயிற்சி மையம்
வடசென்னைக்கு மிக நீண்ட குத்துசண்டை பாரம்பர்யம் உண்டு. சென்னை மாகாணத்தை ஆட்கொண்டு தங்கள் ஆளுமையை நிறுவிய வெள்ளையர்கள், பொழுதுபோக்குக்காக உழைப்பாளிகளை அணி பிரித்து சண்டையிடச் செய்து ரசித்தார்கள். போட்டி, வெற்றியென அதுவொரு கனவாக பற்றிப்படர்ந்தது.

1930களில் வடசென்னையின் மைதானங்கள் குத்துச்சண்டையால் கனன்றெரிந்தன. சுதந்திரத்துக்குப் பிறகு, குருகுலக் கலையாக மாறிய குத்துச்சண்டை இன்னும் வீரியமாக வடசென்னையில் வளர்ந்தெழுந்தது. சூளைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இடியாப்ப நாயக்கர் பரம்பரை என்றும், ராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சார்பெட்டா பரம்பரை என்றும் பிரிந்து நின்று மோதினார்கள். தர்மன், லெப்ட் மணி, ‘அக்கு’ துரை, தாஸ், எஸ்.ஏ. அருணாச்சலம், கே.சுந்தர்ராஜ், கித்தேரி முத்து, குப்புச்சாமி, டி.எம்.வீரப்பன், பலராமன், முனியாண்டி, ஆறுமுகம், டில்லிபாபு, வினாயகம், சண்முகம், மாணிக்கம், பத்தன், எல்லப்பன், கண்ணையா என ஏகப்பட்ட நட்சத்திர பாக்ஸர்கள் வடசென்னையின் அடையாளமாக உருவாகினார்கள்.

ராஜேஷின் மாணவர்கள்
ராஜேஷின் மாணவர்கள்

ஒரு காலக்கட்டம் வரை, கௌரவ அடையாளமாக இருந்த குத்துச்சண்டை பிறகு வணிக வடிவெடுத்தது. முதலாளிகள், இரு பரம்பரையிலும் உள்ள வீரர்களை ஒப்பந்தம் செய்து, மோதவிட்டு, டிக்கெட் போட்டு விற்று காசு பார்த்தார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜியெல்லாம் இந்த குத்துச்சண்டைகளுக்கு ரசிகர்களாக இருந்திருக்கிறார்கள். 1945ல் ராயபுரம் எட்டியப்ப நாயக்கர் பள்ளித்திடலில் ஒரு பப்ளிக் பாக்சிங் நடந்தது. 25 ஆயிரம் பேருக்கு மேல் ரசிகர்கள் திரண்டிருந்தார்கள். போட்டி உச்சத்தில் இருக்கும்போது, ரசிகர்கள் மாதிரி உள்ளே இருந்த சிலர் அரிவாள், கத்தி, சோடாபாட்டிலோடு உள்ளே இறங்கி ரகளை செய்தார்கள். பெருங்கலவரம் ஆகிவிட்டது. அதன்பிறகு, பப்ளிக் பாக்சிங் நடத்த தடை விதிக்கப்பட்டது. அதோடு குத்துச்சண்டை காலம் முடிவுக்கு வந்துவிட்டது. வீரர்கள் எல்லாம் வாழ்வாதாரம் தேடி வேறு வேலைக்குப் போகத் தொடங்கி விட்டார்கள்.

ஆனால் வடசென்னை இளைஞர்களுக்கு எக்காலத்திலும் குத்துச்சண்டை பெருங்கனவாகத்தான் இருக்கிறது. அப்படி உருவான சுயம்பு வீரன்தான் ராஜேஷ்.

ராஜேஷ்... ரயில்வே பார்சல் சர்வீஸில் தற்காலிக சுமை தூக்கும் தொழிலாளி... இவருக்கு இன்னொரு முகமும் இருக்கிறது... தேசிய குத்துச்சண்டை வீரர். ஜூனியர், சப் ஜூனியர், சீனியர் குத்துச்சண்டை போட்டிகளில் தமிழகத்தின் சார்பாக பங்கேற்றவர். காமன்வெல்த், ஒலிம்பிக் என தான் கண்ட கனவை அடுத்த தலைமுறைக்கு விதைத்துப் பயிற்றுவித்துக் கொண்டிருக்கிறார். ஓர் யுத்தக்களம் போல இயங்கிக்கொண்டிருக்கிறது, ராஜேஷின் பயிற்சி மையம்.
சென்னை, மூலக்கொத்தளம் இடுகாட்டை ஒட்டியிருக்கிற பூங்காவில் தகரத்தால் பிரிக்கப்பட்ட அகலமான அறைதான் ராஜேஷின் பயிற்சிக்களம்.

ராஜேஷ் நடத்தும் பயிற்சி மையம்
ராஜேஷ் நடத்தும் பயிற்சி மையம்

ராஜேஷின் அப்பா ஆட்டோ டிரைவர். அம்மா, பூ விற்கிறார். பத்தாம் வகுப்புதான் படித்திருக்கிறார் ராஜேஷ். குத்துச்சண்டை கற்றுக்கொள்ள விரும்பி பாக்ஸர்களைத் தேடி அலைந்து திரிந்த ராஜேஷை நேரு ஸ்டேடியத்தில் குத்துச்சண்டை பயிற்சியளித்த சக்திவேலும், முருகனும் சுவீகரித்துப் பயிற்சியளித்தார்கள்.
நல்ல ஷூவோ, பாக்ஸிங் பேடோ வாங்கி பயிற்சி பெறவியலாத வறுமையில் இருந்த ராஜேஷ்க்கு முருகனும் பிற நண்பர்களும் உதவினார்கள். தேசியப் போட்டிகள் வரை எட்டிப்பிடித்த ராஜேஷ்க்கு அதன்பிறகான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. . பரிந்துரை, ஆதரவு, உதவி என பல தடைகள்... ஒரு கட்டத்தில் போட்டிக்களத்திலிருந்து வெளியேறிவிட்டார். கனவுகள் பொய்க்க, சென்னை சென்ட்ரல் பார்சல் சர்வீஸில் தற்காலிக கூலியானார் ராஜேஷ்.

தன் கனவு பொய்த்துப் போனதில் சோர்ந்து போகவில்லை ராஜேஷ்... அவரைப்பற்றி முழுமையாக அறிந்துகொள்ள கீழேயிருக்கும் வீடியோவைப் பாருங்கள்!