Published:Updated:

Viral Video: இந்தியா தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்திற்குள் புகுந்த பாம்பு!

மைதானத்தில் பாம்பு

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான 2வது டி20 போட்டி நடைபெறும் மைதானத்திற்குள் பாம்பு புகுந்ததால் ஆட்டம் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.

Viral Video: இந்தியா தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்திற்குள் புகுந்த பாம்பு!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான 2வது டி20 போட்டி நடைபெறும் மைதானத்திற்குள் பாம்பு புகுந்ததால் ஆட்டம் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.

Published:Updated:
மைதானத்தில் பாம்பு

மழை போன்ற காரணங்களால் விளையாட்டு போட்டிகள் நிறுத்தப்பட்டிப்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். இதற்கு முன் நாய் மற்றும் தேனீக்கள் போன்றவற்றாலும் கூட விளையாட்டு போட்டிகள் தடைப்பட்டிருக்கிறது. ஆனால் முதல் முறையாக ஒரு பாம்பால் விளையாட்டு போட்டி நிறுத்தப்பட்டிருக்கிறது.

அசாம் மாநிலத்தின் கவுஹாத்தி நகரில் உள்ள மைதானத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் இடையே 2-வது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீசியது. இதனையடுத்து, ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

கே.எல் ராகுல் பவுண்டரிகளை விரட்டி ரன்களை குவித்தார். இதே போன்று ரோகித் சர்மாவும் தனது 400வது டி20 போட்டியில் சிறப்பாக விளையாடினார். அப்போது ஆட்டத்தின் நடுவே திடீரென்று பாம்பு ஒன்று மைதானத்திற்குள் நுழைந்தது. அதனால் ஆட்டம் சில நிமிடங்கள் தடைப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து மைதான ஊழியர்கள் அந்த பாம்பை அப்புறப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் ‘என்ன பாம்பெல்லாம் கிரிக்கெட் விளையாட வருது ?’ ‘அடுத்து களம் இறங்க போவது பாம்பு’ என்றும் விமர்சித்து வருகின்றனர்.